பிரித்தானியாவில், கனடாவில், இலங்கையில் என எந்த நாடுகளிலிருந்தும் தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஈழத்தை வேராகக் கொண்ட போட்டியாளர்கள் நன்றாகவே பாடுகிறார்கள். தாம் விரும்பும் துறையில் முன்னேற்றங் காண முயலும் அவர்களின் முயற்சி மேலும் திருவினையாக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும். எழுத வந்த விடயம் அதுவல்ல. முன்னெல்லாம் ரயிலில் யாசகம் கேட்பவர்கள் பாடுவதற்கென்றே, தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா....., அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ..... போன்ற சில பாடல்கள் பிரத்தியேகத் தேர்வாக இருந்தன. அதே போலத்தான் இப்போது தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் இசைத் தேர்வு நிகழ்ச்சிகளில் ஈழத்தை வேராகக் கொண்டோர் பாடுவதற்கென்றே விடைகொடு எங்கள் நாடே ........ கண்டால் வரச்சொல்லுங்க....... போன்ற சில பாடல்களை இந்தச் சேனல்கள் தேர்வு செய்து வைத்திருக்கின்றன. பாடும் குழந்தைகள் உயிரைக் கொடுத்து நன்றாகவே பாடி விடுகிறார்கள் . எனக்கேதோ அந்நேரத்தில், எந்த உணர்வுக் கொந்தளிப்பும் கண்ணீரும் வருவதில்லை. சேனல்கள் யாசகம் கேட்கப் பாடும் பாடல்களாகவே அவை காதில...