நவம்பர் 30, 2020

இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்


”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.

நவம்பர் 26, 2020

க.கலாமோகனின் விலகல் மனம் :

நீண்ட இடைவெளிக்குப் பின் கலாமோகனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பைக் கனலி இணைய இதழ் தந்துள்ளது. 1999 இல் எக்ஸில் வெளியீடாக வந்த நிஷ்டை தொகுதிக்குப் பிறகு சிவகாமியின் ஆசிரியத்துவத்தில் வரும் புதிய கோடாங்கியில் சில அபுனைவுகளையும் புனைவுகளையும் எழுதினார். அதன் பிறகு நீண்ட இடைவெளி.

கரைகடக்கும் புயல்: ஒரு நினைவு

 

இன்றிரவு நிவர் புயல் கரையைக் கடக்கும் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. புயலின் இருப்பையும் சுழற்சியையும் பற்றிய குறிப்புகளைப் பற்றிய விவரணைகளில் நேற்றிலிருந்து புதுச்சேரியென்னும் பாண்டிச்சேரி உச்சரிக்கப்படுகிறது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும்போது கடலோர நகரங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படியான பெருநகரங்களில் ஒன்றாக இருக்கிறது புதுச்சேரி. அதனை அடுத்த பெருநகரம் கடலூர்.

நவம்பர் 23, 2020

பக்தியின் புதிய முரண்நிலை : மூக்குத்தி அம்மன்

 

பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின்  உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

நவம்பர் 22, 2020

நகைச்சுவைப்படத்தின் ஒரு சட்டகம்: நாங்க ரொம்ப பிஸி

பொருட்படுத்தப்படும் கூறுகள்

பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின் உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

நவம்பர் 16, 2020

அருந்ததிராயின் தோழர்களோடு கொஞ்சதூரம்


மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்பட்ட நூலொன்றைப் பல்கலைக்கழகம் தனது  பாடத் திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறது.  நீக்கச் செய்ததின் பின்னணியில் ஒரு மாணவர் அமைப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் அதனை உறுதிசெய்கிறார்கள். அந்த அமைப்பு இப்போதைய அரசினை நடத்தும் கட்சியின் துணை அமைப்பு. இந்தத் தொடர்புச் சங்கிலிகள் மூலம் பாடத்திட்டக்குழுக்களுக்குப் பேரச்சத்தின் நிழல் காட்டப்பட்டுள்ளது. நீக்கம் மட்டுமே முதன்மை நோக்கம் அல்ல. இதுபோன்ற புத்தகங்களைப் பற்றிய சிந்தனையே வரக்கூடாது என்பதும் நோக்கமாக இருக்கக் கூடும் 

நவம்பர் 12, 2020

உணர்வுகளை எழுதும் நுட்பம்: உமா மகேஸ்வரியின் வெனில்லா

ஒரு சிறுகதைக்கு ஒற்றை நிகழ்வும் அதன் வழியாகத் தாவிச் செல்லும் மனவுணர்வுகளும் போதும் என்பதைத் தொடர்ச்சியாகத் தனது கதைகள் வழியாக நிரூபித்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் உமாமகேஸ்வரி. ஒற்றை நிகழ்வும் மிகக்குறைவான பாத்திரங்களின் தேர்வும் என்பதால், அவரது கதைகள் வாசிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் வாசித்தபின் அக்கதையைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ச்சியாக கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வாசித்தவரின் மனதிற்குள்  நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், அக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்களை ஒத்த மனிதர்களின் சந்திப்பை நினைவூட்டுக் கொண்டே இருப்பதாகவும் ஆகிக் கொள்கிறது.  

நவம்பர் 11, 2020

மறந்துபோன ஊர் அடையாளங்கள்

 


என்னுடைய பேரனை இடுப்பில் வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் எமிலி மாதவி. படம் எடுக்கப்பட்ட இடம் போலந்தின் பண்பாட்டு நகரமான க்ராக்கோ நகரின் புகழ்பெற்ற பூங்கா.

உள்நோக்கிய சுழற்சிகள்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அசத்துதீன் ஒவைசியும் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக்ஜனசக்தி கட்சியும் தலைவருமான சிராக் பஸ்வானும் விமரிசிக்கப்படுகிறார்கள்.

நவம்பர் 09, 2020

புலப்படா அரசியலும் அரங்கியலும்


வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன். புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன் 

நவம்பர் 06, 2020

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக


ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

நவம்பர் 05, 2020

கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி:சொல்கதைகளின் தொகுதி

 ‘ஒரு ஊரில’ என்று தொடங்கிச் சொன்ன கதைகளைக் கேட்டு – சொல்கதைகளைக் கேட்டு வளரும் சமூகங்கள் இப்போதும் இருக்கின்றன.  அவை சொல்லப்படும் கதைகள். சொல்லப்படும் கதைகளின் முதல் முதலாகச் சொல்லப்படுகின்றன என்பதாக இல்லாமல் ஏற்கெனவே அவை வேறுவிதமாகவும் சொல்லப்பட்டிருக்கும். நடந்த நிகழ்வுகளாகவோ, கேள்விப்பட்ட செய்தியாகவோ, வரலாற்றுக்குறிப்பாகவோ, அறிவியல் உண்மைகளாகவோ- கண்டுபிடிப்பாக – ஆச்சரியமாகவோ சொல்லப்பட்டிருக்கும். அப்படிச் சொல்லப்பட்ட ஒன்றை எழுத்தில் வாசிக்கும்போது எங்கேயோ கேள்விப்பட்டதின் சாயலாக இருக்கிறதே என்று தோன்றும்.

நவம்பர் 04, 2020

மேலைக்காற்றுக்குப் பதில் கீழைக்காற்று

 பிறமொழி எழுத்துகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் நோக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக நடந்துள்ளன. தழுவல்கள், சுருக்க அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என வரவு வைக்கப்பட்டதுபோலவே குறிப்பிட்ட மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருந்துள்ளன.

நவம்பர் 03, 2020

கரோனா என்னும் உரிப்பொருள்

 

நம் காலத்தின் பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல் விளம்பரங்களாக, காட்சித்துணுக்குகளாக, தொடர் கதைகளின் உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும் அலைத் துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது கோவிட் 19 என்னும் சொல் இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை.

நவம்பர் 01, 2020

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

 

ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத்தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம்.