இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடரும் வட்டார தேசியம்

 அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு.

வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்

அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

படம்
இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.