முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்

நமது காலச் சமூக ஊடகங்கள் பலருக்கும் பலவிதமான திறப்புகளைச் செய்கின்றன. ஒற்றைத்தள வாசிப்புக்குப்பதிலாகப் பலதள வாசிப்புகளைத் தரும் இயல்பு தானாகவே அவை உருவாக்கித்தருகின்றன. வாசிப்பைப் போலவே தனக்குள் இருக்கும் எழுத்தார்வத்திற்கும் திறப்புகளை வழங்குகின்றன. ஆசிரியத்துவத்தணிக்கை இல்லாமல் தாங்கள் எழுதியதைத் தங்கள் விருப்பம்போல வெளியிடலாம். அப்படியான வெளிப்பாட்டில் தொடர்ச்சியாகக் கண்டடையும் ஓர்மையால் ஒருவர் தனது எழுத்துப் பாணியைக் கண்டடைய முடியும். அப்படிக் கண்டடைந்த இருவரின் எழுத்துகளுக்குச் சிறிய அளவில் தூண்டுகோலாக இருந்துள்ளேன்.