இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்

படம்
தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது : கைவீசி நடக்கிறது காலம். அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய் மனித வாழ்க்கை- ஒட்டுவதும் உதிர்வதுமாய். காலத்தை முந்திப் பாய்கின்றன கனவுக்குதிரைகள். காலடி பிசகாமல் நீள்கிறது காலப்பயணம். வேறெதையும் கண்ணுற்று நிற்பதுமில்லை கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை. காலம் நடக்கிறது.

பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை

படம்
ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை.

எல்லாம் தெரிந்த அம்மா

படம்
இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே . முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன் . அந்தக் கதைகளின் தொடக்கமோ , நகர்வோ , நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன் . 

கோட்பாட்டுத் திறனாய்வுகளும் தமிழ் இலக்கியமும்

படம்
பதிவு -1 ========= முனைவர் ஜிதேந்திரன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி

எழுதிக்கொள்ளவேண்டிய கதையின் முடிவு: துரோகங்களுக்கான பரிகாரம்

படம்
கதையை வாசி க்கத் தொடங்கி ய சிறிது நேரத்திலேயே அவரது புகழ்பெற்ற நாவலான 18- வது அட்சக்கோட்டை வாசிக்கும் நினைவுதோன் றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கலவரம் , கல்லூரி மூடல் , மாணவர்கள் வீட்டில் முடங்கல் என அந்த நாவலின் நிகழ்வுகள் இந்தக் கதையிலும் இருந்தன . கதையின் காலமும் சிறுகதை யின் எல்லையைத் தாண்டி 50 வருட நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொட்டுத்தொட்டுத் தாவி்க் கொண்டிருந்ததால் சிறுகதை யின் வடிவ எல்லையைத் தாண்டிக் குறுநாவலாக மாறி க்கொண்டிருக்கிறது என்ற  எண்ண மு ம் வலுவாகிக் கொண்டே இருந்தது. அதனால் , அந்த நாவலில் எழுத நினைத்த ஒரு கிளைக்கதையை இப்போது எழுதியிருக்கிறா ர் என்ற நினைப் பிலேயே வாசித்தேன். அந்த நாவலை வாசித்தவர்கள், இந்தவார (23/11/16) ஆனந்த விகடனில் அச்சாகியிருக்கும் அசோகமித்திரனின் துரோகங்கள் கதையை இப்படி வாசிப்பதைத் தவிர்க்கமுடியாது.

தொலைக்காட்சித் தொடர்களில் திணறும் நவீனம்

படம்
ஊடகங்கள் உருவாக்கும் வெகுமக்கள் கருத்தியல் மற்றும் ரசனை குறித்த அக்கறை கொண்டவன் என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அதே அக்கறையுடன் தொலைக்காட்சித் தொடர்களையும் கவனிப்பேன். ஆனால் எனது வேலை காரணமாக எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எல்லாத் தொடர்களையும் பார்க்கமுடிவதில்லை.

கறுப்புத்தெய்வங்களும் வெள்ளைத்தேவதைகளும்

படம்
' தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம் ; இதைச் செய்வோம் ' என்று சொன்னீர்களே ? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன் ? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை ;  செல்வது வெட்டிவேலை .

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்

படம்
அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை ======================================== இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

படம்
இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன .   என்றாலும் இரண்டு கதை களி லும் பின்னணிகள் ஒன்றல்ல . ஒன் று இடப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.   இன்னொன்றோ காலப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.

வாசிப்பின் மீதான குறிப்புகள்

வாசிப்பைக் காற்றில் கரைத்துவிடுவதற்குப் பதிலாக முகநூலில் பதிவுசெய்யலாம். முகநூலில் ஒருமாதத்திற்குப் பின் தேடுவது சிரமம். அதனால் இங்கேயும் போட்டுவைக்கிறேன்

மதுரை மாவட்டத் திருவிழாக்கள்...

திருவிழாப் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருந்ததில்லை. சின்ன வயசிலிருந்தே பலவகையான திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். வருடந் தோறும் எனது கிராமத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவைத் திருவிழா என்று சொல்வதில்லை. ‘சாட்டு’ என்றுதான் சொல்வோம். வைகாசிமாதம் கடைசி செவ்வாய் ஊர்கூடி மாரியம்மன் சாட்டு நடந்தால், அடுத்த வாரம் செவ்வாய் ‘கலயம்’ எடுப்புவரை ஊர் சுத்தமாக இருக்கும்.

நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை-கவிதைப்பட்டறை

நேற்று நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக்கொள்ளுங்கள்.

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும் . இத்தனைக்கும் நான் , இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன் . எனக்குத் தெரிந்த காந்தியார் , தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர் .  அவரது உண்மையான பெயரை , எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் . அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது . அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்   அன்றோடு மறந்துவிட்டது . அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான் .

புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்

படம்
வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தருவதாகவே உள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். தன்னை வெளிக்காட்ட ஒரு கருவி வேண்டும். அதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மொழி. அந்தக் கருவியின் திறனுக்கேற்ப ஒரு மனிதனின் தொடர்புப்பரப்பு அமையும். மொழியென்னும் கருவியின் மூலம் பேச்சு முறையின் மூலம் தன்னையும், தன் குழுவையும் வெளிப்படுத்திய மனிதன், மேலும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டிக் கண்டுபிடித்த கருவியே எழுத்து. தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. இந்தப் பணியைச் செய்வதற்கான திறனைப் பெறுவதையே நிகழ்காலச் சமூகம் கல்வியறிவு பெறுதல் என வரையறுக்கிறது.

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை : தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழியல் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. 

தாய்மையென்னும் புனிதம்

படம்
' ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும் ' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். ' கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை ' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலா ம் என்று தோன்றியது . ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதை தான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்க லாம் என்று தோன்றியது.  

கதைகளில் அலைந்துகொண்டிருக்கும் ஜி.நாகராஜனின் அந்திமக்காலம்

படம்
கபாடபுரம் இணைய இதழில் சி.மோகன் எழுதிய “ விலகிய கால்கள் ” என்ற கதையைப் படித்ததும் அக்கதையின் மையமாக இருக்கும் ராஜன் , எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்பது தெரிந்தது. சிறுபத்திரிகை வாசித்து வளர்ந்த பலருக்கும் ஜி.நாகராஜன் பற்றிய செய்திகள் மேகமூட்டம்போலத் தெரிந்த ஒன்றுதான். 50 வயதைத் தாண்டிய 20 வயதிலேயே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு காட்டிய மதுரைக்காரர்கள் அவரைச் சந்தித்திருக்கவும் கூடும். நான் அவரோடு நேரடியாகப் பேசியவனில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் விவரிக்கப்படும் நிலையிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். விலகி நின்றிருக்கிறேன்.

இருப்பைக் கலையாக்குதல்: கருணா வின்செண்டின் காமிரா.

படம்
கலைகளைப்பற்றிய பேச்சுகளில் ஓவியத்தையும் சிற்பத்தையும் நுண்கலை என்ற வகைப்பாட்டில் வைத்துப் பேசுவதையே கேட்டிருக்கிறேன். அப்படிப் பேசுபவர்கள் நுண்கலைப்பொருட்களை ஒரு விரிவான தளத்திற்கு அறிமுகப்படுத்தும்போது “காண்பியக்கலை(VISUAL ART)” என்ற விரித்துப் பேசுவதை விரும்புகிறார்கள். ஒரு புகைப்படம் அல்லது நிழல்படம் அதன் தயாரிப்பு சார்ந்து எப்போதும் ஒரு தொழிலாகவே இருக்கிறது; இருந்தது என்பது எனது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணத்தை எப்போதாவது ஓரிருவர் அசைத்துப் பார்ப்பார்கள். அப்படி அசைத்துப் பார்த்ததின் பின்னணியில் இருந்தது என்ன என்று நினைத்துப்பார்த்தால், அவர்கள் தேடிப் பிடித்துக் காட்டிய பொருளாக அல்லது இயற்கைக்காட்சியாக, அல்லது அலையும் கூந்தலோடு சிரிப்பை மறைக்க முயலும் ஒரு பெண்ணாக இருக்கும்.

