இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதநேயமும் தமிழ்ப்புனைகதைகளும்

மேற்கு ஐரோப்பிய நாடுகள் இத்தாலியின் பின்னிடைக்கால எழுத்தாளர்களான தாந்தே  பிரான்ஸ் நாட்டில் மனிதநேயம் அறிமுகமான பொழுது அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் டச் கிளரிக் டெஸிடெரஸ் எராஸ்மஸ்க்ஷ். இவரே இங்கிலாந்திலும் மனிதநேயக்கருத்தோட்டம் அறிமுகமாகக் காரணமாகவும் இருந்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எராஸ்மஸ்ஸால் அறிமுகப்படுத்தப் பட்ட மனிதநேயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கிய வல்லுநர்களான வில்லியம் க்ரொசின்

சாரு நிவேதிதா: தந்திரக் கதை சொல்லலின் ஒரு கோடு

படம்
என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன். இப்படித்தொடங்குகிறது போனமாத(டிசம்பர், 2015) உயிர்மையில் வந்து சாருநிவேதிதா வின் கதை. கதையின் தலைப்பு என் பெயர் சீஸர் . ஒருவிதத்தில் தன்மைக்கூற்றுக் கதை. கதை எழுதும் சாரு நிவேதிதா நாயாக மாறித் தன் கதையை - நாயின் கதையை- கூறுவதாக வாசிக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் கதைகூற்று முறை.

தன் வரலாற்றைச் சொல்லுதலின் அரசியல்: கே.ஏ. குணசேகரனின் வடு

படம்
தலித் இயக்கம் இந்தியாவில் அதிரடி மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பிற இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்திட எடுத்துக் கொண்ட கால அளவை விடத் தலித் இயக்கங்கள் எடுத்துக் கொண்ட கால அளவு மிகக் குறைவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று . இலக்கியம் அல்லது எழுத்துப் பரப்பில் பிற இயக்கங்கள் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்த பல பிரதேசங்களில் தலித் இயக்கங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நுழைந்துள்ளன  என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

பேரா. சே. ராமானுஜம்: இந்தியப் பெருவெளியில் பயணம் செய்த தமிழ் அரங்கியலாளர்

படம்
முதன் முதலாய்ப் பார்த்த நாள் முதலாய் மரணம் வரை உடல் மற்றும் மனதளவில் பெரிய அளவு வேறுபாடுகள் இல்லாமலேயே நினைக்க முடிகிறது என்றால் அவரோடான பழக்கம் ஒன்று குறுகியகாலப் பழக்கமாய் இருக்க வேண்டும். அல்லது குருட்டுத்தனமான பழக்கமாய் இருக்கவேண்டும்.

மரத்தில் மறையும் யானை:அ.முத்துலிங்கத்தின் சிப்பாயும் போராளியும்

படம்
ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான்.