இடுகைகள்

உள்ளகப் பயணங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை நாளில்...

2026, ஆகஸ்டு, 22 இந்தச் சென்னை நாளில் இந்த விடுதியைப் பற்றிச் சொல்வது தவறில்லை. அண்மைக்காலங்களில் சென்னைக்கு வரும்போது இங்குதான் தங்கிக் கொள்கின்றேன். ஊரிலிருந்து கிளம்பும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டால் நமக்கென ஓர் அறையை ஏற்பாடு செய்துதரும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது. முன்பணம் செலுத்தினால் அறை என்பதெல்லாம் இல்லை. அலைபேசியில் சொன்னால் போதும். அதன் மேலாளர் ஒத்துக்கொள்வார். குபேர் இன் . என்ற பெயருடைய அந்த விடுதி நந்தனம் பகுதியிலேயே இரண்டு இடங்களில் இருக்கின்றன . சில இடங்களில் காலை உணவு இலவசம் என்ற வசதியுடன் கிடைக்கும். மற்ற நேரங்களில் சொல்லிவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.  புத்தகக் கண்காட்சி நந்தனம் விளையாட்டு அரங்கிற்கு மாறியபின் இந்த இடம் அறிமுகமானது. புத்தகக் கண்காட்சிக்காக வரும் நாட்களில் தங்குவதற்கென இந்த விடுதியை அறிமுகம் செய்தது தளவாய் சுந்தரம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவர் ஒருவிதத்தில் எனது மாணவர். திருநெல்வேலி மனோன்மணியத்தில் தொடர்பியல் துறை மாணவராக இருந்தபோது படைப்பிலக்கியம் என்ற விருப்பப்பாடத்தாளுக்காகத் தமிழியல் துறைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். அதுமுதல் நண்பர்களா...

இந்த முறை டெல்லியில்..

படம்
தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும் கடந்த ஆண்டு முன்னோக்கிப் போன மனநிலையைத் திரும்பவும் பழைமைக்குள் திருப்பிவிட்டது ஆட்சி மாற்றம். இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதைவிடவும் தீபாவளிக்குரிய சடங்கான வெடி வெடிப்பதும் வானவேடிக்கைகளும் முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு நடந்த மாற்றங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. திரும்பவும் வெடிகள் வெடித்தன; வானவேடிக்கைகள் நிகழ்ந்தன. மேகங்கள் கருத்துத் திரண்டு நின்றுவிட்டன டெல்லியின் வான் பரப்பில். தீபாவளிக்குப் பின்னர் சில நாட்களில் டெல்லியில் இருந்தேன். இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்ற...

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

பொதுத்துறை முயற்சிகள் -சேலத்தில் 4 நாட்கள்

படம்
தேசியத் தகுதித்தேர்வுக்குத் தயார்படுத்தல் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் இந்தத்தேர்வோடு அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்பில் இருப்பவன்.  அதன் தொடக்கம் 1984. நான் 1983 இல் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்து உதவித்தொகை எதுவும் இல்லாத ஆய்வாளராக இருந்தேன். அதனால் அதன் அறிமுக ஆண்டிலேயே தேர்வாகிவிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இருந்தது. விண்ணப்பித்து, தயாரிப்பில் இறங்கினேன். தமிழுக்கெனத் தேர்வான 10 பேரில் ஒருவன் நான். அதற்கெனக் கிடைத்த சான்றிதழ் பின்னர் எனது பணிக்கான நேர்காணலில் கவனம் பெற்ற ஒன்றாக இருந்தது.   அப்போது கிடைத்த உதவித்தொகை   மாதம் 1000/- ரூபாய். 1985 இல் அது பெரிய தொகை. கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.1400/- தான். இப்போது தேர்வெழுதும் பலரும் தமிழுக்கான பாடத்திட்டம் அளவில் பெரியது எனவும் விரிவானது எனவும் சொல்கின்றனர். நாங்கள் எழுதிய பாடத்திட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாறாமல் இருந்தது. அதனை மாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுநர் குழுவில் நானிருந்தேன். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழ்கங்களின் பாடத்திட்டக்குழுவில் நேரடியாகவும் ஆலோசனை நிலையிலும்...