ஆய்வுகள்:செய்ய வேண்டியனவும் வேண்டாதனவும்



இது ஒருவிதத்தில் கடலில் மூழ்கி முத்துக்களைத் தேடி எடுத்து மாலையாகத் தொடுப்பது போன்ற ஒன்று. ஆனால் இங்கே தேடப்படுவதும் திரட்டப்படுவதும் அறிவு என்னும் முத்துக்களும் மணிகளும் என்பதுதான் வித்தியாசம்.
· ஆய்வு செய்வது அல்லது ஆய்வேடு எழுதுவது . முனைவனாக ஆதல் என்பது ,தொடங்கி முடிந்து போகும் பணியல்ல.ஒருவிதத்தில் தொடர்பணி . ஆய்வு ஒரு வினாவிற்கு விடையைத் தேடும் அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வைக் கண்டறியும் தொடர்பணி

· ஆய்வு என்பது நன்கு அறிமுகமான ஒரு புலத்தில் ஆழமான அறிவுடைய ஒரு துறையில் தெரிவு செய்த ஒரு பிரச்சினையின் மீது விவாதத்தை உண்டாக்கும் புலனாய்வை மேற்கொள்ளுதல் ஆகும். 

ஆய்வு செய்பவர்கள் செய்யவேண்டியன எனச் சிலவற்றைப் பட்டியலிடுவது போலவே, செய்யக்கூடாதன எனவும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:

செய்ய வேண்டியன

  • · உங்கள் ஆய்வைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவதில் தாமதம் கூடாது
  • · ஆய்வைப் பற்றிக் குறிப்பான வினாக்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்
  • · உங்கள் ஆய்வு எத்தகைய உத்தியை நோக்கியது என்பதைத் தீர்மானிக்க வேண்டும் குணவியல் பொருண்மை சார்ந்ததா ? அளவியல் பொருண்மைசார்ந்ததா ? 
  • · ஆய்வின் வரையறையை உறுதி செய்க. செய்யும்போது கால அளவையும் பட்டத்தின் தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும்
  • · ஆய்வு நெறியாளரைத் தொடர்ச்சியாகச் சந்திக்க வேண்டும் . ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
  • · ஆய்வுக்கான தினக் குறிப்பேட்டைத் தயார் செய்து கொள்ளுங்கள். கடைசிநேரக் குழப்பத்தைத் தவிர்க்க முறையான கால அட்டவணையை உருவாக்கிக் கொள்
  • · எவ்வளவு முடியுமோ அவ்வளவு துணை நூல் பட்டியலையும் குறிப்புகளையும் தயாரித்து விடு.
  • · பொருத்தமான தகவல் சேகரிப்பு முறையைத் தேர்வு செய்
  • · முழுமையான ஆதாரங்களைத் தேடி முடித்து விடு; பின்னர் கிடைப்பதையும் மேலும் பொருத்தமான இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • · நேருக்¢கு நேர் சந்தித்துப் பெற வேண்டிய ஆய்வுத் தகவல் இருந்தால் அதில் சமரசம் செய்து கொள்ளவே கூடாது; செய்தால் நம்பகத்தன்மை போய்விடும்
  • · தகவலாளிகளுக்குப் போதிய விளக்கங்களை முதலிலேயே கொடுத்து விடு; புரிந்து கொள்ளும் படி செய்
  • · மிகச் சரியான பார்வையும் நோக்கும் புரிதலும் அவசியம்; ஒரு சமூக ஆய்வாளன் ஆய்வின் பின் உள்ள அரசியலைப் புரிந்தவனாக இருக்க வேண்டும்
  • · அந்த அரசியலும் நோக்குமே ஆய்வுக்கான கேள்விகளை உருவாக்கும். ஆய்வுக்கான கேள்வி மீது கவனமாக இருக்க வேண்டும்.
  • · தகவலை எழுத்து வடிவாக்குவதில் அதிக நேரம் செலவழிக்கலாம்
  • · தகவல்களைச் சரியாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்- அதிகப்படியான பிரதிகள்- கணிணித் தகடுகள் போன்றவற்றில் பதிவு செய்து கொள்ளுதல் நல்லது
  • · தகவல் சேகரிப்பு முடிந்தவுடன் பகுப்பாய்வில் இறங்கி விடலாம்.
  • · தொழில் நுட்பக் கருவிகள்- டேப் ரிகார்டர், புகைப்படக் கருவி, கணிணித் தட்டுகள் போன்றவற்றை இயக்க நீங்களே தயாராக இருக்க வேண்டும்
  • · தாமதம் செய்யாமல் இயல்களை எழுதிக் கொண்டு போய் நெறியாளரைச் சந்தியுங்கள்
  • · இயலில் இருக்க வேண்டிய எல்லாம் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்
  • · உங்கள் முறையியல் மீது நம்பகத் தன்மையும், அதன் சாத்தியப் பாடுகளையும் அறிந்து பயன்படுத்துங்கள்
  • · தந்த தகவல்களும் சான்றுகளும் சரியாக அமையும் பட்சத்தில் உங்கள் கண்டுபிடிப்புகளை அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

