இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிள்ளை சுமத்தல் என்னும் பேரனுபவம்: ச.விசயலட்சுமியின் உயிர்ப்பு

படம்
  இலக்கியம் என்றால் இலக்கியம்தான்; அதற்குள் எதற்கு தலித் இலக்கியம்? பெண் இலக்கியம்? என்ற குரல்களை எழுப்புவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

நம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம்

படம்
தமிழ்ப் புனைகதையின் தொடக்கக் கவனம் பெண்களை எழுதுவதிலேயே குவிந்திருந்தது. பாரதியின் சந்திரிகையும் வேதநாயகம் பிள்ளையின் ஞானாம்பாளும் ராஜம் அய்யரின் கமலாம்பாளும் மாதவைய்யாவின் பத்மாவதியும் சரித்திரங்களாக்கப்பட்டனர். விரிவான நாவல் வடிவம் மட்டுமல்ல. சிறுகதையின் தொடக்கநிலைகூட மங்கையர்க் கரசியின் காதலையும் குளத்தங்கரையில் சந்தித்துக்கொண்ட பெண்ணின் கதையையும்தான் சொல்லமுயன்றன. ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் லட்சியவாதமும் நல்லொழுக்கமும் தியாகத்தின் வடிவமும் கொண்டவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறியாதவர்கள். அறிய விரும்பாதவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லது அனுப்பப்பட்டவர்கள் என்பதாகக் கதையெழுதிய ஆண்கள் எழுதிக் காட்டினார்கள். ஆண்கள் எழுதியதைப் போலவே தொடக்ககாலப் பெண்களும் எழுதிக்காட்டினார்கள். 

வேலியிடப்பட்ட குடும்பங்கள்:பாமாவின் முள்வேலி

படம்
வேலி என்னும் சொல்லுக்குச் சொத்து, எல்லை, வரையறை, பாதுகாப்பு எனப் பருண்மையான பொருள்கள் உண்டு. நாலுவேலி நிலம், பயிரை மேயும் வேலிகள், வேலிதாண்டிய வெள்ளாடு எனச் சொற்கோவைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சொற்கோவைகள் பால் வேறுபாடின்றி இருபாலாருக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால் தாலியே வேலி எனச் சொல்லும்போது பாலடையாளம் பெற்று பெண்ணுக்குரியதாகச் சொற்கோவை மாறி நிற்கிறது. வேலியாக மாறும் தாலிதான் பெண்ணுக்குப் பெரிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் கருத்தியல் தோற்றத்தின் – பரப்பின் – இருப்பின் கருவியாக மாறிப் பெண்களைச் சுற்றி வலம் வருகிறது.

கலைஞர் சந்ரு

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்து விட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 

மழலையர் பள்ளிகளும் குறைகூலித் தொழிலாளிகளும்

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்துகொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுற

தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு

படம்
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.