இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி

படம்
உடனடி நினைவு எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார்.

நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்

படம்
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

பிரபஞ்சன் :நினைவலைகள்

படம்
  அகல்யாவை மேடையேற்றியபோது ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்றவுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. அந்நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

கொள்கைகளும் விலகல்களும்: புதியமாதவியின் வட்டமும் சதுரங்களும்

படம்
பெண்ணியம் இன்று இரண்டு நிலைப பட்டது. பரவலாக அறியப்படுவது அதன் செயல்நிலை(Activism). சமூகத்தின் இருப்பை உணரும் நிறுவனங்களான குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், கேளிக்கை மற்றும் சடங்கு நிகழ்வுகள் என ஒவ்வொன்றிலும் பெண்களின் இடத்திற்காகவும் இருப்புக்காகவும் குரல்கொடுப்பதும், போராடுவதும், சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதுமான செயல்பாடுகளே செயல்நிலை வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இச்செயல்நிலைகளுக்கான கருத்தியல் வலுவை உருவாக்குவது கோட்பாட்டுநிலை(Theory). பெண்ணியத்திற்கான கோட்பாட்டு நிலையை உருவாக்கிட உதவிய இன்னொரு கோட்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அது மார்க்சியமாகவே இருக்கும்.

சர்கார்: கலைத்துவம் கலைக்கும் அலை

படம்
பத்துப்பத்து நாட்கள் இடைவெளியில் புதுவரவுச் சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நேர்ந்துள்ளது. நேர்ந்துள்ளது என்பதைவிட நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். தானாக உருவாகவில்லை; தமிழ்ச் சினிமாவின் பரப்பு வெவ்வேறு சங்கங்களின் வழியாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதின் பின்னணியில் இந்த நெருக்கடி உருவாகியிருக்கிறது. எந்தவொரு சினிமாவையும் ‘பார்க்க வேண்டிய சினிமா’ என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் பல காரணிகள் இருக்கின்றன. அக்காரணிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்றன.

தொகை நூல்கள் தரும் வாசிப்பு அனுபவம்

படம்
இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பொன்று செய்யப் போகிறேன். அதற்கு நீங்கள் ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட உடனேயே ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் தனியொரு எழுத்தாளரின் கதைகள் அடங்கிய தொகுப்புகளை வாசிக்கும் வேகத்தைவிடப் பலரின் கதைகள் அடங்கிய தொகைநூலில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும் விருப்பம் எப்போதும் உண்டு. அப்படியான தொகைநூல்களை வேகமாகவும் வாசித்துவிடுவேன். இப்போது காப்பு எனப் பொதுத் தலைப்பிட்டு ஈழவாணி தொகுத்துள்ள இப்பெருந்தொகுப்பை வாசித்த அனுபவத்தைத் தான் இங்கே முன்னுரையாக எழுதப் போகிறேன்.

ஷங்கர்: பிரமாண்ட புனைவுகள்

தமிழக முதல்வரிடம் “முதலமைச்சா் பொது நிவாரண நிதி“க்காக ரூ. 3 லட்சமும், ஒரிசா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சமும் வியாழக்கிழமை வழங்கினார். “முதல்வன் பட இயக்குநா் ஷங்கர். புகைப்படத்துடன் இச்செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ் (26. 11. 1999) இக்குறிப்பில் முதல்வன் என்பது மட்டும் ஒற்றை மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருந்தது. இதன் மூலம் தினமணி தனது வாசகா்களுக்கு உணா்த்த விரும்பிய குறிப்பு ஒன்று உண்டு.ஷங்கரின் சமீபத்திய படமான முதல்வன் திரைப்படத்தை பார்க்காத வாசகா்களுக்கு அந்தக் குறிப்பு போய்ச் சோ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முதல்வன் படத்தைப் பார்த்துள்ள வாசகா்களுக்கு அதன் குறிப்புத் தரும் அா்த்தங்கள் புரிந்திருக்கலாம். அந்தக் குறிப்பு தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் இடையேயுள்ள உறவையும் முரணையும் விளக்கிக் காட்டும் அா்த்தங்கள் சார்ந்தது. அந்த அா்த்தங்களை ஒற்றை மேற்கோள் குறிப்பு மூலம் விளக்கிவிட முடியும் என தினமணி நினைத்துக் கொண்டதுதான் ஆச்சரியம், முதல்வன் படத்தை ஈடுபாட்டோடு பார்த்து, ஷங்கரின் சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த வாசகனுக்கு – பார்வையாளனுக்கு – இப்போதைய

பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்

படம்
  ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை'  என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

விளையாட்டும் சினிமாவும்

அமீர்கானின் “ தங்கல்/ யுத்தம்” பார்த்தவுடன் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த “எம்.எஸ்.தோனி”யும் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ”இறுதிச்சுற்று”ம் நினைவுக்கு வந்தன.

