இடுகைகள்

இலங்கைச் செலவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராவணனை நினைவில் வைத்திருக்கும் திரிகோணமலை

படம்
ராமாயணம் கற்பனை; அதில் வரும் பாத்திரங்களும் இடங்களும் புனையப் பட்டவை. ராவணனின் தலைநகரான லங்காபுரியும் அங்கிருந்த மனிதர்களும் இப்போதிருக்கும் இலங்கையோடு தொடர்புடையன அல்ல என்று முடிவுகளை முன்வைத்த ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியிலிருந்த ராம லக்குவனர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருக்கும் இலங்கைத்தீவுக்கு வந்திருக்க முடியுமா?

அலையடிக்கும் திரிகோணமலை

படம்
திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது காலை 6.30.கண்ட காட்சி இந்த மான். காட்டுக்குள்ளும் காட்சிச் சாலையிலும் மான் இணைகள்/கூட்டங்கள் தான் இதுவரையான அனுபவம். கடைகளும் மனிதர்களும் நிரம்பிய இடத்தில் தனியொரு மானாகப் பார்த்தில்லை. மானும் மிரளவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை.

ஜயரத்ன என்னும் மனிதம்

படம்
இரண்டாவது இலங்கைச் செலவில் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தந்தவர்கள் சிங்களமொழி பேசும் மனிதர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு – பேராதனை புகையிரதப் பயணத்தில் சந்தித்தவரும் புத்த குருமார்களும் தந்த அனுபவத்திற்கு மாறான அனுவத்தைச் சபரகமுவ பல்கலைக்கழக வாகன ஓட்டி தந்தார். மலையகத்திலிருந்து சபரகமுவ பல்கலைக்கழகம் போய்த் திரும்பிய பயணம் மறக்கமுடியாத பயணமாக ஆனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பல்கலைக்கழக வாகனத்தின் ஓட்டுநரென்றால், இரண்டாவது காரணம் அந்த மலைப்பயணத்தின் வளைவு நெளிவுகளும் அடர்வனப் பகுதிகளும் எனலாம்.

சிங்களப் பகுதிக்குள் ஒரு தமிழ்த்துறை

படம்
இலங்கையின் மற்ற பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பலரும் வந்து போவார்கள்; நான் பணியாற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு இலங்கையின் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் கூட அதிகம் வருவதில்லை. நீங்கள் திரும்பவும் இலங்கை வரும்போது கட்டாயம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும். கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் எங்கள் மாணவ மாணவிகளோடு உரையாட வேண்டும் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்துல் ஹக் லறீனா.

வந்த வழி தெரிகிறது; போகும்பாதை... ? மலையகமென்னும் பச்சைய பூமி…

படம்

பெருமைமிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில்….

படம்
  ஐந்தாவது நாள் இரண்டு பயணங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டிரண்டு சொற்பொழிவுகள் வழங்குவதற்காக அழைக்கப்பட்டேன். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலத் தமிழ்த் துறைகளிலும் எனது விருப்பத்துறைகளாக இலக்கியவியல், அரங்கியல், ஊடகவியல், பண்பாட்டியல் சார்ந்து பல உரைகளை வழங்கியிருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரைகள் சிறப்பான உரைகளென நினைத்துக் கொள்கிறேன்.  அந்த வாய்ப்புக் கிடைத்ததற்காக எப்போதும் மகிழ்ச்சி அடைகிறவன் நான். 

நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்

படம்
உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.

புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்

படம்
கொழும்புவில் இரண்டாவது நாள் இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன்.

நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்

படம்
  கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய    நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது.  இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை

எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு

படம்
லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

ஒரு புகையிரதப் பயணமும் மகிழுந்துப் பயணமும்

படம்
சிங்களர்களோடு சேர்ந்து பயணித்த ரயில் பயணம் போலவே சொல்லப்பட வேண்டிய இன்னொரு பயணம் மலையகத்திலிருந்து அதன் இன்னொரு சமதளப்பகுதியில் இருக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மலைப்பாதைப்பயணம். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைப் பயணங்கள் இரவில் அமைவதைவிடப் பகலில் அமைவதே நல்லது. பார்ப்பதற்கான காட்சிகள் நிரம்பி நிற்கும். அசையும் மரங்கள் மேகத்தைத் தொட முயற்சிப்பதும், மேகத்திரள்கள் மரங்களைத் தழுவிச் செல்வதுமான காட்சிகளைப் பல பயணங்களில் பார்த்திருக்கிறேன். மேகமாக நகரும் பஞ்சுப்பொதிகள் சில நிமிடங்களில் கறுத்து இருண்டு மழைமேகமாகிப் பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் இந்த மலைப்பாதைப் பயணம் இரவுப்பயணம். எண்பது கிலோமீட்டர் தூரம் தான். இரண்டரை மணிநேரத்தில் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் தமிழே தெரியாத அந்த ஓட்டுநரோடு சென்ற அந்தப் பயணம் மூன்றரை மணிநேரமாக மாறிவிட்டது.

அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா :

படம்
இலங்கைக்கான முதல் பயணத்தில் (2016 செப்டம்பர்,16-29) சந்தித்த அனைவரையும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும்.   ஆனால் திரு எஸ்.எல். எம். ஹனீபா அவர்களை எனது இரண்டாவது பயணத்திலும்     பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நான் உருவாக்கிக் கொண்டேன்.அதற்குக் காரணம் எனது முதல் பயணத்தில் அவர்காட்டிய நெருக்கமும் இயல்பான பேச்சும் என்றுதான் சொல்லவேண்டும்.

20 நாட்கள் 2000 கிலோமீட்டர்கள்

படம்
 மதுரையிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய நாள் (டிசம்.16,2019) தொடங்கிக் கண்டிக்கு ரயில் பயணம், நுவரெலியாவுக்கும் ராகலைக்கும் சிறுபேருந்துப் பயணம், அங்கிருந்து சபரகமுவவிற்குப் பல்கலைக்கழக வாகனத்தில் பயணம். பயண அலுப்பு எதுவுமில்லை. ஆனால் சபரகமுவவிலிருந்து திரிகோணமலைக்குப் போன 9 மணி நேரப் பயணத்தில் ஏழரைமணி நேரப்பயணம் சாதாரண இருக்கை கொண்ட பேருந்தில் மலைப்பாதையில் அலைக்கழித்துச் சுழற்றிப் போட்ட பயணமாக இருந்தது. வளைந்து வளைந்து திரும்பும் மலைப்பாதை வளைவுகளில் தூங்குவதும் சாத்தியமாகவில்லை. 

எதிர்பாராத சந்திப்புகளும் எதிர்பார்த்த சந்திப்புகளும்

உள்ளூர்ப் பயணங்களை ஓரளவு முன்திட்டமிங்களோடு தொடங்கலாம். ஆனால் அயல் நாட்டுப் பயணங்களை முழுமையாக முன் திட்டங்களோடு தொடங்கமுடியாது. ஐந்து நாட்களில் (டிசம்பர் 23 -27) முடிந்திருக்கக் கூடிய அண்மைய இலங்கைப் பயணத்தை இருபது (டிசம்பர் 16 -ஜனவரி 5) நாட்களுக்குரியதாக விரிவுபடுத்தியதன் பின்னணியில் சந்திப்புகளே காரணிகளாக இருந்தன. சந்திப்புகள் என்பதில் நான் சந்திக்க நினைத்தவர்களும், என்னைச் சந்திக்க நினைத்தவர்களுமென இருவகையும் அடக்கம்.

சிறார்ப்போராளியின் அனுபவங்கள்

படம்
ராதிகா பத்மநாதனின் என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில்10 நிமிட நடை . கவி. கருணாகரன் வீட்டிலிருந்து கிளம்பி, கிளிநொச்சி கவின் கலைச் சோலை அரங்கத்திற்குப் போக அவ்வளவு நேரம்கூட ஆகாது. வீட்டைவிட்டுக் கிளம்பி மண்சாலையில் திரும்பியபோது அந்தப்பெண் வந்தார். மிகக்குறைவான நண்பர்களுடன் ஓர் உரையாடலுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அவரும் வந்ததால் எங்களோடு நடந்தபடி வந்தார். நடக்கும்போது ஒன்றும் பேசவில்லை. கருணாகரன் தான், அவரது. பெயர் ராதிகா என்று சொல்லிவிட்டுக் கடைசிக் கட்டப்போரில் பாதிக்கப்பெற்ற இளம் போராளி, அவரது வாழ்க்கை ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது. அவரே அதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு மற்றவற்றை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

அம்மாச்சி: பெண்களை விடுதலை செய்யும்

படம்
இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன்.

மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்

படம்
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 

நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி

படம்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில்.