செய்யக் கூடாதன.

  • · கடைசி நிமிடத்திற்கென எதனையும் விட்டு வைக்க வேண்டாம்
  • · திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்; அப்படி நடக்காது போகும் நிலையில் நிலைகுலைந்து போக வேண்டாம்.
  • · நெறியாளரின் ஆலோசனைத் தட்ட வேண்டாம்; பார்க்காமல் தவிர்க்க வேண்டாம்
  • · குழப்பமான அல்லது பொத்தாம் பொதுவான வினாக்களைக் கேட்க வேண்டாம்.
  • · உங்களுக்கு உள்ள பணம் அல்லது காலம் பற்றி அதிகமாக நினைத்துக் கொள்ள வேண்டாம்; கடைசி கட்டத்தை மறந்து விட வேண்டாம்.
  • · உங்கள் ஆய்வு தொடர்பாகச் சேகரிக்க இனி எதுவுமில்லை என முடிவு செய்து விட வேண்டாம்.
  • · வினாநிரல் அல்லது புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தினால் அவற்றைப் பொறுப்பில்லாமல் செய்ய வேண்டாம்
  • · எப்பொழுது செய்ய வேண்டும்; எப்படிச் செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை மறக்க வேண்டாம்
  • · உங்கள் துறைக்கான நெறிகள் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டாம்.
  • · ஒத்துக் கொள்ளப்பட்ட விதிகள் எவை என்பதைத் தெரிந்து கொண்டு அதன்படி ஆய்வைத் தொடரத் தயங்க வேண்டாம்
  • · ஆய்வுக்குத் தொடர்பற்ற கேள்விகளில் அதிக நேரத்தைச் செலவழிப்பது; விலகிச் செல்வது வேண்டாம்.
  • · கள ஆய்வுக் காலத்தின் போது உங்கள் உடல் நலம்; பாதுகாப்பு போன்றவற்றிற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. மற்றவர்களைப் பொறுப்பாக்க வேண்டாம்.
  • · உங்கள் தரவுகள்/ குறிப்பட்டைகளை அனைவர் கண்ணிலும் படும்படி வைக்க வேண்டாம்
  • · தேர்வுசெய்து பெற்ற தரவுகளை எழுத்து வடிவமாக்க ஆகும் காலம் பற்றிக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
  • · விவாதத்தைத் தொடங்கிப் பகுப்பாய்வுக்குள் செல்லும் போது எல்லாவற்றையும் சேகரித்து முடிக்கவில்லை என நினைக்கக் கூடாது.
  • · கணிணி சார் தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என நம்புங்கள்.
  • · பல்கலைக்கழகம் விதித்துள்ள விதிகள், அமைப்புகள், அளவுகள் போன்றவற்றை மாற்ற வேண்டாம்.
  • · புதியது என்பதற்காக மரபுக்கு மீறிய முறையியலைப் பின்பற்றுதல் வேண்டாம்; நெறியாளரின் ஆலோசனைக்குப் பின்பே அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
  • · பால் உணர்வு, இன உணர்வு, சாதி, மத , உடல் குறை மனிதர்களின் மன உணர்வுகளைத் தூண்டும் மொழி நடையைப் பயன்படுத்தக் கூடாது.
  • · காலக் கெடுவுக்கு முந்திய நாளில் நல்ல ஆய்வேட்டை முடித்து விட வேண்டுமென நினைக்க வேண்டும்
  • · ஆய்வு நெறியாளர், களப்பணி உதவியாளர், நூல் தந்து உதவியவர், உதவித் தொகை வழங்கிய நிறுவனம், எனப் பலருக்கும் நன்றி சொல்ல மறக்க வேண்டாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்