ஜூலை 30, 2020

தேர்வுகள்- தேர்வுகள்- எழுதும் தேர்வுகள்

நாம் நமது மாணவர்களின் அறிவை மதிப்பெண்களின் வழியாக அளவிடுகிறோம். மதிப்பெண்களை வழங்குவதற்கு நாம் பின்பற்றும் முதன்மையான முறை தேர்வுகள். அறிவின் அளவைத் தீர்மானிப்பதில் தேர்வுகளின் இடம் தவிர்க்கமுடியாதவைதான். ஆனால் தேர்வுகள் - எழுத்துத்தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே அறிவை அளக்கும் கருவிகள் அல்ல. நமது நாட்டில் பின்பற்றும் தேர்வுகளும் மதிப்பெண்களும் இளம்வயதினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் தடுத்து நிறுத்த - பின்னால் தள்ளிவிட நினைக்கும் ஒருமுறையாக இருக்கிறது.  மதிப்பெண்களின் எதிர்மறைத் தன்மை கருதியே உலகநாடுகள் பலவும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பலகுகளால்  -Credits- மாணாக்கர்களின் நிலையைக் குறிக்கின்றன. நேற்று இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதேசியக் கல்விக்கொள்கை -2020 அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது.

ஜூலை 27, 2020

தன்மைக்கூற்றின் பலவீனம்: நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை


 ”இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில்  அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை  என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்புஅவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன்உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த  மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால்நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே  சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில்  கெட்ட ஆத்மாக்கள்  நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும். தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மைஆனால்அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை”

ஜூலை 26, 2020

தன்னை முன்வைத்தலின் ஒரு வகைமாதிரி

 

பெண் முதலில் தன்னைக் கவனிக்கிறாள்; பிறகு மற்றவரைக் கவனிக்கிறாள்”. இதன் நீட்சியாகப் பெண்ணெழுத்து என்னும் அடையாளத்தோடு வரும் கவிதைகளில் முதலில் பெண் தன்னிலையை எழுதிக்காட்ட நினைக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாகவே மற்றவர்களை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்து பெண்ணெழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் ஒருவருக்கு   உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஜூலை 23, 2020

நினைவில் இருக்கும் ஞானி

விசுவபாரதி நடுவண் பல்கலைக் கழகத்  தமிழ்த்துறையும், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் துறையும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்  இணைய உரையரங்கத் தொடரின் 10 -வது உரையை இன்று( 22-07-2020) முற்பகல் 11.00 மணி தொடங்கி முகநூல் நேரலையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியத் திறனாய்வு-இயக்கங்களும் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான   உரையைப் பஃறுளி பிரவீன் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.   அவரது பெயரைக் குறிப்பிட்டுத் தமிழ்த்திறனாய்வில் அவரது பார்வை மற்றும் பங்களிப்புகள் பற்றிப் பகல் 12 மணியளவில் பிரவீன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஞானியின் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எப்போதாவது இப்படிச் சில மரணங்களுக்குத் தற்செயலான இணைநிலைகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இன்று மட்டுமல்ல; இதற்கு முன்னும் சில மரணங்களின் போது அவர்களின் பெயரைக் காதில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஜூலை 21, 2020

அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமிளா பிரதீபனின் இரண்டு கதைகளை முன்வைத்து


இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்– மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமிளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக் கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள்.

ஜூலை 19, 2020

தேர்தல் கால அலைகள்: உருவாதலும் உருவாக்கப்படுதலும்


திசை திருப்பல்கள்

கொரோனாவும் அது உண்டாக்கியுள்ள நகர்வற்ற வாழ்க்கையும் நம் கண்முன் உள்ள சிக்கல்கள். இந்த நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் செய்யவேண்டிய பணிகளும் உதவுகளும் இவைதான் என்று சொல்லமுடியாத அளவுக்குப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு மாநில அரசு ஓரளவு முகம் கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசோ வழிகாட்டுதல்கள் வழங்குவதாகச் சொல்லிப் போதனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஜூலை 16, 2020

அரங்கியல் அறிவோம் 5 நடிப்புப்பயிற்சிகள்நடிப்பவர்களுக்கான குறிப்புகள் -ஸ்டானிஸ்லாவ்ஸ்கி

அரங்கியல் அறிவோம். 4


நாடகப்பனுவல்

முன் குறிப்பு: நான் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையை விட்டு வந்து 23 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் விட்டகுறை, தொட்டகுறையா மாணவர்களின் விசாரிப்புகளும் வினாக்களும் தொடர்கின்றன. அதைவிடவும் இலங்கையில் அரங்கியல் பயிலும் பலரும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது தனித்தனியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்காகச் சிலவற்றை எழுதுகிறேன். அரங்கியலில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படலாம் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்கள் விலகிச் செல்லலாம்.

நாடகப்பனுவல் அல்லது நாடகப் பிரதி என்றால் என்ன?

அரங்கியல் அறிவோம் -2 / ஆற்றுகை (Direction)written text kum performance text kum vilakkam solla mudiuma si. (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)

சொல்லலாமே..... written text, performance text - தமிழில் இதனை நாடகப்பிரதி, நிகழ்த்துப்பிரதி என நேரடியாக மொழி பெயர்க்கலாம். ஆனால் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பயன்பாட்டுச் சொல் இல்லையென்றால் அப்படிமொழிபெயர்த்துப் பயன்படுத்தத் தொடங்கலாம். தமிழில் பயன்பாட்டுச் சொற்கள் இருக்கின்றன.

