இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது. இந்திய அணியிலுள்ள சுழல்பந்து வீச்சாளர்களுக்குத் தோதான ஆடுகளத்தை உருவாக்கி வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவைத் தகர்த்தது எளிதான வெற்றியைத் தனதாக்கியது. இப்போது இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 489 ஓட்டங்களை எடுத்தது. அதன் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 3 சுழல் பந்து வீச்சாளர்களும் பட்டபாடு பந்துவீச்சின் பலவீனத்தைக் காட்டியது. 151 ஓவர்கள் வீசினார்கள். இத்தனைக்கும் வேக வீச்சிலும் சுழல் வீச்சிலும் சிறப்பானவர்கள் எனக் கருதப்படும் பும்ராவும் குல்தீப் யாதவும் அணியில் இருக்கின்றார்கள்.
இந்தியப் பந்துவீச்சின் பலவீனத்தை விடவும் மட்டை ஆட்டத்தின் பலவீனம் வெளிப்படையாகத் தெரிகின்றது. முதல் இன்னிங்ஸில் 201 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. அதே நாளில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா வலுவான முன்னிலையுடன் 549 ஓட்டங்களோடு நிறுத்திக்கொண்டுள்ளது. இப்போது மீதமுள்ள ஓவர்களில் அடித்தாடி ஓட்டங்களைக் குவித்து நாளையும் நின்றாட வேண்டும். இந்தியா 108 ஓவர்களில் 549 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் இன்னிங்ஸின் 201 ஓட்டங்களுக்குள் சுருண்ட அதே அணிதான் இதைச் செய்யவேண்டும். நிச்சயம் தென்னாப்பிரிக்கா 2-0 என்று வெல்வதே நடக்கும்.
****
இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் வென்றாக வேண்டும் என்ற மனநிலை உருவாக்கப்பட்டுவிட்டது.அந்த வெற்றியை ஆட்ட நேர்த்தியுடனும் திறனுடனும் ஆடும் ஆட்டக்காரர்களைக் கொண்டு பெறவேண்டும் என்று திட்டமிடுவதாகத் தெரியவில்லை. அப்படியொரு திட்டமிருந்தால் அணித்தேர்வில் அது வெளிப்பட்டிருக்கும். சிறப்பான மட்டையாளர்களைக் கொண்டு ஐந்து ஆடிப் பெற வேண்டிய டெஸ்ட் வெற்றியை மூன்று நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் இருப்பவர்கள் அணிக்குப் புதிதாக வந்துள்ள பயிற்சியாளர் கௌதம் கம்பீரும். அதற்கேற்ற வகையில் ஆடுகளத்தை உருவாக்குவதில் தொடங்குகிறது. அந்த ஆடுகளம் சுழல்பந்துக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அணியில் அதிகமான சுழலர்களைத் தேர்வு செய்கிறார்கள். மொத்தத்தில் ஐந்து மட்டையாளர்கள், ஆறு பந்துவீச்சாளர்கள். அவர்களில் மூன்றுபேர் ( ஜெஸ்வால், ராகுல், சாய் சுதர்சன்) மட்டுமே சிறப்பாக மட்டையாட்டத் தேர்ச்சி உடையவர்கள்; இருவர் (ஜுரேல், ரிஷப் பந்த்) விக்கெட் காப்பாளர்கள் + மட்டையாளர்கள். அடுத்து பந்துவீச்சிலும் மட்டையடிப்பதிலும் தேர்ச்சி என்ற வகையில் மூன்று பந்து வீச்சாளர்கள். மூன்று பேரில் இருவர் சுழலர்கள் ( வாசிங்டன் சுந்தர், ஜடேஜா) இன்னொருவர் வேகப்பந்து வீச்சாளர். ஆனால் நிதிஷ்குமாரின் பந்துவீச்சும் எடுபடவில்லை; மட்டையாட்டமும் நடக்கவில்லை. ஐந்து நாட்கள் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு பந்து வீச்சாளர்களுடன் போன இந்திய அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்றதைப் பார்த்திருக்கிறேன், தொடக்க வீரர்களாக வரும் சச்சின், சேவாக் எல்லாம் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைவான எண்ணிக்கையில் பந்து வீசி, பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுப்பார்கள். முதன்மையாக மட்டையடிப்பும் கூடுதலாகப் பந்து வீச்சும் எனக் கலவையானவர்கள் அணியில் இருப்பார்கள். ஆனால் அகர்கர், கௌதம் கம்பீர் காலத்தில் இந்திய டெஸ்ட் அணி பந்துவீச்சாளர்களை – அதிலும் சுழல் பந்து வீச்சாளர்களை நம்பி இறங்குகிறது. ஆறு வீச்சாளர்கள், ஐந்து மட்டையடிப்பாளர்கள் என்ற விகிதம் சிக்கலானது. தோல்வி அல்லது வெற்றி என்பது மட்டுமே நடக்கும். டிரா என்ற வாய்ப்புக்கு இடமில்லை.
***
நெறிமுறைகள் அற்ற அரசியலை எப்போதும் அது மறைப்பதில்லை. இப்போது வெற்றிக்காகத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறைகள், விதிகள் என அனைத்தையும் சீர்குலைக்கின்றது. வெற்றிக்குப் பின் கிடைக்கும் அதிகாரத்தால் நாட்டின் தன்னாட்சி அமைப்புகளான நீதிமன்றம், ஊடகத்துறை, உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் தன்போக்கில் மாற்றிக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதைக் கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம் . இதில் வல்லவர் அமித்ஷா என்பதைச் சொல்லும் ஊடகங்கள் அவரை 'சாணக்கியர்' என வருணிக்கின்றன.