வெடிக்கும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் இனவாதம்

படம்
எனது அமெரிக்கப் பயணம் ஜூலை 21 இல் நிறைவடைந்தது. ஒருவாரத்திற்கு முன் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாஸ்டனில் பார்க்க வேண்டிய இடங்கள் எனக் குறித்து வைத்திருந்த பட்டியலில் எம்.ஐ.டி(MIT) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மாசுசெசட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் விடுபட்டுப் போயிருந்தது. ஜூலை,19 இல் அதன் வளாகத்தில் இறங்கிய போது தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. அங்குமட்டுமல்ல, கடைசிச் சுற்றாகப் பாஸ்டன் நகரை ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றிவந்தபோது, எல்லா இடங்களிலும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தன. காரணம் அந்தப் படுகொலை நிகழ்வு. 

மரணமும் மதுவும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.   பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது.  உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடியடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும்   மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை.

சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்

படம்
கோமகன் ******************************************************************** இன்றைய சமகாலத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் திறனாய்வு, நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, சஞ்சிகைகளின் ஆசிரியர் என்று பன்முக அடையாளங்களுக்குச்  சொந்தக்காரர் பேராசிரியர் அ .ராமசாமி. ஆரவாரங்கள் இன்றி ச் செயலால் பலத்த அதிர்வலைகளை இவர் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரையில் இவரின் படைப்புகளாக  நாடகங்கள் விவாதங்கள், ஒத்திகை, வட்டங்களும் சிலுவைகளும், சங்கரதாஸ் சுவாமிகள், பிரஹலாதா, முன்மேடை, தொடரும் ஒத்திகைகள், அரங்கியல் மற்றும் நாடகவியல் என 8 நூல்கள் அச்சில் வந்துள்ளன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் பண்பாடு மற்றும் பிம்பக்கூறுகள் பற்றிய விமரிசனக்கட்டுரைகள் கொண்ட தொகுதிகளாக - பிம்பங்கள் அடையாளங்கள், வேறு வேறு உலகங்கள், திசைகளும் வெளிகளும், மறதிகளும் நினைவுகளும் என நான்கு நூல்கள் வந்துள்ளன. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான  பார்வைகளை முன்வைக்கக்கூடிய வகையில் அலையும் விழித்திரை, தமிழ் சினிமா: ஒளிநிழல் உலகம், ரஜினிகாந்த்: மாறும் காட்சிகள், தமிழ் சினிமா:   அகவெளியும் புற

பொறுப்பேற்புகள் கூட வேண்டும்

படம்
தனித்திருத்தல், துறவு பற்றிய சிந்தனைகள் எல்லாக்காலகட்டங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால், அவை எப்போதும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பகுதியாக இருந்ததில்லை. அதற்கு மாறாகச் சேர்த்திருத்தல், பற்று என்பனவே பெருந்தொகை மனிதர்களின் வாழ்வியலாக இருக்கின்ற து . நிகழ்கால நெருக்கடிகள் ஒவ்வொரு மனிதரையும், பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடிக்குள் திணித்திருக்கிறது. அந்தத் திணிப்புகள் உருவாக்கும் சிக்கலைத் தீர்க்கவே எல்லாவகை அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. நிகழ்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கும் உரியது.

வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்

படம்
பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.

திருமதி எக்ஸ்

பாஷ்யத்தின் அந்த அறையில் ஒருவர் உட்கார்ந்துள்ளார். அவரைக் கனவான் ஒன்று என அழைக்கலாம். செய்தித்தாள் படித்தபடி யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வயதானவர். இன்னொரு வயதான நபர் கனவான் இரண்டு வருகிறார். முதலாமவர் எழுந்து மரியாதையோடு வரவேற்கிறார். இருவரும் அமைதியாக இருக்கின்றனர். பேச்சை யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் முதலாமவரே அமைதியைக் குலைக்க விரும்பியவராய்