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்

படம்
தனது முதல் படம் “அழகி” கவனிக்கப்பெற்றதும் வணிக வெற்றி அடைந்ததும் தங்கா்பச்சானின் பொறுப்பைக் கூடுதலாக்கிவிட்டன. உணரப்பட்ட பொறுப்பு; இரண்டாவது படமாக – சொல்ல மறந்த கதையாக வெளிவந்துள்ளது. அதே பாணியில், அதே வைராக்கியங்களுடன், அதே அளவு புத்தசாலித்தனத்துடன். அவா் பிறந்த மணிமுத்தா நதிதீரமும், அதன் செக்கச் சிவந்த மண், அங்கே மிதிபடும் பலாப்பழம், அசையும் முந்திரிக்கொல்லை, தோட்ட விவசாயம், அதில் உழலும் விவசாயிகள், கூலிகள், விவசாயத்தோடு வியாபாரத்தையும் அறிந்த சிறு குழுவினா், இவா்களுக்கிடையே வாழ விரும்பினாலும் வெளியேற வேண்டிய கட்டாயத்திலிருக்கும் படித்த இளைஞன் எனத் தன் கதையைத் தெரிவுசெய்து கொண்டுள்ளார் தங்கர்பச்சான்.

நூல்கள் - இதழ்கள் -மொழி

மாயைகள் : ஒன்று இன்னொன்றாய் நிலவெளிப்பயணம் விளையாட்டை எழுதும் மொழி விளையாட்டு நன்றி கல்யாண்ஜிக்கு பாராட்டுகள் ஜோதிக்கு மாயைகள் : ஒன்று இன்னொன்றாய்

தாயை எழுதிய மகள்:கவிதா சொர்ணவல்லியின் அம்மாவின் பெயர்

படம்
அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகுகாலத்துக்குத் தெரியாது. எனக்கு அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா என்பதைத் தவிர. ‘வாட் இஸ் யுவர் ஃபாதர் நேம்? என்ற கேள்விகளினால் அப்பாவுக்குப் பெயர் உண்டு என்பது நன்றாகவே தெரிந்து இருந்தது. அம்மாவைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். ஆனால் அடிக்கடி கேட்டு நினைவில் பதியவைத்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ந.முத்துசாமி-புஞ்சைக்கும் புரிசைக்குமிடையே அலைந்த மனம்

படம்
தற்செயலான ஒத்துப்போகும் ஒன்று’ என விட்டுவிடத் தக்கதுதான் என்றாலும் சொல்லவேண்டிய ஒன்று. உறவினர்களின், நண்பர்களின் மரணச்செய்திகள் வருவதற்குச் சற்று முன்போ, வரும் நேரத்திலோ மரணிப்பவர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பது நடக்கிறது. மரணம் குறித்த மனத்தின் முன்னறிவிப்பில் பெரிதான அமானுஷ்யம் ஒன்றும் இல்லையென்றாலும் முன்னுணர்த்துவது அச்சமூட்டும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

எட்டுக்கால் பூச்சியும் இரண்டு கால் மனிதனும்.

அன்று புதன் கிழமை. அதனால் முந்திய நாளும் வேளை நாள் தான். ஒருவேளை இன்று திங்கட்கிழமையாக இருந்தால் எங்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு இரண்டு நாள் ஒய்வு இருந்திருக்கும். இந்த இரண்டு நாளில் எட்டுக்கால் பூச்சிக்கு இது சாத்தியம் தானா? என்ற கேள்விக்குள் என் மனம் இறங்கியிருக்காது. அதனால் எனது கவனம் அதன் மேல் படாமல் கூடப் போயிருக்கும்.

நவீன நாடகமும் தலித் நாடகமும்

நாடகம் என்றால் என்ன?  “ராமசாமி கந்தசாமியாக நடிப்பதை முத்துசாமி பார்த்துக் கொண்டிருப்பது தான் நாடகம். நாடகத்தை அதன் மற்ற அலங்காரங்களையெல்லாம் களைந்துவிட்டு சாராம்சமான விஷயம் எது என்று பார்த்தால் இது தான் நாடகம்“  நான் வாசித்த நோ்காணல் ஒன்றின் முதல் கேள்வியும் அதற்கான பதிலின் தொடக்கமும் இது. (நோ்காணல் செய்யப்பட்டவர்; கே. எஸ். ராஜேந்திரன், டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா், இந்நாள் ஆசிரியா். நோ்காணல் செய்தவா்; சி. அண்ணாமலை, பத்திரிகையாளா்) இதில் பதிலை விடவும் கேள்வியை முக்கியமானதாகக் கருதவேண்டியுள்ளது.

