மார்ச் 29, 2020

சொல்லித்தீராத சுமைகள்எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும்
காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள்.

மார்ச் 27, 2020

அரங்கியல் அறிவோம் :மார்ச் 27. உலக அரங்காற்று தினம்


சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது.

மார்ச் 24, 2020

ஆவணப்படங்கள்-நோக்கங்கள், அழகியல், திசைவிலகல்கள்

ஆவணப்படங்கள் என்பன பிரச்சினையை முன்வைத்து தீர்வை வேண்டி நிற்பன. பிரச்சினைகளின் தன்மைகளைப் போலவே தீர்வுகளும் விதம்விதமானவை. பிரச்சினைகள் ஒவ்வொருவர் முன்னாலும் நிகழ்வனதான். நீண்ட காலமாக நடந்துகொண்டே இருப்பனவற்றைப் பார்க்கும் கண்கள் இல்லாலமல் வெகுமக்கள் தங்கள் பாடுகளுக்குள் தங்களைக் கரைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும்போது அதன் வரலாற்றையும் இருப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டித் தரும் வேலையைச் செய்கிறார். அத்தகைய ஆவணப்படங்களில் இயக்குநரின் பார்வைக்கோணம் தொடங்கி, அழுத்தம் கொடுப்பது, விவரிப்பது எனப் பலவற்றில் தீவிரத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கு மாறானவை தற்காலிகப் பிரச்சினைகள். திடீரென்று தோன்றும் விபத்து, பேரிடர், போன்றவற்றை ஆவணப்படுத்தும்போது காட்சிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். விவரிப்பதில் போதாமைகள் இருக்கும். தீர்வு கோருவதில் கூட முடிவான ஒன்றைச் சொல்லமுடியாமல் போகலாம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்ட மனநிலையோடுதான் ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும். இங்கே நான் பார்த்த சில தமிழ் ஆவணப்படங்களைப் பற்றிய அறிமுகங்களைக் காணலாம். ஆவணப்படங்களைப் பார்த்த சூழலோடு சொல்கிறேன்

மார்ச் 22, 2020

நானும் எனது இயக்கங்களும் :ஜீவநதி – மாத சஞ்சிகையில் நேர்காணல்

தை /13 வது ஆண்டுமலர்/ 136-137 
நேர்காணல்:அ.ராமசாமி 
சந்திப்பு:இ.சு.முரளிதரன் 
இலக்கியம், நாடகம், சினிமா, வரலாறு எனப் பன்முக அடையாளங்களுக்கு உரித்தானவர்அ.ராமசாமி. மதுரை மாவட்டத்திலுள்ள தச்சபட்டியில் 1959இல் பிறந்தவர். ஒளிநிழல் உலகம், மாறும் காட்சிகள், சங்கரதாஸ் சுவாமிகள், வட்டங்களும் சிலுவைகளும், ஒத்திகை, நாடகங்கள் விவாதங்கள், அலையும் விழித்திரை, நாவல் என்னும் பெருங்களம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

மார்ச் 21, 2020

நெல்லையோடு சில ஆளுமைகள்

 
சுந்தரராமசாமி

நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை.

மார்ச் 17, 2020

அறிந்த உண்மையிலிருந்து விடுதலை-சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை:


ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம். மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை. 

சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்: 
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று. மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம். 

மார்ச் 13, 2020

யாதேவியும் சர்வஃபூதேஷுவும்

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது 

மார்ச் 11, 2020

நிலவெளிப்பயணம்


சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

மார்ச் 10, 2020

ராஜுமுருகனின் ஜிப்ஸி: கருத்துரைகள் தொகுதி


பெரும்பாலான மனிதர்கள், அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடும்போது மிகக் குறைவானவர்கள் அளிக்கப்பட்ட வாழ்க்கையை நிராகரித்துவிட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எதிர்த்துநின்று வெல்கிறார்கள். உதாரணமனிதர்களாக - வரலாற்று ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

மார்ச் 04, 2020

இயல்பானதும் இயைபற்றதுமான இரண்டு திரைப்படங்கள்:வகைப்படுத்திப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், விமரிசனம் செய்தல், மதிப்பீட்டுக் கருத்தை முன்வைத்தல் என்பன கலை இலக்கிய விவாதத்தை முன்னெடுப்பவர்கள், கடைப்பிடிக்கும் எளிய உத்தி. முன்னெடுப்பு அல்லது சோதனை முயற்சிப் படங்களில் வளர்நிலைப் பாத்திரங்களுக்குப் (Round Characters) பதிலாகத் தட்டையான பாத்திரங்களின் (Flat Characters) அகநிலை விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.