குறுங்கதைகளின் பன்முகங்கள்
குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள்
இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம்.பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த அம்மா சொல்லும் காட்சிகளும், மன்னிப்பற்ற மன்னிப்பில் விரிக்கப்படும் தூக்கும் எனச் சாவின் கீறல்கள் தொடர்கின்றன. அந்தத் தொடர்ச்சியைச் சாத்தான் என்னும் குறியீடாகவும், பகடியின் சித்திரமாகவும் இயேசுவின் ஆட்டுக்குட்டியாகவும் வாசிக்கமுடிகிறது.
வயதாகி, நோய்வயப்பட்டு, உடல் நலிவுற்றுப் போதும் வாழ்ந்தது என்ற நிலைக்குப் போனபின்பு வந்தடையும் சாவுகள் பற்றிப் பெரிய கேள்விகளோ, விசாரணைகளோ எழுவதில்லை. மாறாக ஒருவரின் திடீர் மரணங்களும், மரணத்தை நெருங்கத் தயங்கும் அச்சங்களும், திடீரென்று காணாமல் போவதும் தன்னைச் சிதைத்துக்கொள்ளும் காரணமின்மையும் இலக்கியத்தின் விசாரணைக்குரிய உள்ளடக்கங்களாக இருக்கின்றன; உரிப்பொருட்களாக எழுதப்படுகின்றன. இவற்றைக் குறிப்பான காலத்திலும் வெளியிலும் வைத்துப் பேசும் சிறுகதைகளும் நாவல்களும் தர்க்கநியாயங்களை வாசகர்களிடம் எழுப்புகின்றன. ஆனால் குறுங்கதைகள் அத்தர்க்க நியாயங்களைக் கைவிட்டுவிட்டு நேரடியாக உள்ளடக்கச் சொல்லாடல்களையே முதன்மைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
உரிப்பொருள், கருப்பொருள், முதல் பொருள் ஆகிய மூன்றும் கவிதையில் இடம்பெற வேண்டிய மூன்று அடிப்படைக்கூறுகள் எனத் தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது. அந்த மூன்றில் காலமும் வெளியுமான முதல்பொருளும், வெளியில் காணப்படும் கருப்பொருள் என்னும் பின்னணிக்கூறுகளும் இல்லாமல்கூடக் கவிதை எழுதப்படலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாமல் கவிதை இல்லை என்பது அதன் முடிபு. தொல்காப்பியம் கூறும் உரிப்பொருளே நிகழ்காலத்திறனாய்வு சொல்லும் உள்ளடக்கம். உலக மொழிகளின் செவ்வியல் இலக்கியங்கள் அவற்றின் உரிப்பொருள்களாலும் அதன்வழி உருவாகும் உணர்வலைகளாலுமே செவ்வியல் இலக்கியங்களாக அறியப்படுகின்றன. நீண்டகாலமாகக் குறுங்கதை வடிவத்தில் சோதனைகளைச் செய்துவரும் கே.பாலமுருகன் தனது குறுங்கதைகளில் உருவாக்கித் தரும் உணர்வலைத் திரட்சியால் அக்கதைகளைச் செவ்வியல் நிலைக்கு நெருக்கமாக்கி இருக்கிறார். எனது இந்தக் கூற்றை உங்கள் வாசிப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.
******
குறுங்கதை, நமது காலத்தின் தேவையான இலக்கியவடிவம். கலை, இலக்கியம், வாசிப்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் அவசரமும், குறுகியகால ஈடுபாடும் மட்டுமே சாத்தியம் என மாறியிருக்கும் நமது காலத்திற்குப் பெரும் காலப்பரப்பையும், வெளிகளையும் எண்ணிக்கையில் கூடுதலான பாத்திரங்களையும் கொண்ட நாவல் இலக்கியம் பொருத்தமற்றது என நினைக்கும் மனநிலை தோன்றியிருக்கிறது. இன்றைய வாசகர்களுக்கு – குறிப்பாக இணைய இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வாசிப்பவர்களுக்குச் சில நூறு பக்கங்களைக் கொண்ட நாவல் இலக்கியம் அந்நியமானது.
நமது காலத்தின் தேவையான குறுங்கதை வடிவத்தின் வருகை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் சுரேஷ்குமார் இந்திரஜித் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், போகன் சங்கர், பெருந்தேவி ஆகியோரும் குறுங்கதைகளை எழுதிவருகின்றனர்.
கொங்கு மண்டல வட்டார வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வா.மு.கோமுவின் நடுகல் இதழ் அச்சில் வந்தபோதும் இணைய இதழாக மாறிய பின்னும் குறுங்கதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அவ்விதழ் வழியாக நுண்கதை எழுத்தாளராக அறியப்பட்டவர் சுஜித் லெனின். அவரது பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமீரும் என்ற தொகுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. அவரோடு அண்மையில் மலேசியாவைச் சேர்ந்த தயாஜியும் நடுகல்லில் குறுங்கதைகள் எழுதிவருகிறார்.
சுஜித் லெனினின் குறுங்கதைத் தொகுப்புக்கு முன்பே இலங்கையின் அகமது பைசலின் ‘வானத்தை நுகர்ந்து பார்ப்பவன்’ என்ற தொகுப்பும் கவனிக்கத் தொகுப்பாக வந்துள்ளது. இவர்கள் இருவரின் குறுங்கதைகளுக்கு முன்பே பாலமுருகனின் குறுங்கதைகள் வாசிக்கக் கிடைத்தன என்றாலும் இப்போதுதான் தனித்தொகுப்பாக வருகிறது என நினைக்கிறேன். மலேசியத் தமிழ்ப் பின்னணியில் மட்டுமல்லாது நீண்டகாலமாகக் குறுங்கதைகளை எழுதிவரும் கே.பாலமுருகன் அவ்வடிவத்தைச் செழுமைப்படுத்தியுள்ளவர்களில் ஒருவர் என்பதை இந்தத்தொகுதியின் கதைகள் உறுதி செய்கின்றன.
10-12.24
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் நுண்கதைகள்
மார்ச் 25, 2022
சிறுகதை வடிவத்திலிருந்து நுண்கதை வடிவத்தின் முதன்மையான வேறுபாடு, வெளியையை எழுதுவதில் இருப்பதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் உலவும் புனைவு வெளியை விரிவாக எழுதுவதற்கு நுண்கதை வடிவத்தில் வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களைக் கதைக்குள் உலவிவிட்டு, அவர்களிடையே ஏற்படும் முரணுக்குப்பின்னால் எழும் மனப்போராட்டங்களையும் உளவியல் சிக்கலையும் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக நுண்கதைகள் இருப்பதைத் தொடர்ந்த வாசிப்பில் உணரமுடிகிறது.
எல்லாச் சிறுகதை எழுத்தாளர்களாலும் நுண்கதைகள் எழுதிவிடமுடியாது. சுரேஷ்குமாரின் சிறுகதைகளே வெளியை எழுதுவதையும் காலத்தை எழுதுவதையும் தவிர்க்கும் கதைகள் தான். எப்போதும் குறிப்பான ஒரு தருணத்தில் சந்தித்துக்கொள்ளும் மனிதர்களின் அலைபாயம் மனிதர்களையே அவர் தொடர்ச்சியாகச் சிறுகதைகளாக எழுதி வந்தவர் என்பதால், இப்போது நுண்கதைகள் என்ற வடிவம் அவருக்குரிய வடிவமாக மாறியிருக்கிறது. உயிர்மை அச்சிதழிலும், அதன் இணைய இதழான உயிர்மை.காமில் தொடர்ச்சியாக நுண்கதைகளை எழுதும் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகளை வாசிக்கும்போது இந்தக் கருத்து தோன்றுகிறது. இந்தமாத உயிர்மையில் வந்துள்ள காரணம், மனிதமனம், காதல் புனிதமானது என்ற மூன்று கதைகளிலுமே உருவாக்கப்படும் பாத்திரங்களின் சந்திப்புக்குப் பின் நடக்கும் உரையாடல் ஒவ்வொன்றும் உளவியல் ரீதியான உள்ளோட்டங்களாகவே இருக்கின்றன. உயிர்மையில் மட்டுமல்லாமல் காலச்சுவடு வெளியிட்ட நுண்கதைச் சிறப்பிதழில் வாசித்த கதைகளிலும் இந்தக் கூறுதான் முதன்மையாக இருந்தது. அவரது சிறுகதைகளே நுண்கதைத் தன்மைகொண்டது என்பதால், இந்த வடிவத்திற்காகப் பெரிய மாற்றம் எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை. பெருந்தேவி அதிகம் சிறுகதைகள் எழுதாமல் நேரடியாக நுண்கதைகளில் இறங்கியவராக இருப்பதால் வேறுபாடுகள் எதனையும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் எஸ்.ராம கிருஷ்ணன், போகன் சங்கர் போன்றவர்களின் நுண்கதைகள், அவர்களின் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டனவாகத் தோன்றுகின்றன. குறிப்பாக கதைவெளியை எழுதுவதில் கடைப்பிடிக்கும் சிக்கனமே அந்த வேறுபாட்டை உருவாக்குகின்றன.
நடுகல் இதழ் ஒன்றில் சுஜித் லெனின்.ப. என்பவரின் 31 நுண்கதைகளை வெளியிட்டிருந்தார் அதன் ஆசிரியர் வா.மு.கோமு. அவை, ஒரு வினை அல்லது கார்யம் (ACTION); அதற்கான காரணம் (REASON) , அதற்குப்பின்னால் இருக்கும் புரிதல் அல்லது தெளிவை முன்வைத்தல் ( QUEST ON LIFE OR UNDERSTANDING OF THE EVENT )என அந்தக் கதைகளின் கட்டமைப்பை விளக்கிவிடலாம். நடப்பு வாழ்க்கையைப் பற்றிய நினைவுபடுத்தும் பாத்திரங்களும், கடந்தகால மனிதர்களின் நிலைப்பாடுகளும் என விரிக்கப்பட்டுள்ள அக்கதைகள், வரலாறு, அறிவியல், நினைப்புகளின் புதிர்த்தன்மை என ஒவ்வொரு கதையிலும் கேள்விகளை எழுப்புவனவாக இருந்தன. அக்கேள்விகள் நவீனத்தைக் கடந்த கேள்விகளாக இருக்கின்றன என்பது கவனக்க வேண்டியன.
இவற்றை வாசிப்பதற்கு முன்பு இலங்கை எழுத்தாளர் அகமது பைசலின் நுண்கதைகளின் தொகுப்பிற்கு முன்னுரையொன்றும் எழுதினேன். அம்முன்னுரை முதல் பின்னூட்டத்தில் உள்ளது.
மேற்கை எதிர்கொள்ளல்
மேற்குலகம் - என்பது கருத்தாகவும், சிந்தனையாகவும், வாழ்க்கைமுறையாகவும் அதிகாரத்துவ அமைப்பாகவும், பொருளியல் நடவடிக்கைகளின் பரப்பாகவும் இந்தியத் தன்னிலைகளுக்குள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்துகொண்டிருக்கிறது. அவ்வலைதலை கவிகளும் புனைகதையாளர்களும் விடுதலைப் போராட்ட காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் எழுதிய விதங்களும் எதிர்கொண்ட முறைகளுக்குள்ளும் வேறுபாடுகள் உண்டு.

பின் காலனிய இந்தியத்தன்னிலையை உருவாக்கிய ’மேற்கு’ என்னும் கருத்தியலில் ஐரோப்பாவை இடம் பெயரச் செய்து அந்த இடத்தில் அமெரிக்காவின் பரப்பைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது உலகமயம். உலகமயத்தின் வரவோடு, இந்திய எழுத்துப்பரப்பில் ‘ இந்தியத்தனம்’ என்பதும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியத்தனம் - உலகமயம் - மேற்குலகம் என்ற கருத்தியல் சொல்லாடல்களின் பின்னணியில் வாசிக்கவேண்டிய ஒரு கதையை இந்திரா பார்த்தசாரதி இந்த மாத உயிர்மையில் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு : சார்லியின் தருணங்கள். இ.பா.வின் இந்தக் கதையை விவாதிப்பதோடு சேர்த்து விவாதிக்கத் தக்க கதைகள் அவ்வப்போது வாசிக்கக் கிடைக்கின்றன.
இந்திய மனிதர்கள் மேற்குலக மனிதர்களோடு முரண்படும்/ உடன்படும் சங்கதிகள் நிறைய உண்டு. கிழக்கும் மேற்கும் சந்தித்துக் கொண்டு உடன்பட்டும் முரண்பட்டும் விவாதிக்கும் தொன்மம் நவீன இந்தியத் தொன்மங்களில் ஒன்று. காலனியக் காலத்தில் உருக்கொண்ட இந்நவீனத்தொன்மம் பல எழுத்தாளர்களிடம் பலவிதமாக நகர்ந்துள்ளது. இத்தொன்மத்தைக் கொண்டு எழுதப்பெற்ற கதையொன்றைக் காலச்சுவடில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு: ‘லீலாவதி ஆவேன்’ . அமெரிக்கன் ஒருவனும் இந்தியனும் சந்தித்துக் கொள்வதில் வளரும் கதை. கரோனா இடைவெளிக்குப் பின் வந்த உயிர்மையின் முதல் இதழில் அம்பை எழுதிய ‘இரு பைகளில் ஒரு வாழ்க்கை’யும் அப்படிப்பட்ட கதைதான்
இந்தத் தொன்மத்தில் நான் வாசித்த முக்கியமான கதையாக நினைப்பது புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதேபோல ஜெயகாந்தனின் கிழக்கும் மேற்கும்; ஜெயமோகன் பல கதைகளை எழுதியிருக்கிறார்.
நவீனத்துவத்தை எதிர்கொண்ட தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் பலரும் இந்தத் தொன்மத்தை எழுதிப்பார்த்திருக்கிறார்கள்.
பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்
ஜூன் 07, 2021
இது புதுமை
சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.
உலகப் பேருண்மை அல்லது கருத்துநிலையை முன்வைத்த கவிதையை முதன்மைப் பனுவலாகக் கொண்ட தமிழ்மொழியில் கதை சொல்லத் தொடங்கிய வடிவத்தைத் தொடர்நிலைச்செய்யுள் என்கிறது தமிழின் முதன்மை இலக்கியவியல் பனுவலான தொல்காப்பியம். முத்திறமுரைத்த இளங்கோவின் தொடர்நிலைச் செய்யுள் சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு என்னும் முப்பெரும் வெளியைப் பின்னணியாகக் கொண்டு ஒரு பெருங்கதையைத் தமிழில் தந்துள்ளார். தொடர்நிலைச் செய்யுளையே இன்னொரு இந்தியச் செவ்வியல் மொழியான சம்ஸ்க்ருதம் காவ்யம் என்கிறது. உலகச் செவ்வியல் மொழிகள் பலவற்றில் தோன்றிய காவ்யங்கள் ஒவ்வொன்றும் பெருங்கதையொன்றைச் சொல்லும் நோக்கத்தில் நெடுங்கதைகளையும் துணைக்கதைகளையும் சொல்கின்றன. துணைக்கதைகள் அல்லது கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் நவீன இலக்கியப் புனைகதை வடிவமான சிறுகதையின் சாயலைக் கொண்டிருக்கின்றன.
பெருக்கமும் குறுக்கமும்
காப்பியத்தின் கிளைக்கதைகளின் வடிவத்தையும் சமகால வாழ்வின் மீதான கேள்விகளையும் தனதாக்கிக் கொண்ட சிறுகதை வடிவம், இப்போது அதிலிருந்து இன்னொரு நகர்வைச் செய்திருக்கிறது. அந்நகர்வைக் குறுங்கதைகள் அல்லது நுண்கதைகள் என அழைக்கின்றனர். இந்த மாற்றம் காலத்தின் தேவை என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது. எல்லாவற்றையும் விலாவரியாக எழுதிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக வாழ்வின் மீது- அதன் நிகழ்வுகளின் புதிர்த்தன்மை மீதும், புதிர்த்தன்மை அவிழும்போதும் எழுத்தாளர் கண்டடையும் ஆச்சரியத்தையும் புத்துணர்ச்சியையும் பதிவுசெய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. எப்போதும் இலக்கியம் உணர்ச்சி மற்றும் புதிர்த்தன்மைகள் மீது தன்னைக் கட்டியெழுப்பும் ஒன்று என்பதால், இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் அதனையே முதன்மையான வெளிப்பாட்டுநிலையாக க்கொள்கின்றன. அளவில் குறுக்கம் என்பதைவிடவும் பின்னணிகளுக்கு முதன்மை என்ற தன்மையை விலக்கிக் கொண்ட குறுங்கதைப்பனுவல்கள் முதன்மையாக மனிதர்களை – பாத்திரங்களை எழுதிக்காட்ட நினைக்கின்றன.
