இடுகைகள்

அக்டோபர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோரக்கனவைக் கலைத்தல் வேண்டி

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

படைப்பாளுமையின் வெளிப்பாடுகள்: அது ஒரு கனாக்காலம், கஸ்தூரி மான்

படம்
அந்த வருடத் தீபாவளிக்கு வருவதாக இருந்த ஐந்து திரைப்படங்களில் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட படங்கள் மூன்று. பாலு மகேந்திராவின் ’அது ஒரு கனாக்காலம்’, லோகித்தாஸின் ’கஸ்தூரிமான்’, சேரனின் ’தவமாய் தவமிருந்து’. இப்படித் திட்டமிடுதலின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இயக்குநரின் அடையாளத்தைச் சொல்லும் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீா்மானம். அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காரணமும் அமைகின்றது.  அத்தகைய படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்து. படைப்பாளிகளின் அடையாளத்தோடு வரும் படங்களுக்குத்தான் இந்த ஆபத்து. ஸ்டார்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் ஆகத் துடிக்கும் நடிகா்களின் அடையாளத்தோடு வரும் படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை.

நோபல் பரிசு பெற்ற பிண்டர்

படம்
மரபுக்கலைகளிலிருந்து இந்திய நாடகத்தை உருவாக்குதல் என்னும் மோகினிப் பேய் இந்திய நாடகத் துறையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் - அநேகமாக 1993 ஆக இருக்கக் கூடும்- நானும் கேரளத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு நாடகம் படிக்க வந்திருந்த சிபு எஸ் . கொட்டாரம் என்ற மாணவனும் ஹெரால்ட் பிண்டரைப் (Harold Pinter) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நவீன நாடக்காரர்கள் பலருக்கும் கூட அந்த மோகினியிடம் காதல் இருந்த நேரம் தான். நானோ அந்தக் காதல், பெருந்திணைக் காதல் என்று நம்பியவன். சிபு எஸ் கொட்டாரத்திற்கும் அதே எண்ணம் உண்டு. இருவரும் பிண்டரைப் பற்றிப் பேசக் காரணமாக இருந்த நாடகம் பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday Party) தான். அது அவரது முக்கியமான நாடகம். அந்நாடகம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் தமிழில் மொழி பெயர்த்து மேடை யேற்றலாம் என்றும் அவர் சொன்னார்.

குஷ்பு:தமிழ் விரோதமா? பாதுகாப்பா?

படம்
இந்த இரண்டாம் கட்டப் போர் ஒருவிதத்தில் குதிரைப் படைத் தாக்குதல் என்று வருணிக்கத்தக்கது. சட்டம் என்னும் குதிரை ஏறி வாதம், மறுப்பு, சாட்சி, நிபந்தனைகள் என்று பலவித வாள்களுடன் தமிழ்ப் பண்பாடு காக்கும் வீரத்தமிழர்கள் நீதிமன்றக் களங்களில் குஷ்புவைச் சந்திக்கத் தயாராகியுள்ளனர். பழம்பெரும் நகரமான மதுரையம்பதியிலிருந்து தொடங்கிவிட்ட இந்தப் போர் திருச்சி, நெல்லை, சேலம் என்னும் மாநகரங்களின் மாவட்ட நீதிமன்றக் கூண்டுகளிலும், சங்கரன்கோவில், திருக்கோவிலூர், கோவில்பட்டி எனச் சிறு நகரங்களின் தாலுகா நீதிமன்றக் கூண்டுகளிலும் நடைபெறப்போகிறது.