இருமொழிகளில் ஒரு கவிதைத் தொகுப்பு
காண்மதி நீவிர்...
கண்டா வரச்சொல்லுங்க...
செவ்வியல் கவிதைகளில் ஆங்காங்கே விளித்துச் சொல்லும் சொற்றொடராக இருக்கும் ஒன்று காண்மதி. கண்டது தானே? என்ற வினாவும் விடையும் உள்ளடக்கிய ஒரு சொற்றொடர். அதனைத் தொடர்ந்து வரும் ‘நீவிர்’ என்பது முன்னிலைப் பன்மை. நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று ஒன்றைக் குறித்துச் சொல்வதாகவோ, நீங்கள் பார்த்தீர்களா? என அறியா வினாவாகவோ கேட்கும் தன்மையிலானது. பெரும்பிரிவிலோ, சிறுபிரிவிலோ தனித்திருக்கும் தலைவியின் மனம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது உருவாகும் வினாச் சொற்றொடர். இவர்கள் எல்லாம் பார்த்திருப்பார்கள்; நான் தான் பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
கண்டா வரச்சொல்லுங்க.. என்ற சொற்றொடர் சினிமாப் பாடல் (மாரிசெல்வராஜ் ) ஒன்றின் முதல் வரி. அந்த வரியைத் தொடர்ந்து இடம்பெற்ற வரி, ‘கர்ணனைக் கையோடு கூட்டி வாருங்க’. இந்த வரியில் இடம் பெற்றுள்ள ‘கர்ணன்’ படத்தின் தலைப்பாக அமைந்த பாத்திரத்தின் பெயர். கர்ணன் எங்கேயோ இருப்பான்; அவனைக் கையோடு கூட்டிவந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர உதவுங்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
இரு சொற்றொடர்களில் முதலில் நிறபது அகவயமான நிலை. அடுத்தது புறவயம். அகவயத்தில் உருவாக்கும் உணர்வுகள் பலவிதமானவை. அரூபமானவை;காணமுடியாதவை. ஆனால் புறவயநிலை நேரடித்தன்மை கொண்டது. காண்பதின் விளைவால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வையும் முயற்சிப்பது. காணவே முடியாதது என்பது ஒருவிதத்தில் இன்மை. இன்மை என்ற சொல் கடவுள் அல்லது தெய்வம் என்ற அரூபத்தோடு தொடர்புபட்டு, இல்லாமல் இருப்பதும் இருப்பதாகத் தோன்றுவதுமான ஒரு நிலையைக் குறிக்கும்.
*******
தொலைந்து போனவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் என்ற உரிப்பொருள் இலக்கியத்தில் பரவலாக இடம்பெறும் ஒன்று. தொலைந்து போவதற்கும் காணாமல் போவதற்குமான காரணங்கள் வேறுவேறாக இருக்கலாம்.ஆனால் பரவலாக இடம்பிடிப்பவை. தொலைந்து போகும்படியான நெருக்கடியைத் தந்த உறவினர்களின்/ சமூக மனிதர்களின் குற்றவுணர்வுகளைப் பேசும் இலக்கியங்களும் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. தமிழும் விதிவிலக்கல. முதிய வயதில் கவனிக்கப்படாத பெற்றோர்கள் பிரிந்தபின் அவர்களைத் தேடியலைந்த பிள்ளைகளைக் குறித்த கதைகள் நிறைய எழுதப்பட்டுள்ளன. தொலைதலும் மறைதலும் தனியொருவர் நிலையில் நடக்கும்போது துறவு வாழ்க்கையாகக் கருதப்பட்டுப் புனிதத்தன்மை பெற்றுவிடக்கூடியன.
