நவம்பர் 21, 2016

எழுதிக்கொள்ளவேண்டிய கதையின் முடிவு: துரோகங்களுக்கான பரிகாரம்


கதையை வாசிக்கத் தொடங்கிசிறிது நேரத்திலேயே அவரது புகழ்பெற்ற நாவலான 18- வது அட்சக்கோட்டை வாசிக்கும் நினைவுதோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கலவரம், கல்லூரி மூடல், மாணவர்கள் வீட்டில் முடங்கல் என அந்த நாவலின் நிகழ்வுகள் இந்தக் கதையிலும் இருந்தன. கதையின் காலமும் சிறுகதை யின் எல்லையைத் தாண்டி 50 வருட நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொட்டுத்தொட்டுத் தாவி்க் கொண்டிருந்ததால் சிறுகதையின் வடிவ எல்லையைத் தாண்டிக் குறுநாவலாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற  எண்ணமும் வலுவாகிக்கொண்டே இருந்தது. அதனால், அந்த நாவலில் எழுத நினைத்த ஒரு கிளைக்கதையை இப்போது எழுதியிருக்கிறார் என்ற நினைப்பிலேயே வாசித்தேன். அந்த நாவலை வாசித்தவர்கள், இந்தவார (23/11/16) ஆனந்த விகடனில் அச்சாகியிருக்கும் அசோகமித்திரனின் துரோகங்கள் கதையை இப்படி வாசிப்பதைத் தவிர்க்கமுடியாது.

நவம்பர் 15, 2016

தொலைக்காட்சித் தொடர்களில் திணறும் நவீனம்


ஊடகங்கள் உருவாக்கும் வெகுமக்கள் கருத்தியல் மற்றும் ரசனை குறித்த அக்கறை கொண்டவன் என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அதே அக்கறையுடன் தொலைக்காட்சித் தொடர்களையும் கவனிப்பேன். ஆனால் எனது வேலை காரணமாக எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எல்லாத் தொடர்களையும் பார்க்கமுடிவதில்லை.

நவம்பர் 10, 2016

கறுப்புத்தெய்வங்களும் வெள்ளைத்தேவதைகளும்


'தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என்று சொன்னீர்களே? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன்? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை;  செல்வது வெட்டிவேலை.

நவம்பர் 05, 2016

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்


அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை
========================================
இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.