தரமான பொழுதுபோக்குப்படங்கள்

படம்
96 : கடந்த காலத்துக் காதலின் அலைவுகள் பார்க்கும் சினிமா ஒவ்வொன்றையும் அதற்குள் பேசப்படும் கருத்தியல் சார்ந்த விவாதப் புள்ளிகளைக் கண்டறிந்து - அதன் எதிர்மறை X உடன்பாட்டுநிலைகளை முன்வைத்துப் பேசபவனாக மாறிப்போனேன். அதனால் கருத்தியல்களைத் தாங்கும் காட்சிகள், வசனங்கள், பின்னணியின் இசைக்கோலங்கள், வண்ணங்கள், நகர்வுகள், காட்சிப்படுத்தப்படும் தூரம், நெருக்கம் எனத் திரைமொழியின் கூறுகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் வழியாக உருவாக்கப்படும் முன்வைப்புகள் என்னென்ன நோக்கங்கள் கொண்டன; பார்வையாளத்திரளை எந்தப் பக்கம் திருப்பும் வல்லமைகொண்டன எனப் பேசிப்பேசி எனது சினிமா குறித்த பதிவுகளுக்கொரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அச்சொல்லாடல்களுக்கு வலுச்சேர்ப்பதற்காகச் சில படங்களின் நிகழ்வெளியை முதன்மாக முன்வைத்து விவாதிப்பதுண்டு. சில படங்களின் காலப் பிண்ணனித் தகவல்களைத் திரட்டி விவாதித்ததுண்டு. சில படங்களின் இயக்குநர்களின் -நடிகர்களின் - தயாரிப்பு நிறுவனங்களின் புறத்தகவல்களின் வழியாகவும் விவாதித்ததுண்டு. இப்படி விவாதிப்பது சினிமாவைப் பார்ப்பதற்கான - திரள்மக்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கான ஒரு கோணம்

வாரிசுகளின் அரசியல்: வாரிசுகளின் சினிமா

படம்
  ’நடிகா் விஜய் நடித்த “ஆதி“ படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்ற முணுமுணுப்புகள் திரை அரங்க உரிமையாளா்களிடமிருந்தும் திரைப்பட விநியோகஸ்தா்களிடமிருந்தும் எழுந்ததையும் அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஏ. சந்திரசேகர் தந்த புள்ளி விவரங்களையும் விளக்கங்களையும் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை:புதிய களம்- புதிய மொழி

படம்
முன்குறிப்பு: · சினிமா பார்ப்பதில் எனது விருப்பமான காட்சிநேரம் எப்போதும் இரண்டாம் ஆட்ட நேரம்தான். எனது இரண்டாம் ஆட்டம் என்பது நகரவாசிகளின் இரண்டாம் ஆட்டமல்ல. கிராமத்துக் கீற்றுக்கொட்டகையின் இரண்டாம் ஆட்டம். இரவு 10 மணிக்குத் தொடங்கி நடு இரவுக்குப் பின் முடியும் காட்சி. படிப்புக் காலத்தில் விடுதிக்காப்பாளர்களுக்குத் தெரியாமல் மதில் தாண்டிப் பார்த்த சினிமாக்காட்சிகளின் நேரம் அது. இப்போதும் அது தொடர்கிறது.

அந்தப் போட்டியில் நானும் இருந்தேன்.

அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன் அவர்களைத் தெரிவுசெய்து நியமித்திருக்கிறார் தமிழக ஆளுநர். துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். 

பாலா: நம்பிக்கையூட்டுதலின் மறுபக்கம்

படம்
படைப்பு அல்லது கலை யாருக்குப் பயன்பட வேண்டும்? என்ற வினாவிற்கு “வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு“ என்று சொல்லப்படும் விடையில், சொல்பவரின் சார்புநிலை வெளிப்படுவதில்லை. அதற்கு மாறாக, “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே“ என்பதாகப் பதில் சொன்னால் அவா் இடதுசாரி என அறியப்படலாம். “தனிமனிதனின் மன விசாரணைக்கும் விரிவுக்குமே கலை இலக்கியங்கள்“ என்று சொன்னால் அவரை வலதுசாரி என அடையாளப்படுத்தலாம். ஆனால் “படைப்பு யாருக்குச் சொந்தம்…….? என்ற வினாவிற்கு வலதுசாரியும் இடதுசாரியும் தருகின்ற விடை ஒன்றுதான் “படைப்பு படைப்பாளிக்குச் சொந்தம்“ என்பதுதான் அந்தப் பதில்.

வித்தியாசங்களில் மிளிர்கின்ற வானவில்

படம்
“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக்கொண்டும் மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத்தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையும் நானும்

படம்
‘அதிகப்படியான தயாரிப்பு செலவு - அதற்கேற்ப லாபம்‘ என்கிற வியாபாரப் பிரக்ஞைகள் கொண்ட தமிழ்த் திரைப்பட இயக்குநா்களின் காலமீது; வியாபார வெற்றிப் படங்களைத் தந்துள்ள ‘ஷங்கரின்‘ சமீபத்திய ‘ஜீன்ஸ்‘ படத்தைப் பார்த்த பிறகு, திரும்பவும் ‘ஜென்டில் மேனை‘ யும் ‘காதலனை‘ யும் பார்க்க விரும்பியது மனம். கனவு நிலைப் புனைவுக் கூறுகளை (Elements of Fantasy) அதிகமாகவும், அதனை ஈடு செய்யும் விதத்தில் நடப்பியல் தளத்தையும் விகிதப்படுத்துவதில் ஷங்கரின் வெற்றி இருப்பதாகச் சொல்லி விடலாம். நடப்பியல் தளத்தை மிகவும் சரியாக - இன்னும் சொல்வதானால் குறிப்பான தமிழ்ச் சாதீய அடையாளங்களோடு தருகின்றார் என்பதுவும்கூட அவரது வெற்றியின் பின்னணிகள்.

நாசா்: அவதாரம் தரிக்கும் தேவதைகளுடன் ஒரு நடிகன்

படம்
நடிப்பிலிருந்து இயக்குதலுக்கு ஒரு நடிகனின் சிறந்த நடிப்புக்காகவே நாடகம் பார்த்த ரசனை நமது கிராமங்களில் இருந்துள்ளது? தேவதையில் இரண்டு தமிழ் நடிகர்கள் (நாசர், விஜய்) தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளதை ரசிக்கவிடாமல் தடுப்பது எது? நடிப்பில் இரண்டு விதங்களைப் பற்றி கோட்பாட்டாளா்கள் சொல்லுவார்கள். ஒன்று பிரக்ஞைபூர்வ (Conscious Acting) நடிப்பு; இன்னொன்று ஈடுபாட்டு நடிப்பு (Involved Acting) ஒரு பிரக்ஞை பூர்வமான நடிகன் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை வெளிக்கொணர முயல்வான். தேவதையில் சசாங்கனாக வரும் நாசரைப் போல. ஈடுபாட்டு நடிப்பைப் பின்பற்றும் நடிகன் விஜயைப் போல கதாபாத்திரமாக மாறிவிடுவான். இப்படியெல்லாம் கோட்பாடுகளுக்கு உதாரணம் சொல்லும் தமிழ் நடிகர்களைப் பாராட்டும் தமிழ் ரசிகா்கள் இல்லையென்றால் தமிழ்ச் சினிமாவில் மாற்றங்களை எதிர்பார்த்தல் இயலாது.

தமிழில் நாடக எழுத்தும் பார்வையாளா்களும்

படம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய பத்தாண்டுகளாகக் கொள்ளலாம். அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிப்போய் இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்படலாம். அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம். சிலருக்குத் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தொடக்கமான செவ்வியல் பாடல்களே கூட ‘நேற்றைய‘ இலக்கியங்களாகத் தோன்றலாம். இக்கட்டுரை இந்தக் காலப்பரப்பிற்குள் - காலம் என்ற சொல்லாடலுக்குள் புகுந்து கால விரயம் செய்ய விரும்பவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளைத் தொடக்கப் புள்ளிகளாகத் கொண்டு தமிழ்நாடக எழுத்தின் வரலாற்றை - அவ்வெழுத்துப் பிரதிகள் பார்வையாளா்களோடு எப்படி உறவு கொண்டன என்பதைப் பேசலாம் என்று திட்டமிட்டுக் கொண்டுள்ளது.

எதிர்மறை விமரிசனத்தின் பின்விளைவு

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமரிசனக்குறிப்பு ப.தெய்வீகனின்”உச்சம்” கதையை உடனடியாக வாசிக்க வைத்துவிட்டது.நீண்ட காலப் போரின் -புலம்பெயர் வாழ்வின் - உளவியல் நிலைப்பாடுகளை எழுதிப்பார்க்கும் தெய்வீகனின் இன்னொரு கதை என்ற அளவில் வாசிக்கத்தக்க கதை. புலம்பெயர் தேசங்களின் வாழ்முறை தரும் சுதந்திரத்தை - வாய்ப்புகளை - மரபான தமிழ்க்குடும்ப அமைப்புகளிலிருந்து விலகியவர்கள் சோதித்துப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்துவிட வாய்ப்புகளுண்டு. இக்கதையின் எண்ணவோட்டங்களும் நிகழ்வுகளும் இந்தியச் சூழலில் - இலங்கையின் சூழலிலும்கூட அரியன. வெளியில் சொல்லப்படக்கூடாதன. 

கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்

படம்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. 

ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் : திலகவதியின் போன்சாய்ப் பெண்கள்

படம்
உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் துளிர்விட்டது. அடுத்த நூற்றாண்டில் அவை வேலை வாய்ப்பு, பொதுவெளி உரிமைகள், வாக்குரிமைகள் என நகர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய உருவாக்கத்திலும் விமரிசனத்திலும் தடம் பதித்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஓரளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் பெண்ணிய இயக்கங்கள் தங்களை வலுவான தரப்பாக நிலைநிறுத்திக்கொண்டன. 1960-களில் முழுமை பெற்ற பெண்களின் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களின் நேரடி விளைவாகவே பெண்ணியத் திறனாய்வும் வலுப்பெற்றது. 

அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……

படம்
· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து  உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….?  இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை (Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.

சேரனும் தங்கரும்: ஆண் மைய சினிமாக்காரா்கள்

படம்
சொல்லமறந்த கதை – நாவலாசிரியா் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்களின் திரைப்பட வடிவம். திரைப்பட வடிவமாக்கி நெறியாள்கை செய்ததுடன் ஒளி ஓவியம் செய்தவர் தங்கா்பச்சான். தங்கா்பச்சான், ஒளிப்பதிவுத் தொழில் நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்து, தனது சிறுகதையான கல்வெட்டை, “அழகி” என்னும் படமாக இயக்கி நெறியாள்கை செய்து அதன் மூலம் தனது திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என அடையாளம் காட்டியவா். தனது சினிமா, வியாபார வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருக்காது; வாழ்க்கையினூடான பயணமாக இருக்கும் எனப் பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டவா். அவா் எடுத்த சொல்லமறந்த கதையும் அதிலிருந்து விலகிவிடவில்லை. இப்பொழுது அவா் நெறியாள்கை செய்த மூன்றாவது படமான “தென்றல்“ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.

மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்

படம்
மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம். 

தமிழ் இலக்கிய விமர்சகர்கள்: இற்றைப்படுத்துதல்

படம்
1979 இல் சுவடு இதழ் தனது நான்காவது இதழை விமரிசனச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

தேர்வின் மொழி

  அண்மையில் தென்மாவட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகத்திற்கெதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் . தொடக்க நிலையில் தங்கள் கல்லூரிகளின் வாசல்களில் ஆரம்பித்த போராட்டம் உடனடியாகப் பல்கலைக்கழக வாசலை நோக்கித் திரும்பியது . மொத்தமாகத் திரண்டுபோய்ப் பல்கலைக்கழக வாசலை முற்றுகையிட்டார்கள் . வழக்கம்போல பல்கலைக்கழக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது . ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை .

எஸ். ஜே. சூா்யா :தீராத விளையாட்டுப்பிள்ளை

படம்
தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அதன் பார்வையாளா்களிடம் விளம்பரங்கள் கொண்டுபோய்ச் சோ்க்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் விளம்பரத்திற்கும் பணத்தைச் செலவிடுகின்றன. படம் எப்படிப்பட்டது என்பதைப் பார்வையாளா்களுக்குக் கோடி காட்டி அறிமுகப்படுத்தும் விதம் அந்த விளம்பரங்களில் வெளிப்படும். அவற்றைப் பார்க்கும் பார்வையாளா்கள் அந்தப் படம் தாங்கள் பார்க்க வேண்டிய படம்தானா? என்று முடிவுசெய்து கொண்டு திரையரங்குகளுக்குச் செல்வார்கள்.

தமிழியல் ஆய்வு என்னும் பன்முகம்

படம்
தமிழ் ஆய்வு, இயல் என்னும் சொல்லை இடையில் இணைத்துக்கொண்டு தமிழியல் ஆய்வு என்னும் சொற்சேர்க்கை செய்ய நினைக்கும்போது அதன் தளங்கள் பலதரப்பட்டனவாக, அதன் நிலைகள் பலபரப்புகளில் விரிவனவாக ஆகின்றன. தமிழ் பற்றிப் பேசும் ஒரு நிறுவனம் எப்போது தனது பேச்சுகளை விரிக்க நினைக்கின்றதோ, அப்போது அந்நிறுவனச் சொல்லாடல்கள் தமிழ்ச் சொல்லாடல்களாக இல்லாமல் தமிழியல் சொல்லாடல்களாக மாறுகின்றன.

விளையாட்டுகள்: கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் .

என்னைத் தீவிரமான விளையாட்டுக்காரன் என நினைத்துக்கொள்ளவில்லை என்றாலும் விளையாட்டு விரும்பி என்றே நம்புகிறவன்.சொந்த ஊரில் கபடி அணி உருவாக்கி உசிலம்பட்டி வட்டத்திலிருந்து அடுத்த வட்டமான தேனிக்குச் சென்று திரும்பியதுண்டு. பள்ளியில் விளையாண்ட விளையாட்டுகள் கால்பந்தும் கிரிக்கெட்டும்.

இருவரில் ஒருவர் : சூடாமணியின் அந்நியர்கள்

படம்
பெண்ணெழுத்தின் நிகழ்வெளிகளில் முதன்மையானது குடும்பவெளி. பாலினம் சார்ந்த ஒடுக்குமுறை நிலவும் நுண் அமைப்பாக இருப்பது குடும்பவெளிதான் என்ற அடிப்படையில் குடும்ப அமைப்பே தொடர்ந்து விவாதப்பொருளாகப் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்ப வெளிக்குள் பெண் x ஆண் என்ற பாலின முரண்பாட்டைக் கட்டமைத்து எதிர்நிலைச் சொல்லாடல்களால் ஆணின் இருப்பும் இயக்கமும் பெண்ணை இரண்டாவதாக உணரச்செய்கிறது என்ற முடிவை நோக்கி நகர்த்திச் செல்வது எளிது என்பதால் கூடக் குடும்பவெளியைக் கதைப்பரப்பாகத் தெரிவுசெய்வது முதன்மை பெற்றிருக்கலாம். 

திருப்பத்தூரில் நாடகவிழா:நவீனத்தமிழ் அரங்கவியல் : தொடரும் சில செயல்பாடுகள்

பிரித்துப்பிரித்து விளையாடுவது நவீனத்துவத்தின் மூன்றாவது விதி. முதல் இரண்டு விதிகள் என்னென்ன என்று கேட்கவேண்டாம். அவைபற்றி இங்கே எழுதப் போவதில்லை. எழுதவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. ‘நவீன’ என்ற முன்னொட்டோடு இயங்கத் தொடங்கிய தமிழ்க் கலை. இலக்கியச் செயல்பாடுகள் தொடர்ச்சியாகப் பிரிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டிலிருந்து அரங்கவியல் மட்டும் தப்பித்துவிடும் எத்தணத்தோடு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நவீன நாடகம் பலமாகத் தேய்ந்தும் கொஞ்சமாகத் தீவிரப்பட்டும் தொடர்கின்றது. இந்நிலை தமிழின் பலமோ.. பலவீனமோ அல்ல. அரங்கவியலின் பலமும் பலவீனமும்.

