இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி

தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல் , பொருளாதாரம் , கலை இலக்கியம் , போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி.

பரப்பியம்- பரப்பியவாதம்- வெகுஜனக்கலை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் நடக்கும் இந்த விவாதத்தில் எனது பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் எனக்குச் சொல்ல இன்னும் இருக்கிறது . அதை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன். இப்போது ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன் அ.ராமசாமி

மந்திரங்களும் தந்திரங்களும் எந்திரன்களும்

படம்
இன்றைய வாழ்நிலையில் எந்தவொரு தேசத்திற்கும் ஜனநாயகம் என்னும் அரசியல் கட்டமைப்பே ஆகக் குறைவான தீங்குகளைத் தரக்கூடிய வடிவம் என அரசியல் சிந்தனையாளர்கள் முன் மொழிகிறார்கள். இன்னும் பலர் மனித குலம் கடந்து வந்துள்ள பல்வேறு கருத்தியல்களில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்னும் கருத்தியலே என வாதிடுவதும் கூட உண்டு. அந்த முன்மொழிவுகளுக்கும் வாதங்களுக்கும் மாற்றான முன்மொழிவையோ,வாதத்தையோ முன் வைத்துப் பேசி,அதைவிடச் சிறந்தது இது எனச் சொல்ல இன்னொரு அரசியல் வடிவம் இல்லை என்ற நிலையில் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியும் இல்லை.

இறந்த காலமல்ல; கடந்த காலம்

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு விவசாயிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையான நெல்லை விளைவிக்கிறார்கள். குறைந்தது இரண்டு போகம் விளையும் விதமாகக் காவிரியில் நீர் வருவதுண்டு. அதனைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகவே காவிரியின் குறுக்கே  மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. 

பரப்பியம் : ஒரு விவாதம்

ஜெயமோகனின் இணையதளத்தில் பரப்பியம் என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து நிதானமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. பொறுப்பாகத் தன் கருத்தை முன் வைக்கும் ராஜன்குறையின் முன் மொழிவைக் காது கொடுத்துக் கேட்டுத் தன் பக்க நிலைபாட்டை முன் வைத்துள்ளார் ஜெயமோகன். இதையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இது போன்ற ஆரோக்கியமான விவாதச் சூழல் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் சாத்தியமில்லை என்பது போலத் தோற்றம் இருப்பதுதான்.   இந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்பது போல ஜெயமோகன் எழுதியிருந்தார்.  எனது சோம்பேறித்தனத்தால் உடனே எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் அங்கும் இங்குமாகப்