இடுகைகள்

ஆகஸ்ட், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.

அடையாள அரசியல்: கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்துச் சில பரிசீலனைகள்

படம்
இங்கே உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பெருமிதங்கள் என்னும் அடையாள அரசியலைப் பேச நினைக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று எட்டாவது உலகப் போட்டிகளில் நேரலைகளைப் பார்க்கச் சொல்கிறது. அங்கிருந்து இன்று வரை நீளும் காட்சிகளை முன்வைத்துப் பேசுகிறது எட்டாவது உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நல்ல வேளையாக சச்சின் டெண்டுல்கா் சதம் அடிக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அவா் மட்டும் சதம் அடித்திருந்தால் அடுத்து கங்குலிக்கும் யுவராஜ் சிங்கிற்கும் அந்த உற்சாகம் தொற்றி இருக்கும். ஆஸ்திரேலியா அடித்திருந்த அந்த வெற்றி இலக்கை - 358 ரன்களை - இந்திய வீரா்கள் எட்டிப்பிடிக்கவும், வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கவும் முயற்சி செய்திருப்பார்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும் பட்சத்தில் டெண்டுல்கர் ‘பாரத ரத்னா‘ ஆகியிருப்பார். அரசாங்கங்களும் அவருக்கு வீடுகளையும் நிலங்களையும் வாரி இறைத்திருக்கும். கங்குலிக்கும் மற்றவா்களுக்கும் கூட அரசுகள் இப்படி நிறையத் தந்திருக்கலாம். பிரபலத்துவமும், கிளறிவிடப்பட்ட வெகுஜன உணா்ச்சிப் பெருக்கமும், இப்படி நிறையச் சாதித்திருக்கும். ஆனால், இந்தி

அழித்து எழுதும் ஆற்றல்-

கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இலக்கியக் கல்வியின் இன்றைய நிலை

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு ஒரு தமிழாசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து அவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் காட்ட முயல் வாரானால் அவரது பாடு பெரும் திண்டாட்டமாக ஆகிவிடக் கூடும்.ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப் படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். அதிலும் தமிழில் அலைவரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன.

இவை மொழிவிளையாட்டுகள் அல்ல; போர்

படம்
என் கையிலிருக்கும் செல்போன் [Cell phone] கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாள் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழி பெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த மொழி பெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்த மொழி பெயர்ப்பு. ஏற்கெனவே இருந்த வீட்டுத் தொலை பேசியையும் கையில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தை விட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் ‘கைபேசி’ என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது. நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்.அலையும் இடங் களுக்கெல்லாம் தகவலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதாலும், அங்கிருந்த படியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழி பெயர்ப்பும் போதாது என்று தான் தோன்று கிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வே

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

காஞ்சா அய்லய்யா நமது காலத்தில் வாழும் சமூகப் பொறுப்புள்ள பேராசிரியர்களுள் ஒருவர். ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்த அவர் தற்சமயம் ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணி ஆற்றுகிறார் . இந்திய சாதி அமைப்பை விமரிசிக்கும் அவரது எழுத்துக் களைத் தொடர்ந்து எழுதியதால்  இந்திய அளவில் அவருக்கு அறிமுகம்  உண்டு.நான் ஏன் இந்து அல்ல ( Why I am not a Hindu) என்ற அவரது நூல் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (தமிழில் பேராசிரியர்கள் மு.தங்கவேலுவும் ராஜமுருகு பாண்டியனும் இணைந்து மொழி பெயர்க்க அடையாளம் வெளியீடாக 2001 - ல் வெளி வந்தது) தலித்துக்களும் சூத்திரர்களும் இந்து மதத்தின் ஆன்மீக நிலைபாட்டிற்கும் சடங்கியல் வெளிப்பாட்டிற்கும் வெளியே இருப்பவர்கள் எனற வாதத்தை  முன் வைத்து அதற்கான ஆதாரங்களை வரலாற்று நிலையிலும் நிகழ்காலச் சடங்கியல் நிலையிலும் எடுத்துக் காட்டி அடுக்கிக் காட்டியுள்ளது அந்நூல்.