தனிமனிதத் தொலைதல் ஒருவிதத்தில் தன்வினை. கூட்டமாகத் தொலைந்து போவது தன்வினையாக நடப்பதல்ல; அவை பிறவினைகள். பிறவினைகளை நடத்துபவர்கள் விசாரணைக்குரியவர்கள். கவி.கருணாகரனின் இந்தக் கவிதைகள் தொலைந்துபோனவர்களை முன்னிறுத்தி, தொலைதலுக்கான காரணங்களைத் தேடுகின்றன. அதன் தொடர்ச்சியில், அவர்கள் தொலைந்து போனவர்கள் அல்ல; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதைக் கண்டறிந்து சொல்கின்றன. அதனால் காணாமல் ஆக்கப்படுதல் என்னும் நிகழ்வின் மீது விசாரணைகள் தேவை என முன்வைக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்செயல் என்பதை முன்வைத்துள்ள கவி, மனிதச் சிந்தனைகளின் வழியாகத் தீர்வுகள் கிடைக்காத நிலையில் நிகழ்காலத்தில் அனைத்துக்கும் ‘சர்வரோகநிவாரணி’ போலத் தோற்றம் தரும் செயலியைப் பரிந்துரைக்கின்றார். மனித இருப்பு, மனித வாழ்வின் மேலானப் பொறுப்புகள் சார்ந்து உருவாக்கப்படும் சட்டங்களின் துணைகொண்டு தீர்வுகளைத் தரமுடியாது என்ற நம்பிக்கை இழப்பைப் பகடி செய்தலாகவே இந்தச் செயலிகள் முன்வைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் எந்தச் செயலியும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற அரசியல் விளைவுக்குத் தீர்வைத் தந்துவிடப்போவதில்லை. அதன் வழியாகக் காலம் கடத்தலாம். அல்லது மனச்சாந்தியை உருவாக்க அந்தச் செயலிகள் தரும் புள்ளிவிவரங்கள் உதவலாம்.
செயலி என்ற பரிந்துரையைப் பகடியாக முன்வைக்கும் கவி, அப்போதும் இரண்டு செயலிகள் தேவையிருக்கின்றது என்பதாகச் சொல்லி அங்கதப்படுத்துகின்றார். ஒன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான செயலி. இச்செயலி, காணாமல் போனவர்களின் புள்ளிவிவரங்களைத் தருவதோடு, அவர்களைக் குறித்த நினைவலைகளை எழுப்பிக் கிளர்ச்சியூட்டி ஆறுதல் தரும் வினைகளைச் செய்யும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட வேண்டும். இன்னொன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடியலையும் நினைவுப் படிமங்களை இல்லாமல் ஆக்கிவிட உதவும் செயலியாக உருவாக்கப்பட வேண்டும். எதிரும்புதிருமான இவ்விரு செயலிகளையுமே ‘காணாமல் போனவர்கள்’ என்ற பெயரில் உருவாக்கி விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடக்கூடும் என நினைக்கும் மனங்களின் குயுக்தியான திட்டமிடல்களின் மீதான அங்கதம் இது.
**********
தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் காணாமல் போனதின் – காணாமல் அக்கப்பட்டதின் ஒரு வகைமாதிரி கவிதைகள். எல்லாக் கவிதைகளிலும் சித்திரப்படுத்துதலும் வினா எழுப்புதலும் என்ற கட்டமைப்பு பின்பற்றப்பட்டுள்ளன. சித்திரப்படுத்துதல் வேறுபடும்போது எழுப்பப்படும் வினாமுறையும் வேறுபட்டுள்ளன. தமிழ் மொழியில் எல்லா வகை வினாக்களையும் இந்தக் கவிதைகள் எழுப்புகின்றன. அறியாவினா தொடங்கி, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல் வினா என எல்லாம் கேட்கப்பட்டாலும் அவை அனைத்தும் அறிவினாவில் தங்கி இருக்கின்றன. விடை தெரிந்த நிலையில் எழுப்பப்படும் வினா அறிவினா. இந்தக் கவிதையின் சித்திரப்படுத்துதலையும் எழுப்பப்படும் வினாவின் முடிவையும் பாருங்கள்.
தனி ஈழத்துக்கான போர் என்ற காரணத்தின் பொருட்டு, மனிதர்களின் இருப்பும் வாழ்வும் அந்தரப்படுத்தப்பட்டுக் கேள்விக்குள்ளான சூழலே காரணம் என்பது கவிக்குத் தெரிந்திருக்கின்றது. அந்தச் சூழலை உருவாக்கிய தரப்புகள் எவை என்பதும் தெரிந்திருக்கின்றன. காணாமல் போனவர்களின் பெறுமதியும் தெரிந்திருக்கின்றன. எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட நிலையில், விசாரணையில் கேட்கப்படும் வினாக்களைப் போல ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு விதமாகக் கேள்வியைக் கேட்கின்றார். எந்தக் கவிதையில் எந்த வினா என்ற நுட்பமான தேடுதலோடு இந்தக் கவிதைகளை வாசித்துப் பாருங்கள். எல்லாம் அறியாததுபோல் தோன்றும் அறிவினாக்கள் அடுக்கப்படுகின்றன என்பது புலனாகும். இங்கே ஒரேயொரு கவிதை மட்டும்:
ஆழ்குழியில் தள்ளி
சுற்றியிறுக்கப்பட்டிருந்த இருண்ட நாட்களில்
பயங்கரங்களிலிருந்து எழுந்து வந்த
வலியமிருகங்கள் இழுத்துச் சென்றன
குழந்தைகளை, சிறுவர்களை, பெண்களை
முதிய கிழவனையும்.
விடாது குரைத்த நாய்களைச் சுட்டுமீன் தொட்டியையும் பூச்செடிகளையும் உதைத்தாடியசந்நதத்தில்காணாமலாக்கப்பட்டது வேறு யாருமல்லஉங்கள் தோழன்உங்கள் சகோதரிஉங்கள் மகள்உங்கள் மாணவன்உங்கள் அயலாள்உங்கள் சக போராளிஉங்கள் ஆசிரியர்உங்கள் தெருவிலிருந்தவர்உங்கள் தந்தைஉங்கள் இதயம்...
அவர் காணாலாக்கப்பட்டது ஏன் என்பதும்
உங்களுக்குத் தெரியும்
ஆனாலும்...!?
******
முப்பது ஆண்டுகளாக ஈழத்தமிழ் இலக்கியத்தைக் குறிப்பாகப் போர்க்கள இலக்கியங்களையும் போர்க்காலம் குறித்த புலம்பெயர் எழுத்தாளர்களின் எழுத்துகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றுள் காணாமல் போனவர்களைப் பற்றிய பதிவுகள் வரத் தொடங்கிய காலமாக முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான ஆண்டுகளையே சொல்ல வேண்டும். போரில் சரணடைந்தவர்களாகவும் சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவும் பல ஆயிரங்களில் எண்ணிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் மனிதர்களில் பலரை நேர்காணல் செய்து பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. நீண்ட உரையாடல்களாகத் தொகுக்குப்பட்டு நூல்களாகவும் வந்துள்ளன. நேர்காணல் பதிவுகளைத் தாண்டிக் கவிதைகளிலும் கதைகளிலும் நாவல்களின் பகுதிகளிலும் கூடக் காணாமல் போனவர்களின் பிம்பங்களும் அவர்களைத் தேடுபவர்களின் குரல்களும் அலைந்து கொண்டிருப்பதைப் பலரும் வாசித்திருக்கக்கூடும்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளைக் கருணாகரன் முகநூலில் எழுதிய ஒன்றிரண்டு தினங்களுக்குள் அதே முகநூல் பக்கங்களில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீவத்ச மொழிபெயர்த்து வெளியிட்டார். இரண்டு மொழிகளிலும் இப்போது ஒரே தொகுப்பாக வெளிவருகின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்தபோது வாசித்துவிட்டு, இந்தக் கவிதைகளைத் தொகுப்பாக்கும்போது மூன்றாவதாகச் சிங்களத்திலும் மொழிபெயர்த்து, ஒரே நூலில் இடம்பெறச் செய்யலாம் என்று கருணாகரனிடம் சொன்னதுண்டு. ஏனெனில் இந்தக் கவிதைகள் செயல்படத்தூண்டும் கவிதைகள். தமிழில் வாசிக்கும் தமிழ் வாசகர்களுக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற நிகழ்வுச் செயல்பாட்டை (Phenomenon) விவாதப் பொருளாக்கும். ஆங்கிலத்தில் வாசிக்கும் பிற நாட்டு மனிதர்களுக்கு இலங்கைத் தீவில் நடந்து முடிந்த போரின் நிகழ்வுச்செயல்பாடு தீர்க்கப்படாமல் இருக்கின்ற நிலையைப் பேசுபொருளாக்கிக் கவனத்தை ஈர்க்கும். சிங்களத்தில் வாசிக்கும் இலங்கையர்களுக்கு இந்த செயலின் குரூரத்தையும் அதற்குள் செயல்பட்ட வன்முறைத்தன்மையையும் நினைவூட்டும். அதன் மூலம் நிகழ்கால அரசும், அதன் அமைப்புகளும் உடனடியாகத் தீர்வை நோக்கி நகர்வதற்குத் தூண்டுகோலாக மாறும் என்று என் மனம் நினைத்தது.
