குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள்

இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த அம்மா சொல்லும் காட்சிகளும், மன்னிப்பற...