தண்டனைகளற்ற உலகம் டிசம்பர் 05, 2014 ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம். சிறந்த கல்லூரிகள் எனக் கருதப்படுபவை மாணாக்கர்களின் வருகைப் பதிவேட்டிலும், அதனை முன்வைத்து அளிக்கப்படும் தண்டனை மற்றும் மன்னிப்பில் கவனமாக இருக்கின்றன. அதிலிருந்து விலகுவதன் வழியாக ஒரு கல்லூரி தனது தரத்தினை - கட்டுப்பாட்டினை இழந்து விடுகின்றது. ஆனால் தமிழ்நாட்டுப் ப...