பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்
தமிழின் நிகழ்கால இலக்கியத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை உயிர்மைப் பதிப்பகம் நடத்தியது. சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் -07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு, தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர், பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ, விமரிசனம் செய்தோ பேசி முடிப்பதும் என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு. ஏற்பாட்டின்படி முதல் நான்கு நூல்கள் அ.ராமசாமியின் பிம்பங்கள் அடையாளங்கள், மு. சுயம்புலிங்கத்தின் நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள், எம். யுவனின் கைமறதியாய் வைத்த நாள், எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு என்ற நான்கு நூல்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் எஸ் விஸ்வநாதன் (ப்ரண்ட் லைன்), சுகுமாரன், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் பேசி முடித்தனர். நான்காவது நூலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் மேடையிலி