பாபா முதல் சந்திரமுகி வரை

ரஜினியின் மூன்று முகங்கள் பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது.