ஜூலை 27, 2009

முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்


உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.

ஜூலை 14, 2009

வீடு


[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு

என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்]
இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள்
சி.சுப்பிரமணிய பாரதி
ஞானக்கூத்தன்
சு.வில்வரத்தினம்
பழமலய்
பசுவய்யா
சேரன்
மனுஷ்யபுத்திரன்
கண்ணதாசன்
இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்


ஜூலை 13, 2009

வளர்ச்சியின் அடையாளங்கள்: இமையத்தின் உயிர்நாடி


சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

உலகமே வேறு; தர்மங்களும் வேறு: புதுமைப்பித்தனின் இரண்டு கதைகள்

நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன?
பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா? அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள். முதுகலை படிக்க வரும் மாணவிகளிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.(கலைப் பிரிவுகள் மாணவிகளுக்குரிய பாடங்களாகி விட்டன)

ஜூலை 09, 2009

நிகழ மறுத்த அற்புதம்

சிறுகதை மூலம்: திலிப்குமார்
நாடகவடிவம்: அ.ராமசாமி


முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு ஹால்.
பின் இடது புறம் சமையலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது. பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால்
மூவர் அமரக் கூடிய ஒரு சோபா
அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள்.
வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.
தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய
ஸ்டேண்டில் வைக்கப் பட்டிருக்கிறது.
சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று
திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள்.
அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.
வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திரும்புகிறாள்.
படுக்கையறைச் சுவரில் இயேசுவின் படம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.
அதன் அருகில் சில நிழற்படங்கள். அவர்கள் இருவரும் இருக்கும் படங்கள்.
வெவ்வேறு வயதில்.
தயாராக இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவள் வாசலில் நின்றபடி
திருமதி: நான் போகிறேன்

ஜூலை 08, 2009

சுகமான சுமைகள்


படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான்
-சி.சுப்பிரமணிய பாரதி.

முன்னுரையாக சில கேள்விகள்

இந்திய/ தமிழகக் கல்விமுறை மேற்கத்திய மயமாகி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. மேற்கத்தியமாகி விட்டது என்பதற்காகப் பெரிதாக வருத்தப்பட வேண்டிய தில்லை. மேற்கத்தியக் கல்விமுறை வெறும் கணக்குப்போடுகிறவர்களையும் கங்காணிகளையும் மட்டும்தான் உருவாக்கியது என்று சொல்லப்படும் வாதங்கள் எல்லாம் உள்நோக்கங்கள் கொண்டன.மேற்கத்தியக் கல்விதான் எல்லோரும் கற்கலாம் எனச் சொன்னது; ஒருசாதிக்குள்ளேயே ஆசானையும் சீடனையும் வைத்திருந்த குருகுலக் கல்விமுறையை ஒழித்தது.ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்கவன் என்ற சுயமரியாதை யுணர்வு உண்டாகக் காரணமாக இருந்தது. எதனையும் பகுத்து ஆராய்ந்து கேள்விகள் எழுப்பும் அறிதல் முறையை நமக்கு அளித்ததும் அந்த மேற்கத்தியக் கல்விமுறைதான். இந்திய சுதந்திரத்திற்குமுன்பே மேற்கத்தியக் கல்விமுறை இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தது.ஆனால் சுதந்திர இந்தியாவில் நமக்குத் தேவையென வரித்துக்கொண்ட சில பாடங்களின் நோக்கம் இந்திய மனிதனின்/ சமூகத்தின் தேவை கருதியது தானா..? சமூகவியலின் பகுதிகளான மொழியியில், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றன இந்திய சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் முறையியலோடு உள்வாங்கப்பட்டிருக்கின்றவா...? அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முந்திய இந்திய வாழ்க்கைமுறைக்குத்திரும்பிப் போகும் நோக்கங் களோடு வந்து சேர்ந்திருக்கின்றவா...? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டியுள்ளன. கேள்விகள் கேட்கவேண்டியுள்ளன. 

ஜூலை 06, 2009

தி.ஜானகிராமனின் நாடகங்கள்

தமிழின் புனைகதைப் பரப்பிற்குத் தனது கதை நிகழ்வுப் பரப்பாலும், அப்பரப்பில் உலவிய விதம் விதமான கதாபாத்திரங்களாலும்-குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களின் புறவெளியின் நிலைபாட்டையும் மனத்தின் சுழற்சி யையும் எழுதிக்காட்டியதின் மூலம்-புதிய வீச்சையும் அலையையும் உருவாக்கித் தந்தவர் தி.ஜானகிராமன். நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தி.ஜானகிராமன் நாடகங்களையும் எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அவை அதிகம் கவனம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்:நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும்

இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்பு களாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்டன.