இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்

படம்
பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.( வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.

நாடகப்பட்டறையும் சிறார் நாடகப்பயிற்சிகளும்

படம்
காட்டுமன்னார் குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமது பொறுப்பில் ஏற்பாடு செய்த அந்தப் பட்டறை தேர்தல் பிரசாரத்தின் போதும் வெற்றி பெற்ற பின்னும் அவரிடம் நான் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. வழக்கமான சட்டமன்ற உறுப்பினராக வலம் வராமல் கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டறைகள், கருத்தரங்கங்கள், கலைவிழாக்கள் என ஏற்பாடு செய்வது மூலம் தொகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவங்களை நீங்கள் நினைத்தால் தர முடியும் என்று சொல்லி வைத்தேன். அந்த கோரிக்கையை அப்போது நான் காலச்சுவடில் எழுதிய கட்டுரையிலும் [காட்சிகள் : கனவுகள்-தேர்தல் 2006] கூடப் பதிவு செய்திருந்தேன்.

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்

இருபுனலும் வாய்த்த மலைகள்

படம்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.

அகத்திணைக்காட்சிகள்

படம்
தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.

வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்

ரீடர்-  A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன. சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன் கி.ராஜநாராயணன் படைப்புலகம் - பிரேம் :  ரமேஷ் லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்

மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு

படம்
  நேர்க்காட்சிகளாகவும், கற்பனையாகவும் காட்சிச்சித்திரங்களை வரைபவர்கள் மென்வண்ணங்களால் தீட்டும்போது வெளிப்படுவது வரையப்படும் ஓவியக்காட்சிகளின் மென்மையியல் மட்டுமல்ல; வரையும் ஓவியரின் மென்மைக்கலையியலும் அழகியலும் தான்.

சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

படம்
இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்            தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது . அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.   கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

வெளியேற்றம் -மாற்றம் - இலக்குகள் : சமஸ்

படம்
மாணவப்பருவம் தொடங்கி வாசித்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினசரி தினமணி. ஆங்கிலத் தினசரியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எனது வாசிப்பில் இருந்தது. இந்துக் குழுமத்தின் ஆங்கிலத் தினசரியைப் பெரிதும் வாசித்ததில்லை. இவ்விரு தினசரிகளிலும் நண்பர்கள் சிலர் - சிகாமணி, ராஜமார்த்தாண்டன், எஸ்.விசுவநாதன் - ஆசிரியர் குழுவில் இருந்தனர். முதுகலையில் விருப்பப்பாடமாக இதழியலைத் தெரிவுசெய்திருந்ததால் இருவாரப் பயிற்சிக்காகவும் தினமணிக்குச் சென்றதுண்டு.

மாதிரி முன்மொழிவு:ஸர்மிளா ஸெய்யத்தின் இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும்

படம்
” சொந்தசாதிகளுக்கெதிரானவர்களாகத் திரண்டு வருக ” இந்தச் சொற்கோவையை ஓர் உரையில் முன்வைத்தவர் நிறப்பிரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த நண்பர் ரவிக்குமார். புதுச்சேரியில் இருந்த காலத்தில் அச்சொற்கோவை எனது நம்பிக்கையொன்றின் மீது அதிர்வுகளை உருவாக்கிய ஒன்று.

குழந்தைமைக்குத் திரும்ப நினைக்கும் ஒரு குறும்படம்

குழந்தமையைத் தொலைத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாதது. ஆனால் கிராமியம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்திருக்கலாம்; அதன் மூலம் குழந்தையாக இருந்தபோது விளையாண்ட விளையாட்டுப் பொருள்களோடு உறவாடிக் கழித்திருக்கலாம். அந்த விளையாட்டுகளைத் தொடர்ந்திருக்கலாம் என நினைப்பது நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் அந்த நினைப்பு ஒருவிதக் கற்பனாவாதமும் தான்.

ஆக்கப்பெயர்கள்: சில குறிப்புகள்

சொற்களும் வகைகளும். ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்

எழுத்தாளர் கிராமங்களில் கனவு இல்லம்

படம்
கடந்த ஆண்டு நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஒவ்வொருநாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பிய பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்கினார். ஒவ்வொருநாளும் இது நடந்தது. அந்த ஆட்சித் தலைவர் தான் இப்போது முதல்வரின் உங்கள் தொகுதி; உங்கள் கோரிக்கைக்கான சிறப்பு அதிகாரி

பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்

படம்
இது புதுமை சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.

பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு

படம்
பேச்சு வழக்கில் ஒரு பெயரைச் சுருக்கிச் சொல்வது குற்றமில்லை. ஆனால் அதுவே அவரது அதிகாரப்பூர்வ பெயராக ஆகாது. இவை அரசு பின்பற்றும் தரப்படுத்தப்பட்ட மொழியின் வழக்காறல்ல. இலக்கியப் பரப்பில் இருந்த சுந்தர ராமசாமி என்ற பெயரைச் சுருக்கி அவரது அன்பர்கள் சு.ரா. என்று அழைத்தனர். அவரை அழைத்ததுபோல அ.ராமசாமி என்ற பெயரை அ.ரா. என்று சுருக்கிச்சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. ஒரு ஆளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இல்லை. அதற்கெனத் தனி நடைமுறைகள் உள்ளன.

வரலாற்றில் ஒளிந்துகொண்டு பகடி ஆடுதல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

படம்
சில பொதுக்குறிப்புகள் புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாவதும், மறுதலையாக விவாதிக்கத் தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதும் நிகழ்கின்றன. மனித வாழ்க்கை கண்டு கொள்ளப்படுவதிலும் கவனிக்கப்படாமல் போவதிலும் வினை யாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்வதும் விளக்குவதும்கூடத் தற்காலிகமானவைதான்.