இடுகைகள்

அயலக அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் பணிவாய்ப்புக் குடிநுழைவுகள் - சில திருப்பங்கள்

படம்
                                                         அமெரிக்க அதிபராகத் திரு டொனால்ட் ட்ரம்பைத் திரும்பவும் தேர்ந்தெடுத்தபோது அமெரிக்கா தனது ஜனநாயக முகத்தைக் கழற்றிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உலகெங்கும் உருவாகிவரும் "மண்ணின் மைந்தர்கள் அரசியலின் விளைவு" என்றே நினைக்கத்தோன்றியது. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் நோக்கத்தைத் தவறாகச் சொல்லமுடியாது என்ற மனநிலை உலகெங்கும் தோன்றியுள்ளது. இதன் தொடர்ச்சியில் தான் அமெரிக்க அதிபரின் வரிவிதிப்புக் கொள்கைகளையும் குடிநுழைவுக் கட்டுப்பாடுகளையும் பார்க்கவேண்டும்.

இலங்கை: நடந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்

படம்
2024, செப்டம்பர் 21 - இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அது இலங்கையின் வரலாற்றில் பெரும்பாய்ச்சல். வாக்களிப்பின் வழியாக நடந்த புரட்சி என வருணிக்கப்பட்ட ஒன்று.

இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?

படம்
காலிஸ்தான் போராளிகளை முன்வைத்துக் கனடாவோடு இந்திய உறவு சிக்கலாகி வருகிறது. இந்திய உளவுத்துறை ரா( RAW)வின் செயல்பாடுகள் மீது கனடாவுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் ஏற்பட்ட உரசல், ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இன்மையாக மாறியிருக்கிறது. தூதர்களின் வெளியேற்றம் வரை நடந்துவிட்டன.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மூன்று குறிப்புகள்.

படம்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-  பத்து நாட்களுக்கு முன்(12/09/24)  தேர்தல் தேதி /21/09/724 ஈழப்போராட்டத்தின் வழியாகவே இலங்கையைக் கவனித்த பலருக்கும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நானும் இலங்கைத் தமிழ்ப் புனைவு எழுத்துகளை வாசித்த அளவுக்கு இலங்கை அரசியலின் உள்ளோட்டங்களை அறிந்துகொள்ளுதலில் ஆர்வம் காட்டியதில்லை. காட்டிய ஆர்வம் கூடப் பூகோள அரசியலில் சின்னஞ்சிறிய நாடொன்றை வல்லாதிக்கம் செய்ய விரும்பும் நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்ற கோணத்தில் தான் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்தப் புரிதலில், பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் செய்யும் குழப்பங்களையும் உதவிகளையும் கவனித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் எனது இலங்கைப் பயணங்களின்போது நேரடியாகவும் பார்த்து அங்குள்ள நண்பர்களோடு விவாதித்து அறிந்து கொண்டுள்ளேன். இதன் பின்னணியில் இப்போது இலங்கையில் நடக்கப்போகும் தேர்தல் குறித்து எழுதப்படும் பதிவுகளையும் சில பத்திரிகைகளின் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை இனவாதம், பௌத்த அடிப்பட...