போரிலக்கிய வாசிப்புகள் மீதான திறமான பார்வை.

ஈழத்துப் போரிலக்கியமும் உலக தமிழிலக்கிய வரைபடமும் சு.அழகேஸ்வரன் ஈழப் போர் குறித்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பற்றி 2015 ஆம் ஆண்டு முதல் 2023 வரை எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “போரிலக்கிய வாசிப்புகள்: விவரிப்புகள்- விவாதங்கள்- உணர்வுகள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எழுதிய படைப்புகள் திறனாய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. கவிதைகளை பொருத்தமட்டில், போர் குறித்து எழுதிய கவிஞர்களின் தனித்தன்மைகளையும் அவை, எவ்வாறு தமிழ் செவ்விலக்கியங்கள் மற்றும் நவீன கவிதைகளின் தொடர்ச்சியாகவும், மாறுபட்டு உள்ளது என்பது ஒப்பு நோக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தப் படைப்புகள் குறித்து தொடர் வாசிப்புகள், விவாதங்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கருப்பொருளும் வழங்கப்பட்டுள்ளது. சில படைப்புகளை செழுமைப்படுத்தும் நோக்கில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழப் போரிலக்கியம் உலக தமிழிலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டியதின் தேவையை உணர்த்துவதாக கூ...