உலகக் கோப்பைக் கிரிக்கெட்
பார்வையாள நினைவுகள் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது.