ஜனவரி 30, 2021

வல்லுநராக ஏற்றுக்கொண்ட துறை

இணைப்பேராசிரியர் ஆகி நெல்லைக்கு வந்தபோது திருவனந்தபுரம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தான் என்னை ஏற்றுக் கொண்ட தமிழ்த்துறை. அதற்குச் சில காரணங்கள் இருந்தது. திருவனந்தபுரத்திற்கும் திருநெல்வேலிக்குமிடையே உள்ள தூரம். திருவனந்தபுரம் தமிழ்த் துறைக்கு ஒரு வல்லுநரை அழைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது கோவையிலிருந்துதான் அழைக்க வேண்டும். ஆனால் காலையில் கிளம்பிப் பல்கலைக்கழக வேலை நேரத்திற்குள் வரக்கூடிய தூரத்தில் இருந்தது நெல்லை.

ஜனவரி 27, 2021

உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது. 

ஜனவரி 21, 2021

ஆய்வுகள்:செய்ய வேண்டியனவும் வேண்டாதனவும்இது ஒருவிதத்தில் கடலில் மூழ்கி முத்துக்களைத் தேடி எடுத்து மாலையாகத் தொடுப்பது போன்ற ஒன்று. ஆனால் இங்கே தேடப்படுவதும் திரட்டப்படுவதும் அறிவு என்னும் முத்துக்களும் மணிகளும் என்பதுதான் வித்தியாசம்.

ஜனவரி 17, 2021

பயணங்களும் பயணிகளும்


இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

ஊர் சுற்ற ஒரு பதவி: நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்

நமது கல்விமுறையில் வகுப்பறைக்கல்விக்கு வெளியே மாணாக்கர்கள் கூடுதலாகச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். அதற்காகச் சிலவற்றை விருப்பநிலைகளாகப் பரிந்துரை செய்துள்ளனர். சமூகப்பொறுப்பு, நாட்டுப்பற்று, கிராமியநலன், பெண்கள் நலன், பொதுச் சேவையில் நாட்டம், உடல் நலம் பேணுதல், தனித்திறன்களை உருவாக்குதல் போன்றன இவ்விருப்பநிலைக் கல்வித் திட்டங்களில் கவனப்படுத்தப்படுகின்றன.

ஜனவரி 15, 2021

புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு


சென்னை போன்ற பெருநகரத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பண்பாட்டு நடவடிக்கையின் பகுதி என வரையறை செய்வதை விட சுற்றுலாப் பொருளியலோடு தொடர்புடைய பெரு நிகழ்வு என வரையறை செய்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

ஜனவரி 11, 2021

நல்லனவும் அல்லனவும் ஓரிடத்தென்பதிவ் வுலகுஅண்மையில் மறைந்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்து தமிழ் திசையில் தான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையின் நகலைக் கவி. சுகுமாரன் இணைத்திருந்தார். வாழ்ந்த வாழ்க்கையையும் வாழ்க்கைக்கான நிலவெளியில் சந்தித்த மனிதர்களையும் அவரவர் இருப்பின் வழியாகவே கவனித்து இலக்கியப்பனுவல்களாக மாற்றிய ஆ.மாதவன், புனைகதைப்பரப்பில் குறிப்பிட த்தக்க ஆளுமையாக உருவான பின்னணியையும் அவரது மன அமைப்பை மாற்றிய சமூக, அரசியல் இயக்கங்களின் தாக்கங்களையும் குறிப்பிட்டுக் கவனப்படுத்திய அக்கட்டுரையின் பயணம் நேர்கோடாக இல்லாமல் புனைவின் பயணம்போல முன்னும் பின்னுமாகவும், அங்குமிங்குமாகவும் நகர்ந்து வாசிப்புக் கவனத்தை ஈர்க்கவல்லதாக இருந்தது.

ஜனவரி 10, 2021

கொடியன் குளம்:முதல் பார்வை


புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுவதற்காக விண்ணப்பம் செய்தபோது கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பிக்கவில்லை கிடைத்த பின்னர் அமைதியான ஊரிலிருந்து கலவரமான ஓர் ஊருக்குப் போகிறேன் என்று நண்பர்கள் வருத்தம் அடைந்தார்கள். எனக்குள்ளும் அந்த வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்திற்குப் பின்னிருந்த பெரும் நிகழ்வு கொடியன் குளம் சாதிக்கலவரம்.
இந்தியாவில் சாதிகளும் சாதிகளுக்கிடையே வேறுபாடுகளும் அடக்குமுறைகளும் இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டக் கலவரம் போல இந்தியாவின் எல்லா இடங்களிலும் கலவரங்கள் வெடிக்கவே செய்யும்; ஆகவே கலவரத்திற்குள் வாழ்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சமாதானப்பட்டுக்கொண்டேன். நண்பர்களையும் சமாதானப் படுத்தினேன்.

ஜனவரி 07, 2021

நெல்லை: வீடு தேடிய படலம்

 

பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தது 1997 பிப்ரவரி 14. உடனடியாக க்குடும்பத்தை அழைத்துவர இயலாது; தேவையுமில்லை. பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஏப்ரலில் தேர்வுகள் முடிந்ததும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளோடு திருநெல்வேலிக்கு   மே மாதம் குடிவந்துவிட வேண்டும் என்பது திட்டம். பல்கலைக்கழகமும் மே முதல் தேதியிலிருந்து விடுமுறையாகி விடும். அதற்கு முன்பு வீடு பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் வீடுதேடும் படலம் ஆரம்பித்தது.

ஜனவரி 06, 2021

அரசியல் பேசும் ஊடகங்கள்

வரப்போகும் சட்டமன்றத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பைச் செய்துவிட்டுத் தேர்தல் களம்காண நினைக்கின்றன ஒவ்வொரு கட்சியும் கூட்டணிகளும். இதுதான் சரியானது என்பதுபோல ஊடக விவாதங்களும் நடக்கின்றன. கூட்டணி என்றால் யார் முதல்வர் என்பதைத் தாண்டி. அதனை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது போன்ற விவாதங்களும் நடக்கின்றன.

ஜனவரி 05, 2021

கனிமொழி:தனிமையின் இருமுனைகள்தனிமை ஒருவிதத்தில் சுதந்திரத்தின் குறியீடு. இன்னொரு விதத்தில் ஏக்கத்தின் வெளிப்பாடு. தனித்திருத்தலும் சேர்ந்திருந்தலும் ஒருவிதக் கண்ணாமூச்சி ஆட்டம். தனித்திருப்பவர்கள் சேர்ந்து வாழ ஆசை கொள்வதும், சேர்ந்திருப்பவர்கள் தனித்துப் போய்விட ஏக்கம் கொள்வதும் தொடர் இயங்கியல். மனித வாழ்க்கையின் தொடக்கம் கூட்டத்தின் பகுதியாகவே தொடங்குகிறது. கூட்டம் ஏற்படுத்தும் சுமை தாங்காது தனித்துப் போவதை அவாவும் செய்கிறது. துறவை நாடிச் சென்ற முனிவர்களும், ஞானத்தைத் தேடிய ஞானிகளும் தனித்திருத்தலின் காதலர்கள். 

ஜனவரி 04, 2021

சுழற்சிமுறைத் தலைமைகள்


துறைத்தலைமை என்னும் அதிகாரம் - பகுதி -ஒன்று 

2017 பிப்ரவரி இரண்டாம் தேதி சுழற்சி முறையில் திரும்பவும் என்னிடம் துறையின் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டது; அந்தப் பதவியிலிருந்துதான் பணி ஓய்வும் பெற்றேன்( 2019 ஜூன் 30) ஆனால் அந்தப் பொறுப்பில் திரும்ப அமர்வதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், அது தற்காலிகமானது.