இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

20 நாட்கள் 2000 கிலோமீட்டர்கள்

படம்
 மதுரையிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய நாள் (டிசம்.16,2019) தொடங்கிக் கண்டிக்கு ரயில் பயணம், நுவரெலியாவுக்கும் ராகலைக்கும் சிறுபேருந்துப் பயணம், அங்கிருந்து சபரகமுவவிற்குப் பல்கலைக்கழக வாகனத்தில் பயணம். பயண அலுப்பு எதுவுமில்லை. ஆனால் சபரகமுவவிலிருந்து திரிகோணமலைக்குப் போன 9 மணி நேரப் பயணத்தில் ஏழரைமணி நேரப்பயணம் சாதாரண இருக்கை கொண்ட பேருந்தில் மலைப்பாதையில் அலைக்கழித்துச் சுழற்றிப் போட்ட பயணமாக இருந்தது. வளைந்து வளைந்து திரும்பும் மலைப்பாதை வளைவுகளில் தூங்குவதும் சாத்தியமாகவில்லை. 

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்

படம்
தமிழ்நாட்டின் இப்போதைய விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பிறந்து சொந்த ஊரிலும் மதுரையிலும் பள்ளிக் கல்வி கற்றவர். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் கல்லூரிக்கல்வியைக் முடித்தவர். பட்டப்படிப்பில் விலங்கியல் பட்டமும் பட்டமேற்படிப்பில் தமிழ் இலக்கியமும் பயின்றவர். புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். பணியிடைக்காலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் நாவல் எழுத்தாளர்களில் முன்னோடியான அ.மாதவய்யாவின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் திருநெல்வேலியில் வசித்துவருகிறார் ராஜ்கௌதமன்.

எதிர்பாராத சந்திப்புகளும் எதிர்பார்த்த சந்திப்புகளும்

உள்ளூர்ப் பயணங்களை ஓரளவு முன்திட்டமிங்களோடு தொடங்கலாம். ஆனால் அயல் நாட்டுப் பயணங்களை முழுமையாக முன் திட்டங்களோடு தொடங்கமுடியாது. ஐந்து நாட்களில் (டிசம்பர் 23 -27) முடிந்திருக்கக் கூடிய அண்மைய இலங்கைப் பயணத்தை இருபது (டிசம்பர் 16 -ஜனவரி 5) நாட்களுக்குரியதாக விரிவுபடுத்தியதன் பின்னணியில் சந்திப்புகளே காரணிகளாக இருந்தன. சந்திப்புகள் என்பதில் நான் சந்திக்க நினைத்தவர்களும், என்னைச் சந்திக்க நினைத்தவர்களுமென இருவகையும் அடக்கம்.

அச்சம் தங்கும் கிளிக்கூண்டு

படம்
யாழ்ப்பாணத்தில் அந்த நண்பரைச் சந்திக்கும் வரை அந்த அச்சம் தோன்றவே இல்லை.ஆனால் அவரது எச்சரிக்கைச் சொற்கள் கூண்டிற்குள் மூளையெனும் கிளியை அடைத்துவிடப் பார்த்ததென்னவோ உண்மைதான்.

சிறார்ப்போராளியின் அனுபவங்கள்

படம்
ராதிகா பத்மநாதனின் என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில்10 நிமிட நடை . கவி. கருணாகரன் வீட்டிலிருந்து கிளம்பி, கிளிநொச்சி கவின் கலைச் சோலை அரங்கத்திற்குப் போக அவ்வளவு நேரம்கூட ஆகாது. வீட்டைவிட்டுக் கிளம்பி மண்சாலையில் திரும்பியபோது அந்தப்பெண் வந்தார். மிகக்குறைவான நண்பர்களுடன் ஓர் உரையாடலுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அவரும் வந்ததால் எங்களோடு நடந்தபடி வந்தார். நடக்கும்போது ஒன்றும் பேசவில்லை. கருணாகரன் தான், அவரது. பெயர் ராதிகா என்று சொல்லிவிட்டுக் கடைசிக் கட்டப்போரில் பாதிக்கப்பெற்ற இளம் போராளி, அவரது வாழ்க்கை ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது. அவரே அதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு மற்றவற்றை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

அம்மாச்சி: பெண்களை விடுதலை செய்யும்

படம்
இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன்.

மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்

படம்
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 

நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி

படம்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில். 

பூனைக்குட்டியும் பூக்குட்டியும் ஒரு காரோட்டியும்

ஒரு பயணத்தில் நினைவில் இருப்பவர்கள் எப்போதும் நீண்டகால நண்பர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களைத் திரும்பத் பார்த்திருப்போம்; அவர்களோடு பேசியிருப்போம்; பேசியனவற்றுள் உடன்பட்ட கருத்தும், உடன்படாத கருத்துமெனப் பலவும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.