வானத்தை நுகர்ந்து பார்ப்பவன் என்று தலைப்பிடப்பட்டுள்ள அகமது பைசலின் இருபத்தேழு குறுங்கதைகளை வாசித்த நிலையில் அவரது கதைகள் எழுப்பும் கேள்விகள் – உணர்ச்சிகள் – உலவவிடும் மனிதர்கள் பெரும்பாலும் தற்காலிகத் தன்மையிலிருந்து விலகி, இந்த வாழ்வின் தீராத கேள்விகளில் அலைபவர்களாகத் தோன்றுகின்றனர். அந்தத் தன்மையை முதல் கதையான எழுத்தில்லாப் புத்தகமே தொடங்கிவைக்கின்றது. அதன் தொடர்ச்சியை வானத்தை நுகர்ந்து பார்ப்பவன்,நாற்காலியில் யாரோ அமர்ந்திருக்கிறார், செருப்புகள் வளர்வதில்லை, கனவுதான் முதற்பிறவி, நரை, நிழல், பதினோராவது விரல், புதுமைப்பித்தனின் வீட்டில் எனக்கு மதிய உணவு போன்ற கதைகளில் இந்தத் தேடலை வாசிக்க முடிகிறது. தத்துவம் சார்ந்த இந்தத் தேடலை முன்வைக்கும் இக்கதைகளின் பின்னணியில் அவரது சமயவாழ்க்கை சார்ந்த நம்பிக்கைகளும் கடவுளின் இடமும் இருக்கிறது என்பதைக் கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரலாம்.
அரூபமான கேள்விகள், தத்துவத்தேடல் மட்டும் அல்லாமல் எளிய நிகழ்வுகளுக்குள் – மனித இயக்கத்திற்குப்பின்னால் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மற்றும் அங்கதத் தொனியை வெளிப்படுத்தும் குறுங்கதைகளும் இத்தொகுப்பில் பாதிக்கும் மேல் உள்ளன. அவ்வகைக் கதைகளுள் முக்கியமாகச் சொல்லவேண்டிய கதையாக, ‘ பெயருக்குள் ஒழிந்திருப்பவன் கதையையும் ஒருசோடி எறும்பு கதையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இக்கதைகளைப் போலவே கதையின் முடிவில் மெல்லிய புன்னகையையும் ஆழமான நிதானத்தையும் எழுப்பும் கதைகளையும் தந்துள்ளார் அகமது பைசல்.திருட்டுப்புத்தகம், பிரியாவின் விடை,குரல் போன்ற கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் வாசிப்பனுபங்கள் ஆழமானவை; நிதானமானவை.
வாசிப்பின் திளைப்பு
அகமது பைசலில் இக்குறுங்கதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னுள் உருவான மனநிலையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒவ்வொரு கதையும் ஒன்றரைப் பக்கத்திலிருந்து இரண்டு பக்கங்கள் அளவு தான். சொற்களின் எண்ணிக்கையில் சொல்வதானால், ஐந்நூறு சொற்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இக்கதைகள் முன்வைத்துள்ள உண்மைகளும், உண்மைகளைச் சொல்வதற்காக வரையப்பட்டுள்ள சொற்சித்திரங்களும் வாசிப்புத்திளைப்பை தருவன. குறிப்பாக நீர்ப்பரப்புகளை வரையும் அகமது பைசலின் எழுத்துமுறைமை வாசிப்பவர்களை ஒருவித மயக்கத்திற்குள் இறக்கி நீரின் சுழிப்பொடு அதன் ஈரத்தையும் அவர்களின் உடம்பிற்குள் நுழைத்துவிடும் மாயத்தைச் செய்கின்றன. இந்த மாயம் தேர்ந்த கவிதைகள் உண்டாக்கும் மாயம்.
மாயத்தன்மையும் தத்துவக் கேள்விகளும் வாழ்வைப் புரிந்துகொண்ட நேர்த்தியும் வெளிப்படும் அகமது பைசலின் குறுங்கதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவங்களைத் தரவல்லன.

