இடுகைகள்

புதுவை நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுவையின் கடலோரத்திலிருந்தேன்

படம்
பாண்டிச்சேரியைப் புயல் தாக்கப் போகிறது என்று செய்திகள் வரும்போதெல்லாம் இந்தப் பதற்றம் உண்டாகிவிடும். புதுச்சேரியின் வழியாகவும் அதனையொட்டியிருக்கும் தமிழ்நாட்டின் பகுதிகள் வழியாகவும் புயல் கரையைக் கடந்து மழையாகக் கொட்டித் தீர்த்துள்ளது. புதுச்சேரி வாழ்க்கையின் தொடக்கத்தில் அடிப்படையான உணவுப்பொருட்களை கோட்டகுப்பத்திலிருந்துதான் பெற்றுக்கொள்வேன்.

அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

படம்
  காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

கி.ராஜநாராயணன்-புதுச்சேரி - அ.ராமசாமி

படம்
35 கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார். படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

அ.ராமசாமி -புதுச்சேரி- கி.ராஜநாராயணன் -3

படம்
30 ஒரு இடத்தை அதன் பூர்வீகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும் சேர்த்து வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில் இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும். ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார்.

கி.ரா. -புதுச்சேரி - நான் -2

படம்
21 புதுவைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியனைத் தடாலடியான நிர்வாகி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்ததைச் செய்துவிடுவார். அப்பல்கலைக் கழகத்திற்குத் தேசிய அளவிலும் உலக அளவிலும் இடங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வெவ்வேறு துறைகளில் அதற்கான நபர்களை அழைத்துவந்தார். பன்னாட்டு உறவுகளும் அரசியலும் என்ற துறையில் உலக அளவில் அறியப்பட்ட ஒருவரை வருகைதரு பேராசிரியராக ஆக்கினார். அவர் திரு ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த மூன்றாம் உலக நாடுகளின் கூட்டறிக்கையை - பெல்கிரேட் முன்வைப்பு - உருவாக்கியவர். உயிரியல் துறைக்குச் சலீம் அலியின் பெயரைச் சூட்டி, அவரது சீடர் ஒருவரைக் கொண்டுவந்தார். விளையாட்டுத்துறையின் முதன்மையராக இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை நியமனம் செய்தார்.

கி.ராஜநாராயணன் - புதுச்சேரி - நான் -1

படம்
1 . அமெரிக்கன் கல்லூரி, இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை நூலகம் திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம் என்றார்.  நூலகத்திலிருந்து  கோபல்ல கிராமத்தை - வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக் கொண்டேன்.

படம் தரும் நினைவுகள்: 1

படம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படம் சார்ந்த நடிப்பையும் கற்றுத்தரவேண்டும் என்ற விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. துறையில் உடன் பணியாற்றிய வ. ஆறுமுகத்திற்கு அதில் உடன்பாடில்லை. கே ஏ குணசேகரன் என்னோடு ஒத்துப் போனார். அவரே நாசரை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்புகொண்டு பேசியும் விட்டார். அழைத்துவருவதற்கு வாகனம் அனுப்ப வேண்டுமா? என்று கேட்டபோது, தேவையில்லை நானே எனது காரில் வந்துவிடுவேன். உடன் நண்பர்களும் வருவார்கள் என்று சொல்லிவிட்டதாகக் குணசேகரன் சொன்னார். அவரும் அவரோடு வரும் நண்பர்களும் தங்கும் விதமாக அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இரண்டு நாட்கள் தங்கி மாணவர்களோடு பயிற்சி செய்யலாம் என்றும் சொல்லியிருப்பதாக குணசேகரன் வழியாகத் தெரிந்துகொண்டேன்.

பாண்டிச்சேரித் தொடர்பு

படம்
எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.

நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்

படம்
நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.