இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னொரு திருப்பம்; இனியொரு பாதை

படம்
திருவள்ளுவராண்டு 2053 வைகாசி மாதம் ஒன்பதாம் நாள் 2022, (2022, மே, 23) கோயம்புத்தூர், குமருகுரு கல்வி நிறுவனங்களில் அமைந்துள்ள தமிழியல் கல்விப் புலத்தின் முதன்மையர் (இணை) என்ற பொறுப்பில் இணைந்துள்ளேன்.  2019, ஜூன் 30 ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றபின் சில சுற்றுலாக்களை முடித்துவிட்டு ஏதாவதொரு கல்வி நிறுவனம் அல்லது கலையாக்க நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவே நினைத்திருந்தேன்.

கதையல்ல வாழ்க்கை- நாடகமல்ல; கதை நிகழ்வுகள்

படம்
முன்னறிவிப்பு ‘தன்னுடைய ‘ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக்கதை’ என்ற நான்கு சிறுகதைகளையும் இணைத்துக் “கதையல்ல வாழ்க்கை” என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கிக் கொண்டிருக்கிறார். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள்’ என்ற தகவலை அனுப்பியிருந்தார் இமையம். அந்த நான்கு கதைகளையும் அச்சில் வந்த போதே வாசித்தவன். திரும்பவும் அந்த நான்கு கதைகளையும் எடுத்து வாசித்தேன்.

தன்னெழுச்சிப் போராட்டங்கள் என்னும் பாவனை

படம்
இலங்கையின் முதன்மை அமைச்சர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டார். அவரது பூர்வீக இல்லம் தீயில் எரிந்து விட்டது. அரசின் ஆதரவாளர்களின் வீடுகளும் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தபய இன்னும் பதவி விலகவில்லை. இப்போது நடக்கும் வன்முறைக்கும் கலவரங்களுக்கும் அரசு எதிர்ப்பாளர்கள் காரணமா? அரசு ஆதரவாளர்கள் காரணமா? என்பது அறியப்படாத உண்மை. எல்லாமே தன்னெழுச்சியின் போராட்டங்கள் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றது.

பின் - நவீனத்துவ கால நகர்வுகள்

சாணிக்காயிதம்: பழிவாங்குதலின் குரூரம்

படம்
  பழிவாங்கும் உணர்ச்சி ஒவ்வொரு தனிமனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடக்கிறது. தனக்கு ஏற்படுத்தப்பெற்ற அவமானம், பொருள் இழப்பு, உடல் கேடு, மனநலப்பாதிப்பு போன்றன உறைந்து கிடக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை மேலெழுப்பிக் கொண்டுவந்து அவற்றுக்காரணமானவர்கள் மீது திரும்பிவிடும் வேலையைச் செய்துவிடும் என்பது உளவியல். மேலெழும்போது அவ்வுணர்ச்சிகள், தனக்குத் தரப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் எனத் திட்டமிடும். அத்திட்டமிடும்போது சுற்றியிருக்கும் சூழலையும் சமூக நிறுவனங்களையும் பற்றிக் கவலைகொள்ளாது முன்னேறிக்கொண்டே இருக்கும்.

விக்கிபீடியாவும் நானும் பிறகு தமிழ் விக்கியும்

படம்
இணையப்பக்கங்களில் எனது எழுத்துகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கி இப்போது 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007 முதல் நான் நடத்திவரும் அ.ராமசாமி எழுத்துகள் https://ramasamywritings.blogspot.com/ என்ற வலைப்பூவில் என்னைப்பற்றி என்ற பகுப்பின் கீழ் https://ramasamywritings.blogspot.com/p/blog-page_23.html என்னைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளேன். ஆனாலும் கூகிளின் தேடுபொறியில் அ.ராமசாமி எனக் தமிழில் தட்டச்சு செய்தால் முதலில் வந்து நிற்பன தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்களே.