ஒரு கதையும் முப்பத்தியோரு நுண்கதைகளும்
மே 14, 2021
கிராமிய வாழ்வின் உள்ளடுக்குகள்
தனிமனித அந்தரங்கத்திற்குள் அலையும் காதல், காமம், கடவுள், என்ற மூன்றையும் அதனதன் இருப்போடும் உளவியல் கோணங்களோடும் எழுதப்பெற்றுள்ள இந்தக் கதை நீண்ட இடைவெளிக்குப் பின் வாசித்த நல்லதொரு கதை. வாசித்து முடித்தபின் எழுந்த எண்ணங்களும் நினைவுகளும் இந்தியக் கிராமிய வாழ்விற்குள் சாமியாட்டங்களுக்கும் பூசாரிப்பொறுப்புகளுக்கும் திரள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் இருக்கும் பிணைப்பைத் தீவிரமாகச் சொல்லும் புனைவொன்றை வாசித்த அனுபவமாக நிறைந்தது. மனித உடல், மனித மனம் என்ற இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பேசமுடியுமா? என்றதொரு கேள்வியை முன்வைக்கும் இந்தச் சொற்கள் தான் கதையின் நோக்கவாக்கியம்:
” ஒன் ஒடம்ப கட்டுப்படுத்தாம அது இஷ்டத்துக்கு விட்டுட்டு வேடிக்க மட்டும் பாரு.
நடக்கறதுக்கும் ஒனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லேன்னு புரிஞ்சுக்க. மனசுல
கவலையோ குழப்பமோ எதுவும் வராது” என்றார்.
வாசிக்கவேண்டிய கதை. கன்னிச்சாமியை எழுதிய கா. சிவாவுக்கு வாழ்த்துகள்
வினைகளும் காரணங்களும்: நடுகல்லில் நுண்கதைகள்
அண்மையில் தொடர்ச்சியாகக் குறுங்கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ரா., போகன்சங்கர், பெருந்தேவி என அவ்வப்போது வாசித்தவையைத் தாண்டி, இலங்கை எழுத்தாளர்- அகமது ஃபைசலின் குறுங்கதைத் தொகுப்பொன்றுக்கு முன்னுரை எழுதவேண்டி அந்தக் கதைகளை வாசித்து முடித்தேன். முகவரி மாற்றத்தால் தாமதமாகிவந்த நடுகல் -10 சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. ஒவ்வொரு பக்கமாகத் திருப்பியபோது மொத்தமாக 30 நுண்கதைகள் .

முப்பது (31?) கதைகளையும் தனித்தனியாகவும் படிக்கலாம். ஒற்றைக் கயிற்றில் கட்டப்பட்ட வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட மணிகளாகவும் நினைத்து வாசிக்கலாம். அதற்கேற்ப ஒரு பின் - அமைப்பியல் தலைப்பொன்றை “ பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்” என்றொரு தலைப்பையும் தந்துள்ளார் அவற்றை எழுதிய சுஜித் லெனின்.ப.
ஒரு வினை அல்லது கார்யம் (ACTION); அதற்கான காரணம் (REASON) , அதற்குப்பின்னால் இருக்கும் பற்றிய புரிதல் அல்லது தெளிவை முன்வைத்தல் ( QUEST ON LIFE OR UNDERSTANDING OF THE EVENT )என அந்தக் கதைகளின் கட்டமைப்பை விளக்கிவிடலாம். நடப்பு வாழ்க்கையைப் பற்றிய நினைவுபடுத்தும் பாத்திரங்களும், கடந்தகால மனிதர்களின் நிலைப்பாடுகளும் என விரிக்கப்பட்டுள்ள அக்கதைகள், வரலாறு, அறிவியல், நினைப்புகளின் புதிர்த்தன்மை என ஒவ்வொரு கதையிலும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் நவீனத்தைக் கடந்த கேள்விகளாக இருக்கின்றன.
இதுதான் தனது நடுகல் இதழின் அடையாளம் என்பதாக ஒன்றை உருவாக்கிவிடக்கூடாது என்று திட்டமிட்டு ஒவ்வொரு இதழிலும் சோதனைகளையும் புதுமைகளையும் தருகிறார் அதன் ஆசிரியர் வா.மு.கோமு. நுண் கதைகளின் ஆசிரியர் சுஜித் லெனின்.ப.வுக்கும் நடுகல் இதழ் ஆசிரியருக்கும் பாராட்டுகள்.
கருத்துகள்