விலகிச் செல்லும் அந்தரங்கம்

திருமணம் நடக்கும் அந்த மண்டபம் புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.