இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேரங்காடிப் பண்பாடு

” அரிசி குழஞ்சு போயிராதுல்ல” ” இல்லங்க ; இது பழைய அரிசி,குழையாது” “ ரொம்பப் பழசுன்னா வேணாம்; வாடை வரும்” “ அய்யோ அவ்வளவு பழசு இல்லீங்க; வடிச்சுப் பாருங்க. மணக்கும்” அரிசிக் கடைக்காரருக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் இடையில் புகுந்து “ வடிச்சுப் பார்க்கவா ; குக்கரில் அரிசியைப் போட்ட பிறகு சோத்த வடிக்கிற வேலை எங்கே இருக்கு” கணவர்கள் கேட்டால் சிரித்து விட்டுச் சொல்வார்.

சமூக இடைவெளிகள்

       இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரேயொரு வேற்றுமை நிகழ்வெளி மட்டும் தான். முதல் நிகழ்ச்சி நடந்தது சென்னையின் நகரப் பேருந்து நிலையம் ஒன்றில். இன்னொன்று திருநெல்வேலி பேருந்து நிலையத்தில். நிகழ்ந்த வெளிகள் பேருந்து நிலையங்கள் என்பதால், பேருந்து நிலையத்தைக் களனாக –நிகழ்வெளியாகக் கொண்ட ஓரங்க நாடகத்தின் இரு வேறு நிகழ்வுகள் என்று சொல்லலாம்.

விலக்கலும் உள்வாங்குதலும்

தொழில் கல்லூரிகளில் உயர்கல்வி கற்க விரும்பும் கிராமப் புற மாணாக்கர்களுக்கு நுழைவுத் தேர்வு பெரும் தடையாக இருந்தது. அந்தத் தடை இப்போது இல்லை. அதனால் கிராமப் புற மாணாக்கர்கள் தொழில் கல்விக்குள் நுழைவது எளிமையாக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு இன்னும் கூடுதலாகக் கிராமப் புற மாணாக்கர்கள் தொழில் கல்லூரிக்குள் நுழையப் போகிறார்கள். குறைந்த பட்ச மதிப்பெண் அளவு குறைக்கப்பட்டுள்ளது அதற்கான காரணமாக ஆகி இருக்கிறது.

திமுகவில் குஷ்பு : தேர்தல் அரசியலின் கச்சிதமான தேர்வு

படம்
கோட்பாடுகளையும் சித்தாந்தங் களையும் மையப் படுத்திச் செய்யப்படும் அரசியல் கணக்குகளைத் தேர்தல் முடிவுகள் பெரும் பாலான நேரங்களில் பொய்க்கச் செய்திருக்கின்றன. கடந்த கால முன் மொழிதல்கள் அப்படியிருந்த போதிலும் இந்திய ஊடகங்களில் அரசியல் விமரிசனங்கள் செய்பவர்களும், தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டுச் சொல்பவர்களும் இன்னமும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் கைவிடுவதாகக் காணோம். பெரும்பாலும் அவற்றை நம்பியே கருத்துக்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல் விமரிசகர்கள், கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்று கருத்துரைக்க இயலாதவர்களாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இரண்டு காரணங்கள் அவற்றுள் முக்கியமானவை. இந்திய சமூகத்தின் தனித்தன்மையாகவும், தேர்தல் அரசியலில் முக்கியமான பங்காற்று வதாகவும் இருக்கும் சாதிகளின் ஒன்றிணைவு பற்றிய தவறான கணிப்புகள் முதலாவது முக்கிய காரணம். இரண்டாவது முக்கியக் காரணம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருக்கும் தனித்துவமான தனிநபர்களின் பங்களிப்புகளைக் கணக்கிட முடியாமல் தவிப்பதும், தவிர்ப்பதும் எனச் சொல்லலாம். இவ்விரு காரணங்களில் முதலாவது காரணத்தை அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்