தேசந்தழுவிய களியாட்டங்கள்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதில் பங்குபெறுபவா்கள் விளையாட்டு வீரா்களும் நடுவா்களும் மட்டுமல்ல. முடிவுகளைத் தரப்போவது வீரா்களின் திறமைகளும் விதிகளும் நடைமுறைகளும் மட்டுமல்ல. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் பின்னணியில் மட்டுமல்ல, மொத்தக் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் இருப்பது வியாபாரம் - சர்வதேச நவீன வியாபாரம் என்பதை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உணா்ந்து கொண்டேதான் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. உணா்த்தியபடியேதான் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது.

தொலைந்து போன கடந்த காலங்கள்

தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப்போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில் திரைப்படமும், அமீர் இயக்கத்தில் வந்துள்ள பருத்தி வீரன் திரைப்படமும் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.நம்பிக்கைகளை வெளிப்படுத்த முக்கியக் காரணம் இவ்விரண்டு படங்களும் திரையிடப் பட்ட இடங்களில் எல்லாம் நல்ல வசூலைத் தந்துள்ளன என்பதுதான். நம்பிக்கைகள் தான் மனித வாழ்க்கைப் பயணத்தின் அடிப்படைகள். இருக்கும் நபர்கள் மீதோ, இல்¢லாப் பொருட் களின் மீதோ ஏற்படுகின்ற சின்னச் சின்ன ஆச்சரியங்கள் அல்லது வித்தியாசங்கள் தான் நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்கள். தனிமனிதர்களின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் இந்த விதி, தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் பொருந்தக் கூடியது தான். 

கத்தார் : கனவுகளைக் காட்சியாக்கிய கலைஞன்.

படம்
நான் அவரது மேடை நிகழ்வை அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டடமேடையில் பார்த்தேன். அப்போது நான் ஆய்வு மாணவன். 1000 பேருக்கு மேல் நாற்காலிகள் போட்டு அமரக்கூடிய அரங்கு அது. ஆனால் அன்று நாற்காலிகள் எல்லாம் நெருக்கி முன்னோக்கி நகர்த்தப்பட்டு உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்னால் இன்னொரு ஆயிரம்பேர் நின்று பார்த்தார்கள். அவ்வளவுபேரும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள். புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுக்க முக்கியமான நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அவரது குழு அழைத்து வரப்பட்டிருந்தது. திறந்தவெளி அரங்குகளில் கட்டண நிகழ்ச்சியாக நடத்தக் கிடைத்த அனுமதி பின்னர் மறுக்கப்பட்ட நிலையில் எல்லா ஊர்களிலும் மூடிய அரங்குகளின் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன

மதுரையில் மறுபடியும் ஒரு நாடக இயக்கம்

1970- களின் இறுதியில் மதுரையில் செயல்படத் தொடங்கிய நிஜநாடக இயக்கம் அதன் முழுவீ£ச்சையும் வெளிப்படுத்திய காலம் எண்பதுகள் தான். தெரு நாடகங்கள் மூலமாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கும் கல்லூரிகளின் வளாகங்களுக்குள்ளும் நுழைந்த பின்னர் எண்பதுகளின் இறுதியில் பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்கும் மேடை நாடகங்களுக்கு மாறியது. ஒரு நாள் நாடக விழா, மூன்று நாள் நாடக விழா என நிஜநாடக இயக்கம் நடத்திய நாடக விழாக்களில் பங்கேற்ற பார்வையாளர்களில் அதிகமானவர்கள் நகரத்துக் கல்லூரிகளின் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் தான். தன்னெழுச்சியாகப் பார்வையாளர்கள் நாடகம் பார்க்க வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், கல்லூரிகளில் பணியாற்றிய ஆர்வம் கொண்ட ஆசிரியர்களின் உதவியோடு மாணாக்கர்களை அரங்கை நோக்கி வரவைக்க முடிந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுரையில் அத்தகைய முயற்சிகள் செய்வதை நிஜநாடகம் கைவிட்டு விட்டு ஆண்டுக்கு ஒரு நாடகம் எனத் தயாரித்து மேடையேற்றுவதோடு நின்று விட்டது. நிஜநாடக இயக்கம் விட்ட இடத்தைத் தொடர இப்பொழுது மதுரையில் ஒரு நாடகக் குழு முயன்றுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.