மாஜீதா பாத்திமாவின் உம்மாவின் திருக்கை மீன்வால் : தந்தைமையைத் தாக்குதல்

வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். மாஜிதா பாத்திமா எழுதிய உம்மாவின் திருக்கை மீன் வால் என்ற கதையை (அம்ருதா, மே, 2019) பெண்மையக் கதையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல கூறுகள் கதைக்குள் இருக்கின்றன.