நாடகக் கலை: ஆய்வுகளும் அடிப்படை நூல்களும்

நவீன அரங்கியலின் பயணங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தமிழில் நாடகக் கலையைக் கற்பிப்பதற்கான அடிப்படையான நூல்கள் இல்லை என்ற உண்மையும் வந்துபோனது. தமிழை இயல், இசை, நாடகம் எனப் பிரித்துப் பேசும் நாம் அவற்றை முறையாக க்கற்றுக்கொள்ளத் தேவையான அடிப்படை நூல்களை உருவாக்கியிருக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தொல்காப்பியம் போன்றதொரு இயல் தமிழ் வரைவிலக்கண நூலை அதன் அர்த்தத் தளங்களில் கற்பிக்காமல் கைவிட்ட பெருமையுடையது தமிழ்க் கல்வியுலகம். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் அப்படியான நூல்கள் தேவை என்பதைக் கூட உணர்த்தமுடியவில்லை. 

மகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி

படம்
நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு அரசியல் கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறைத் தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. மனிதத் தன்னிலையின் அடையாளமாக- பரிமாணங்களாகச் சொல்லப்படும் உடலியல், சமூகவியல், உளவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள எல்லாப் பெண்களும் அப்படிக் கடந்துவந்துவிட்டார்கள் என்று தடாலடியாக ஒருவர் மறுக்கலாம். ஆனால் பெண்களால் முடியாத பரப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முன்மாதிரிப் பெண்களை உலகம் பரவலாகக் கண்டுவிட்டது. 

நமது கிராமங்களும் நமது நகரங்களும்

படம்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

தமிழ் நாடகங்கள் நவீனமான கதை

படம்
"தமிழர்களாகிய நாம் ‘நவீனம்’ என்பதை ஐரோப்பாவின் அனைத்து அர்த்தங்களோடும் உள்வாங்கிக் கொண்டோம் என்பதில்லை"

வன்முறையை மோகிக்கும் அரசியல் சினிமா: அந்நியன்

படம்
“கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா கேப்பவனுக்கு மதியெங்க போச்சு“ என்பது தமிழ் நாட்டுக் கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. இந்தப் பழமொழி ஷங்கரின் ’அந்நியன்’ படத்துக்குப் பொருத்தமானது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ஷங்கர் தமிழ்நாட்டில் கிராமங்கள் இருக்கிறதா? கிராமத்திலும் மனிதா்கள்தான் வாழுகிறார்களா? என்று கேட்கக்கூடும்.

கனவான்களின் பொதுப்புத்தி

படம்
“திறமைகளை மதிக்காத சமூகம் கிரிமினல்களை உருவாக்குகிறது“ – தத்துவார்த்தச் சொல்லாடல்களில் ஒன்று. மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள் விரும்பிய துறையில் ஈடுபட முடியாத நிலையில் (இன்றைய சூழ்நிலையில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களுக்கு உரிய இடம் மறுக்கப்படுவதில்லை) ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தாய் தன் உயிரைப் பணயம் வைத்து லஞ்சம் கொடுத்தும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது இன்னொருவன் கிரிமினலாகிறான். கிரிமினலானது எல்லாருக்குமான கல்விச் சாலையை உருவாக்கத்தான் (திறமையானவா்களுக்கு முன்னுரிமை கொடுக்க அல்ல) இது “ஜென்டில்மேன் படத்தின் கதை”.

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

இரண்டு மாத இடைவெளிக்குள் இந்த ஆறு சிறுகதைகளும் வாசிக்கக் கிடைத்தன.புலம்பெயர்ந்த எழுத்து அல்லது அலைவுறு மனங்களின் வெளிப்பாடு என்னும் அடையாளத்துக்குள் நிறுத்தத்தக்க இந்த ஆறுகதைகளில் ஆகச்சிறந்த கதை எது எனத் தேர்வு செய்யும் நோக்கம் கொண்டதல்ல இந்தக் கட்டுரை. அதேநேரத்தில் அப்படியொரு தொனி வெளிப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்பதையும் முதலிலேயே சொல்லி விடலாம். ஆறுகதைகளில் மூன்று கதைகள், காலம் இதழின் 51 -வது இதழில் வாசிக்கக் கிடைத்த கதைகள். அடுத்த மூன்று. அம்ருதா இதழில் வாசிக்கக்கிடைத்த கதைகள். அவை:

மெல்லினமும் வல்லினமும்

“இந்தியப்பொருளாதாரம் நிதானமாக இல்லை; வீழ்ச்சியை நோக்கிப் போகிறது” என்கிறார்கள் இப்போது. அப்படிச் சொல்பவர்கள் சிலவகைப் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை நம்பச் செய்யும்படியான புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எனக்குத் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்க்கும் அந்த விளம்பரம் தான் நினைவுக்கு வரும். ‘’ நான் வளர்கிறேனே மம்மி’’ என்று சொல்லி விட்டு ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்பான். அந்த வளர்ச்சியை மனதுக்குள் ரசிக்கும் அவனது தாய் வளர்ச்சிக்குக் காரணமான மென்பானத்தைக் கையில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து சில ஆண்டுகள் அந்தப் பானத்தைக் கொடுத்து வரும் அன்னைக்குத் தன் மகனின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அந்த பானம்தான் என்ற நம்பிக்கை உண்டாவது இயல்பான ஒன்றுதான். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அந்தப் பானத்தில் இருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை விட அவனது வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருப்பதும் சாத்தியம்

ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்- தவமாய் தவமிருந்து, சண்டைக்கோழி

படம்
தமிழ் சினிமாவில் தமிழின் அடையாளங்கள் வெளிப்படுவதில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் குற்றச் சாட்டு அல்லது நிலவும் விமரிசனம். விமரிசனம் செய்பவா்களிடம் பலநேரம் வெளிப்படுவது கோபமாக இருக்கிறது. இல்லையென்றால் கவலையாக இருக்கிறது. கோபப் படுகிறவா்களுக்குத் தேவை சாந்தப்படுத்துதல்; கவலைப் படுகிறவா்களுக்குத் தேவை ஆறுதல். தேவையானவா்களுக்கு தேவையானவற்றைத் தருவது நமது தமிழ் சினிமா இயக்கநா்களின் பணியும் கடமையும். அடுத்தடுத்து இரண்டு இயக்குநா்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனா். இயக்குநா் சேரன் தனது ’தவமாய் தவமிருந்து’ மூலம் தருவது சாந்தம்; லிங்கு சாமியின் ’சண்டைக்கோழி’ தர நினைப்பதோ ஆறுதல். ஆனால் ஆபத்துக்களுடன்.

துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்

படம்
  தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:  பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

படம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது.  வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்க

படம் தரும் நினைவுகள்: 1

படம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன்.

படம் தரும் நினைவுகள் -3

படம்
இந்தப்படம் எடுத்த ஆண்டு 2000 அல்லது 2001 ஆக இருக்க வாய்ப்புண்டு. திருநெல்வேலி பாளையங் கோட்டையில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரில் இருக்கும் எம். எல்.பிள்ளை நகரில் குடியிருந்த காலம். தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளையைத் திருநெல்வேலிக்காரர்கள் எம்.எல். பிள்ளையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீண்ட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் இடையில் தமிழகம் வந்தபோது என்னைப் பார்ப்பதற்காகவே நெல்லைக்கு வந்தார்   பத்தண்ணா என்றழைக்கப்பட்ட இளைய பத்மநாதன்.  அவரது முதல் அறிமுகம் 1987.

ஓரத்து இருக்கைப் பயணங்கள்

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதனால் சாத்தூரில் ஏறுபவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. சாத்தூரில் ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

மாஜீதா பாத்திமாவின் உம்மாவின் திருக்கை மீன்வால் : தந்தைமையைத் தாக்குதல்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். மாஜிதா பாத்திமா எழுதிய உம்மாவின் திருக்கை மீன் வால் என்ற கதையை (அம்ருதா, மே, 2019) பெண்மையக் கதையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல கூறுகள் கதைக்குள் இருக்கின்றன. 

ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு

படம்
புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான். உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில்தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடவேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல். அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகல

27 யாழ்தேவி- குறிப்புகள் வழி அலைவுநிலை பேசும் கதைகள்

முன்  –  பின் என்ற எதிரும் புதிருமான சொற்கள் கலை இலக்கியச் சொல்லாடலில் விளக்கங்களைச் சொல்வதற்கும் ,  விளங்கிக்கொள்வதற்கும் பயன்படும் சொற்கள் .   தமிழ் இலக்கியப்பரப்பில் பாரதிக்குமுன்  –  பாரதிக்குப் பின் எனப்பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம் .  உலக இலக்கியத்தில்  காலனியம் அப்படியொரு எல்லையாக இருக்கிறது .  காலனித்துவத்தின் பிடியிலிருந்த நாடுகளும் காலனியாதிக்க நாடுகளும் தங்கள் தேசத்துப் பொருளாதார ,  அரசியல் ,  கருத்தியல் சிந்தனைகளை அந்தச் சொல்லை மையமாக்கி விளங்கிக் கொள்கின்றன .

இற்றைப் படுத்தும் சொற்கள்: ரவிக்குமாரின் விமரிசனப்பார்வை

ரோம் நகரில் வாழும்போது ரோம் நகரத்தவனாக இருக்கவேண்டும் என்றொரு சொற்கோவையைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கலாம். இந்தச் சொற்கோவைக்குப் பின்னிருப்பது வாழிடத்தோடு பொருந்திப் போகிறவர்கள் தாக்குப் பிடிப்பார்கள்; வாழித்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதுதான். நாம் வாழும் வெளியை உணர்தலை வலியுறுத்தும் இச்சொற்கோவை, பொதுவான வாழ்தலுக்குச் சொல்லப்பட்ட ஒரு மரபுத்தொடர். இம்மரபுத்தொடரை ஆய்வு அல்லது திறனாய்வு போன்ற சிறப்புத்துறைக்குள் இயங்குபவர்களுக்குப் பொருத்தும்பொழுது அப்படியே ஏற்கவேண்டியதில்லை. இங்கே வெளிக்குப் பதிலாகக் காலத்தை மையப்படுத்த வேண்டும். காலத்தை மையப்படுத்தும்போது நிகழ்ந்த காலமும் நிகழ்த்தப்படும் காலமும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்

முகம் மாறிய அரசியல் கவிதைகள் :ஜெயதேவனின் முச்சூலம்

பொதுநல அமைப்பாகப் பாவனை செய்த அரசு அமைப்பைக் கைவிட்ட இந்தியாவைக் கவிதைகள்- தமிழ்க் கவிதைகள் முன்வைக்கத்தவறியுள்ளன. தாராளமயம், உலகமயம், தனியார் மயம் உருவாக்கிவைத்திருக்கும் நுண் அமைப்புகளிலிருந்து பேரமைப்புகள் வரை ஒற்றைத் தன்மையுடன் இயங்குவன அல்ல. முதலாளித்துவத்தைத் தாண்டிய பொருளியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக நுண் அலகுகளையும் குடும்பம், சாதி, கோயில், சடங்குகள் போன்றவற்றை அப்படியே நிலவுடைமைக்காலச் சட்டகங்களுடன் பேண நினைக்கிறது.

கமல்ஹாசன்: அடையாளங்களுடன் தமிழ் சினிமா

படம்
தேவா்மகனும் மகாநதியும் விருமாண்டியும் கமல்ஹாசன் – பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் திறமை கொண்ட நடிகா். நல்ல சினிமா மீது பற்றும், தமிழ் சினிமாவின் சரியான வளா்ச்சியில் அக்கறையும் கொண்டவா். சினிமாவுக்கு வெறும் வியாபார நோக்கம் மட்டுமே இருக்க முடியாது; சமூகப் பொறுப்பும் உண்டு என நம்புகிறவா்.

அருவி : விமரிசன நடப்பியலின் வகைமாதிரி

படம்
தனது முதல் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக இயக்குவதில் தீவிரம் கவனம் செலுத்துவதில் வெற்றியடைந்த இயக்குநர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் அருவி படத்தின் இயக்குநர் அருண் புருசோத்தமன். அருவி படம் பார்த்துமுடித்தவுடன் நினைவுக்கு வந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதுவரை தான் இயக்கிய படங்களுக்குத் தனது பெயரை ரா. பார்த்திபன் என எழுதிக்காட்டி வந்தவர், ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என நீண்ட பெயரை வைத்திருந்தார். அவர் எப்போதும் புதுமைவிரும்பி என்றாலும், அந்தப் படத்தில் காட்டிய புதுமை, காரணமற்ற புதுமைகளாக இல்லாமல், படத்தின் தேவைக்கேற்ற புதுமையாக இருந்தது.பிரெக்டின் காவியபாணிக் கதைகூற்றுமுறையைத் (Epic Narration) தேடிப் பயன்படுத்தியிருந்த பார்த்திபன், படம் முழுவதும் அதன் அடிப்படைத் தன்மையான விலக்கிவைத்தலும்(Alienation) ஒன்றிணைத்தலும் (Involvement) என்பதைக் கச்சிதமாகக் கையாண்டு படத்தைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவைத்தார். இத்தன்மை காரணமாகப் படத்தின் மையக் கதையோடு தொடர்ந்து பார்வையாளர்கள் விசாரணை நிலையிலேயே ஒன்றிணைந்து விலகினார்கள். 

சீர்மலி நகரங்களில் படகுப் பயணங்கள்

படம்
சீர்மலி நகரங்கள் (Smart cities) ஆக்குவதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் நான்கு என்றார்கள். நான்கு ஆறு என்றானது. இப்போது சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கடலூர் எனப் பன்னிரண்டு நகரங்கள் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் மாநகராட்சி என்ற தகுதியைப்பெற்றவை. திண்டுக்கல், கடலூர், போல ஒன்றிரண்டுதான் மாநகராட்சித் தகுதியை அடையாத நகராட்சிகள்.

கைவிடப்பட வேண்டிய கலைக்கோட்பாடு: கொடிவீரன்

படம்
அண்மையில் வந்த கொடிவீரன் என்ற சினிமாவை இயற்பண்புவாத சினிமாவாக வகைப்படுத்தி விமரிசனம் செய்யலாம். இந்தப் படம் மட்டுமல்ல; இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பனும் சசிகுமார் நடித்த குட்டிப்புலியும் கூட இயற்பண்புவாத(Naturalism)க் கலைக்கோட்பாட்டோடு பொருந்தும் சினிமாக்கள்தான். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வெளியாகக் கொண்டு நிகழ்ச்சிகளைக் காட்சிகளாக உருவாக்கும் இயற்பண்புவாதப் படங்கள் நுட்பமான தரவுகளை அடுக்கிக்காட்டும் இயல்புடையன. திருவிழா, விளையாட்டு, போட்டிகள், கண்மாயழிப்பு போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளையும் குடும்பச்சடங்கு நிகழ்வுகளான குழந்தை பிறப்பு, காதுகுத்து, கல்யாணம், தொடங்கிச் சாவுவீடு வரை உள்ளவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அடுக்குவதின் மூலம் பண்பாட்டு ஆவணமாகத் தோற்றத்தை உண்டாக்கும் தன்மையை இத்தகைய படங்களில் காணலாம்.