வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி

08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.