அரங்கியல் அறிவோம் :1

அரங்குகள்
மேடைத்தளங்கள்
நடிப்பு
பாத்திரம்

ஜூலை 14, 2020

கொரோனாவோடு வாழ்ந்தது -ஜூலை

போதும் அடங்கல்கள்

நோய்களுக்கு மருந்தே தீர்வளிக்கும். தொற்று நோய்களுக்கும் உடனடி மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் தீர்வளிக்கும் என்பதோடு, ஒதுங்கியிருத்தலும் ஒதுக்கி வைத்தலும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரவலைத் தடுக்கும் என்பது அனுபவங்கள். 

ஜூலை 09, 2020

குறிப்பான வகை மாதிரி (Case study)ஆய்வுகளின் சிக்கல்கள்

 
ராஜன்குறை உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதாக ஜெயமோகன் மேற்கோள் காட்டும் அந்த ஆய்வு குறிப்பான வகை மாதிரி ஆய்வு. இவ்வகை ஆய்வுகள் எப்போதும் ஒற்றைப்பரப்பை அல்லது குழுவை அல்லது நிகழ்வை ஆய்வுப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அனைத்துத் தரவுகளையும் திரட்டி அந்த எல்லைக்குள்ளேயே நின்று முடிவுகளைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளக் கூடியன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து இந்தியாவிலும்/ தமிழகத்திலும் ஏதாவதொரு கிராமத்தில் தங்கி ஆய்வுசெய்த அனைவரும் இவ்வகை ஆய்வுகளையே செய்து வழிகாட்டினர். அப்படிச் செய்யப்பட்ட ஆய்வுகள் இங்கே கொண்டாடப்பட்டன என்பதைக் கல்வியுலகம் அறியும்.

ஜூலை 07, 2020

ஊடகங்களைக் கண்காணித்தல்

ஊடகங்களைக் கண்காணித்தல் என்பது அண்மைக் காலத்தில் வெளிப்படையாகி இருக்கிறது. மக்களாட்சியில் எதிர்த்தரப்புக் குரல்களுக்கு இடமுண்டு என நம்பும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் கண்காணிப்பு நடக்கவே செய்யும். கண்காணிப்பவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கண்காணிப்பின் வழியாக எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் மாற்றுக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமான கண்காணிப்பு முதல் வகை. இரண்டாம் வகைக் கண்காணிப்பு மாற்றுக்கருத்தே வரக்கூடாது; அப்படி எழுப்புபவர்களை மிரட்டித் தன்வசப்படுத்துவது அல்லது வாயடைக்கச் செய்து காணாமல் ஆக்குவது என்பது இரண்டாவது வகை.

ஜூலை 06, 2020

அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா :

இலங்கைக்கான முதல் பயணத்தில் (2016 செப்டம்பர்,16-29) சந்தித்த அனைவரையும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் திரு எஸ்.எல். எம். ஹனீபா அவர்களை எனது இரண்டாவது பயணத்திலும்    பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நான் உருவாக்கிக் கொண்டேன்.அதற்குக் காரணம் எனது முதல் பயணத்தில் அவர்காட்டிய நெருக்கமும் இயல்பான பேச்சும் என்றுதான் சொல்லவேண்டும்.

ஜூலை 03, 2020

காவல் நிலையங்கள் : அரசவன்முறைக்கூடங்கள்

பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளிப்பதற்காகக் காவல்நிலையம் சென்றால் கிடைக்கும் அவமரியாதையும் விசாரணைகளும் அவரையே குற்றவாளியாக்கும்விதமாகவே அமையும் என்பதற்குப் பலரும் சாட்சியாக இருக்கிறார்கள். நடந்த நிகழ்ச்சியை நமது மொழியில் எழுதிக்கொடுத்தால் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செய்யப்போகும் விசாரணைக்கேற்ற வடிவத்தில்தான் எழுதச் சொல்வார்கள். நாம் படித்த படிப்பும் எழுதிய கட்டுரைகளும் நம்மை முகத்தில் அறைந்து தாக்கும். அப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.

ஜூலை 02, 2020

புதிய வருகை: புதிய நகர்வுகள்- தலித் இதழில் மூன்று சிறுகதைகள்


நிறுத்தப்படுவதும் திரும்பவும் வருவதும் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் அடையாளங்களில் ஒன்று. 1990 களின் இறுதியில் தொடங்கி, தான் நடத்திய தலித் - இதழைத் திரும்பவும் கொண்டுவருகிறார் பன்முகத்தன்மைகொண்ட எழுத்தாளர்   ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்). உள்ளடக்க நிலையில் முன்னர் வந்த 12 இதழ்களின் நீட்சியைக் காணமுடிகிறது. இந்த இதழின்   உள்ளடக்கம்:    

·         கவிதைகள்(எம்.எ.நுஃமான், என்.டி.ராஜ்குமார்

·         சிறுகதைகள்(ரவிக்குமார், அழகிய பெரியவன், ப்ரதீபா ஜெயச்சந்திரன்)

·         மொழிபெயர்ப்புகள்(கெவின் பி.ஆண்டர்சன்: நேர்காணல் தமிழில் சிசுபாலன்,  லீலாதர் மண்டலே கவிதைகள், தமிழில்:கிருஷாங்கினி)

·         கட்டுரைகள்(ஜெ.பாலசுப்பிரமணியம், கோ.ரகுபதி)

·         வெளிவராத நூலின் பகுதி (தேன்மொழியின் சாமி தந்தாள் கதை)