FOREWORD
Did you see?
If you see him, ask him to come
One of the phrases that is used here and there in classical poetry is Did you See?. A phrase that contains the question and answer, "Did you see?" This also engulfs ‚You‘ as a First person Plural. It is used to ask something, either by saying, "You see," or as an interrogative question, "Have you seen?" An Interrogative question phrase that is formed when mind of the heroine is searching for her lover, when they were separated for long or short time . They all have seen; I have not seen; But I have the hope that I will see (Her lover).
The phrase "Kanda Varachollaunga.. (If you see him, ask him to come)" is the first line of a movie song (Mari Selvaraj). The line that follows is, "Karnanai Kaiyodu Koodi Vaaruanga. (Get Karnan immediately)." This line is the name of the character who became the title character of the movie Karnan. It is an expression of hope that Karnan is somewhere; please bring him along and help find a solution to this problem.
The first of the two phrases is the intrinsic state; the next is the extrinsic state. The feelings that arise out of the intrinsic state are diverse. They are formless; invisible. But for the extrinsic state, this is often direct. It is the joy that comes from seeing and the solution to problems that are sought. What is invisible is in a way, nothingness. The word nothingness is associated with the formless form of God or Deity and refers to a state of being absent, still appearing to be present.
The terms “lost people” or “disappeared people” are common motifs in literature. The reasons for getting lost or disappearing may vary, but in many languages, its literature also explores the guilt of relatives or social figures who contribute to such crises of loss. Tamil is no exception. Many stories have been written about heirs who search for their neglected parents after being separated from them in old age. When loss or disappearance occurs in solitude, it may even be regarded as a form of ascetic life and acquire a sense of sanctity.
Individual disappearance can, at times, resemble a self-chosen vanishing.
Collective disappearances, however, are never acts of the self; they are wrought by the hands of others.. Those unseen hands, and the forces that move them, demand inquiry. In these poems, the poet Karunakaran turns toward the missing, listening for their silences and searching for the reasons behind their absence. What emerges is a quiet but firm truth: they are not those who lost their way, but those who were made to disappear. Thus, the poems become both witness and question, calling for an investigation into the very phenomenon of disappearance.
Having shown that disappearance is a crime that demands investigation, the poet turns, almost ironically, to the present age and recommends an “app” — that modern panacea we reach for when human thought fails to find answers. These apps read like a quiet parody, signs of our fading faith that justice can emerge from laws shaped by responsibility to human life and existence. They promise remedy yet offer only illusion. For no app can resolve the political wounds behind the vanished, nor restore those who were made to disappear. At best, they help us pass the time. At best, their neat statistics soothe us with the comfort of numbers - a borrowed peace of mind, nothing more.
The poet, with quiet irony, mocks the easy faith placed in an app, yet imagines that two such devices are still required. One would belong to the relatives of the disappeared, an app of numbers and names, of statistics that count the missing, of flickering archives that stir memory, offering small, rehearsed consolations to wounded hearts. The other would move in the opposite direction, an app that traces the vanished only to erase them, that wipes away memory itself, dissolving the last fragile signs of their presence.
This vision is not a solution but a worry: a satire of the cunning mind that believes opposing mechanisms remembrance and erasure, can be engineered in the name of “the missing,” and that such contrivances might settle the wound. But disappearance is not a problem an app can solve; it is a silence that no device can fill.
Each poem in the collection stands as a typology of disappearance, of being made to disappear.
All the poems follow a shared structure: depiction and interrogation. As the mode of depiction changes, the nature of the questions raised also changes. These poems, in Tamil, give voice to every kind of question. Beginning with questions of unknowing, moving through doubt, appeal, offering, and exhortation, they seem to ask them all - yet, in the end, each rest within a question of knowing. A question of knowing is asked even when the answer is already known. Look, then, at the poem’s mode of portrayal and at the destination toward which its question finally leads.

The poet knows that the war for a separate Eelam created a climate in which human existence and life itself were suspended, rendered uncertain, and thrown into question. He knows which forces produced that condition. He knows the worth of those who disappeared. Knowing all this, he nevertheless frames each poem as though it were part of an inquiry, raising questions in different ways, like those posed in an investigation. Read these poems with a careful eye, searching for the subtlety of which kind of question appears in which poem. You will sense a layering of questions that seem innocent, as though asked in ignorance, yet are in fact questions asked in full knowledge.
Here is one poem from the collection:
Here is one poem from the collection:
Thrown into a deep pit,in those dark days hemmed in on all sides,fierce beasts that rose out of terrordragged awaychildren, young boys, women,and even the old man.
Shooting the dogs that barked without pause,kicking aside the fish tank and the flowerpotsin that frenzy,it was none other who was made to disappear.
Your friend,your sister,your daughter,your student,your neighbour,your fellow fighter,your teacher,someone from your street,your father,your heart…
You knowwhy he was made to disappear.And yet…!?
For thirty years, I have been reading Eelam Tamil literature, particularly war literature and the writings of diasporic authors that reflect on wartime experience. Among these, it is only in the years following the Mullivaikkal catastrophe that records about the disappeared began to appear with frequency. Those counted in the thousands include people who surrendered during the war and those who were made to disappear after surrendering. Many of those searching for them have been interviewed and featured in newspapers. Their testimonies have been compiled into long conversations and published as books. Beyond these interview records, images of the disappeared, and the voices of those who search for them, continue to wander through poems, short stories, and even passages of novels. Many readers would have encountered these traces.
The poems in this collection were first written by Karunakaran on Facebook. Within a day or two, the translator Srivathsa rendered them into translation and published them on the same pages. Now, they appear together as a single volume in both languages. After reading them in Tamil and in English, when the poems were being compiled into a collection, I once suggested to Karunakaran that they should also be translated into Sinhala and included in the same book as a third language.
For these are poems that urge action.
For Tamil readers, reading in Tamil, it will turn as phenomenon of ‘enforced disappearance’ into a subject of debate and reflection.
For readers in English, from other lands, they draw attention to the unresolved condition of the war that took place on the island of Sri Lanka.
For those who read in Sinhala, they serve as a reminder of the cruelty of this act and the violence that operated within it.
Through this, I felt this might be a catalyst for the present government and its institutions to move immediately toward a just resolution.

கருத்துகள்