தொடரும் பாவனைப் போர்கள்

படம்
தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து ஒரு சொல்லாடல் -1 ------------------------------------------------------------------------------------------------------- 29/06/2016 இல், பத்ரி சேஷாத்ரி தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார். கூகிளில் தேடிய புள்ளிவிவரங்களோடு தரப்பட்டிருக்கும் அந்தப் பதிவிலிருக்கும் அடிப்படைத் தொனி கிண்டல். அவர் பதிவின்மேல் வந்துகொண்டிருந்த பின்குறிப்புகளின் தொனிகளை வாசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு நான்குமணி நேரத்திற்குப் பிறகு பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன் ஒரு பதிவு போட்டார். பத்ரியின் பதிவைப்பார்த்தபின் அவர் எழுதினாரா? அவருக்கே அப்படியொரு பதிவை எழுதவேண்டுமென்று தோன்றியதா? என்று தெரியவில்லை. அவரது பதிவில் வெளிப்பட்டதும் கிண்டல் தொனிதான். கிண்டலோடு கொஞ்சம் கோபமும் வெளிப்படுவதாகப்பட்டது. இரண்டு பதிவுகளைகளையும் இங்கே தருகிறேன். முதலில் பத்ரி சேஷாத்திரி https://www.facebook.com/badriseshadri ========================================================= ஜூலையை ஜீலை என்று எழுதுவதைவிட சூலை என்று எழுதுவதோ எவ்வளவோ மேல். ஜூன் - ஜீன் - சூன் இவ்வாறே. கிரந்தத

நாடகமாக வாசித்தல்; அனுபவங்களிலிருந்து உண்டான பாடம்

எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

படம்
தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்

இடம் : முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு   ஹால் . பின் இடது புறம்   சமை யலறையின் ஒரு பகுதி தெரிகிறது . பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது . பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி , கணினி போன்றன தெரிகின்றன . ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா ; அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள் . வேலைப்பாடுகள் கொண்ட டீபாய் . நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது . அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம் . இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம் .

சிற்பியின் நரகம்

படம்
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்திப்பார்த்து வாசித்து நாடகமாக எழுதப்பட்டுள்ளது. நாட்டில் வளர்ந்துவரும் மதவாதம்தான் சிறுகதையை நாடகமாக எழுதத்தூண்டியது. சரியான மேடையேற்றங்கள், அதன் பொருத்தத்தை உணரச்செய்யும். பாண்டிச்சேரி கூட்டுக்குரல் அமைப்பு மதுரையிலும் பாண்டிச்சேரியிலுமாக இரண்டுமுறை மேடையேற்றியுள்ளது. 

பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

படம்
ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

திறமான ஆய்வு நூல்கள் - தேடிப்படித்த நூல்கள்

 கல்விப்புலப்பார்வையில் திறமான ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுநோக்கைத் திறத்துடன் வெளிப்படுத்திய ஆய்வுநூல்கள் இவை

ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்

படம்
இப்படியொரு நாடகத்தை எழுதுவேன் என நினைக்கவில்லை. எழுதக் காரணமாக இருந்தவர், அப்போது எனது மாணவராக இருந்த சிபு எஸ்.கொட்டாரம் (இப்போது கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்). இயக்கத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்த அவரது தேர்வுக்கான தயாரிப்பாகச் சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார். 

பல்லக்குத் தூக்கிகள்

படம்
காட்சி: 1.    [நான்குபேர் தங்கள் காரியத்தில்      மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர்.      தடித்தடியான மரங்கள்                                       அங்குமிங்கும் கிடக்கின்றன.                                                  கிடத்தலில் எதுவும் ஒழுங்கில் இல்லை.    நான்கு நபர்களும்கூட   ஒழுங்கில் இல்லை. வேலை செய்தபடியே            பேசுகின்றனர்.   பொருட்கள் இல்லாமல்   இருப்பதாகப் பாவனையும்   செய்யலாம்.                                                பின்னணியில் ரகுபதி ராகவ ராஜாராம் ஒலிக்கிறது.]

ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு

பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல். எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.

க்யூபெக் : தனி அடையாளம்பேணும் முன்மாதிரி

படம்
மாண்ட்ரியால் நகரத்திலேயே முழுமையும் பிரெஞ்சு எழுத்துகள் தான் எழுதப்பெற்றிருந்தன. 10 மாநிலங்கள் கொண்ட கனடா ஒன்றியத்தில் அண்டோரியா மாநிலத்திற்கு அடுத்துப் பெரிய மாநிலம் க்யூபெக் தான். இயற்கைவளமும் தொழிற் சாலைகளும் நிரம்பிய க்யூபெக் மாநிலத்தில் 80 சதவீதம் பிரெஞ்சு மொழிக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரெஞ்சு அடையாளத்தைத் தக்கவைப்பதில் ஆர்வத்தைக் காட்டிய க்யூபெக் மாநிலத்தின் அண்மைக்கால வரலாறு தமிழக வரலாற்றோடும் ஈழப்போராட்டத்தோடும் உறவுடையதாக இருக்கிறது.

