[முன்குறிப்பு: முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம். விலையில்லா..., குறைந்த விலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்] நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. கி.பி. 15 தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த விசயநகர, நாயக்க அரசர்களின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றாகவே இவை கூறப்படுகின்றன. (அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு, ப.266) இக்கட்டுரை அத்தகைய சத்திரங்களின் நிறுவன வடிவையும், சமூகத்தேவையையும், மக்கள் எதிர்கொண்ட நிலைகளையும் காண முயல்கிறது. சத்திரத்தின் நிறுவன வடிவம். சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும், அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. தர்மகாரியமாக அன்னதான ம