அமித்ஷாவின் மகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் விளையாட்டையும் தேர்தல் அரசியல் போலவே அணுகுவதைப் பார்க்கிறோம். இந்திய அணி ஆடும் எல்லாவகைக் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டு, வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் போட்டிகளை வலுவாக நடத்துவதில் அக்கறையோடு செயல்படுகிறது. அங்கே கிரிக்கெட் என்ற விளையாட்டை விடவும் வாரியத்திற்குத் தேவையான வருமானமும் லாபமும் முதன்மையாக இருக்கின்றது.
கிரிக்கெட்டை மையமிட்டுப் பேசும் எனக்குக் கிரிக்கெட்டை விடவும் இந்திய ஜனநாயகம் முக்கியம். இந்திய ஜனநாயகத்தையும் தேர்தல் அரசியலையும் முழு அதிகாரம் கொண்ட பாசிசத்தை நோக்கி நகர்த்தும் பாஜகவின் சிந்தனைக் கூட்டம், இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் அதனை நோக்கி நகர்த்துகின்றது என்பதைச் சொல்லவே கிரிக்கெட்டை முன்வைத்துப் பேசுகிறேன்.

எப்படியாவது வெற்றி என்ற பார்வையைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல். நடைமுறையில் உள்ள தேர்தல் அரசியலில் தில்லுமுல்லுகள் செய்யாமல் வெற்றியைப் பெற வேண்டும்; கொள்கைகளை முன் வைத்துப் பரப்புரை செய்ய வேண்டும் என நினைக்காமல் எந்த வழியிலாவது அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என நினைக்கும் அந்த அரசியலைக் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. தேர்தல் வெற்றிக்காக அந்தக் கட்சி பின்பற்றும் வழிமுறைகள் தேசியத்தன்மை இல்லை; ஆனால் தேசியக்கட்சி எனவும் தேசியமே கொள்கை எனப் பேசும் தலைவர்கள் அதிகம். ஒற்றைக் கட்சி அதிகார முறையை நோக்கிய நகர்வில் எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவைப் பற்றிப் பேசுவது அதன் வெளிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதை அவர்கள் விவாதிப்பதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எல்லாவகையிலும் இன்னல்களைத் தருவதும் ஆளுநர்களைக் கொண்டு மாற்று அதிகாரத்தை முன்னெடுப்பதும் என நடக்கும் அத்துமீறல்களையும் ஜனநாயக மறுப்பையும் சாணக்கியத்தனம் என விளக்கங்கள் தந்து ஊடகங்களை ஏற்கச் செய்கின்றது அக்கட்சியின் சிந்தனைக் குழு. எதிரிகள் என அறியப்பட்ட கட்சிகளை- கொள்கை அடிப்படையில் எதிர்ப்பவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொள்வதும் தேர்தலுக்குப் பின் கூட்டணிக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தித் தனக்கான அணியை உருவாக்குவதும் தந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சியை இல்லாமல் ஆக்குவது தொடங்கி, கூட்டுக்குள் வந்த கட்சியை அழிப்பது வரை தேர்தல் அரசியலில் அதன் சாகசங்கள் வெளிப்படையானவை.
நெறிமுறைகள் அற்ற அரசியலை எப்போதும் அது மறைப்பதில்லை. இப்போது வெற்றிக்காகத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறைகள், விதிகள் என அனைத்தையும் சீர்குலைக்கின்றது. வெற்றிக்குப் பின் கிடைக்கும் அதிகாரத்தால் நாட்டின் தன்னாட்சி அமைப்புகளான நீதிமன்றம், ஊடகத்துறை, உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் தன்போக்கில் மாற்றிக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதைக் கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம் . இதில் வல்லவர் அமித்ஷா என்பதைச் சொல்லும் ஊடகங்கள் அவரை 'சாணக்கியர்' என வருணிக்கின்றன.
அமித்ஷாவின் மகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் விளையாட்டையும் தேர்தல் அரசியல் போலவே அணுகுவதைப் பார்க்கிறோம். இந்திய அணி ஆடும் எல்லாவகைக் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டு, வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் போட்டிகளை வலுவாக நடத்துவதில் அக்கறையோடு செயல்படுகிறது. அங்கே கிரிக்கெட் என்ற விளையாட்டை விடவும் வாரியத்திற்குத் தேவையான வருமானமும் லாபமும் முதன்மையாக இருக்கின்றது.
கிரிக்கெட்டை மையமிட்டுப் பேசும் எனக்குக் கிரிக்கெட்டை விடவும் இந்திய ஜனநாயகம் முக்கியம். இந்திய ஜனநாயகத்தையும் தேர்தல் அரசியலையும் முழு அதிகாரம் கொண்ட பாசிசத்தை நோக்கி நகர்த்தும் பாஜகவின் சிந்தனைக் கூட்டம், இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் அதனை நோக்கி நகர்த்துகின்றது என்பதைச் சொல்லவே கிரிக்கெட்டை முன்வைத்துப் பேசுகிறேன்.

.jpeg)
கருத்துகள்