மாண்ட்ரியால் : ஐரோப்பிய நகரத்தின் நகல்

படம்
நிலவியல் என இப்போது சொல்லப்படும் பாடம் எனது பள்ளிப் படிப்பில் பூகோளமாக இருந்தது. கனடா என்றொரு நாட்டைப்பற்றிப் பூகோளப் பாடம் சொன்னதெல்லாம் பனிப்பொழிவுகள் நிரம்பிய வடதுருவ நாடு என்பதாக மட்டுமே நினைவில் தங்கியிருந்தது. நதிகள், மலைகள், நகரங்கள், மக்கள், தொழில் என அதன் உள்விவகாரங்களெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது. அந்தத் தகவல்களைத் தாண்டி மூளைக்குள் பதிந்து அழியாமல் இருக்கும் கனடிய நகரத்தின் பெயர் டொறொண்டோ; அதற்கடுத்து மாண்ட்ரியால். இரண்டுமே ஒரே வருடத்தில் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் பெயர்களாகவும் காதில் விழும் பெயர்களாகவும் ஆன வருடம் 1975- 76 ஆம் கல்வியாண்டு. 

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு

ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்து கின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத் தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன.

மூடுதல் அல்ல; திறப்பு

படம்
கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவா. அங்கே பார்க்கவேண்டியன என்று பட்டியல் ஒன்றைத் தயாரித்தபோது பட்டியலில் நாடாளுமன்றம் முதலில் இருந்தது. பிறகு நதியோரத்துப் பூங்காவும் ராணுவத்தின்காட்சிக்கூடமும் விலங்குப் பண்ணையும் இருந்தன. அப்புறம் வழக்கம்போல கடைகள் நிரம்பிய நகர்மையம். விலங்குகளையும்,   ஆயுதங்களையும்   பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்திலிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் விதமாக நகரத்தைவிட்டு விலகி எனது கருத்தைச் சொன்னேன். அதன்படி ஒட்டாவா சுற்றல் திட்டம் உருவானது. முதல் இடம் நாடாளுமன்றம். அடுத்து பூங்கா, பிறகு ஆற்றோர நடைப் பயணம். அதன் பிறகு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையருவியும் அதன் வழியான கிராமங்களும் இதுதான் வரிசை.

ஆயிரம் தீவுகளுக்குள் ஒரு நீர்ப்பயணம்

படம்
யோர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டோடு துறைசார்ந்த ஒரு நிகழ்வு முடிந்தது. இனிச் சுற்றுலா தான். பாஸ்டனிலிருந்து கிளம்பும்போதே கனடாச் சுற்றுலாத் திட்டம் தயாராக இருந்தது. அதை வட்டச்சுற்று எனச் சொல்ல முடியாது. நீண்ட செவ்வகமென்று சொல்லலாம்.  வணிகத் தலைநகரமான டொறொண்டோவுக்குப் பிறகு அரசியல் தலைநகரமான ஒட்டாவா. அதன் பிறகு பிரெஞ்சு அடையாளங்களோடு இருக்கும் மாண்ட்ரியாலும் க்யூபெக்கும். இடையில் வரும் ஏதாவது இடங்களைப் பார்ப்பதுதான் திட்டம்.

டொறொண்டோவில் மூன்று நாட்கள்

படம்
மே. 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் டொறொண்டோவில் தங்குவது என்பது திட்டம். மூன்று நாளில் இரண்டு நாட்கள் எனது இருப்பு கருத்தரங்கு நடக்கும் யோர்க் பல்கலைக்கழகம். குடும்பத்தார் டொறொண்டோவைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தத் திட்டமிடலெல்லாம் மகன் பொறுப்பு. அவர்களுக்கு முழுமையான சுற்றுலா; எனக்கோ பாதிதான் சுற்றுலா. மீதிப்பாதி இலக்கியச் சந்திப்புகள் சார்ந்த கல்விச்சுற்றுலா.

“தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

படம்
சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள் -   மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில். இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்

படம்
வேறுவழியில்லை; சாளரங்களைத் திறந்தே   ஆகவேண்டும்.   நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,   நான் அருவியெனத் தட்டும்போது இழுத்துமூடி இருப்பது எப்படி? மழை. இது மழையைத் தவிர வேறென்ன?