பிப்ரவரி 29, 2016

கல்வியுலகம் -படைப்புலகம் -நீண்ட விவாதம்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.

பிப்ரவரி 21, 2016

மேல்பார்வை X கீழ்பார்வை = குடலாப்ரேஷன்

ஆபரேஷன் சக்சஸ் என்று சொன்னபடி வந்த ஜூனியர் டாக்டர்களின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார் டாக்டர் அ.ரா. . சட்டென இந்த ஆபரேஷன் மெத்தடாலஜியை மாணவர்கள் புரிந்து கொண்டதில் உள்ளபடியே அவருக்கு மகிழ்ச்சி. அவர் மேஜை மீதிருந்த ஒரு படத்தில் கோமாளி சிரித்துக் கொண்டிருந்தான். அதில் இருந்த வாசகம்-
‘ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை மனிதனோடிருந்தது; அந்த வார்த்தை வார்த்தையாயிருந்தது’

பிப்ரவரி 16, 2016

அழகுகுட்டிச் செல்லம் என்னும் சோதனை முயற்சி


 எல்லாக் கலைகளிலும் சோதனை முயற்சிகள் விதம்விதமானவை.

பெரும்போக்குக்கு எதிரான மாற்று முயற்சிகளாக மட்டுமே இல்லாமல், பெரும்போக்கைத் திசை திருப்பி இன்னொரு பெரும்போக்கை உருவாக்க நினைப்பதுகூட சோதனை முயற்சிகள் தான். ஒற்றை இழையில் சொல்லப்படும் கதைப் பின்னலைக் கொண்ட பெரும்போக்குச் சினிமாவுக்குள் பல கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டுவதின் மூலம் பார்வையாளர்களைத் திளைப்புக்குள் ஆழ்த்த முடியும்; அவர்களின் ரசனைக்கான இன்னொரு வடிவத்தைத் தரமுடியும் என நினைப்பதும் சோதனை முயற்சிகள் தான். தெரிவுசெய்யப்பட்ட தலைப்பில் முன்னெடுக்கப்படும் விவாதங்களின் முன்னோடியான நீயா? நானா? நிகழ்ச்சியின் இயக்குநரான நெல்லை ஆண்டனி தயாரித்த அழகுகுட்டிச் செல்லம் என்னும் படம் அப்படியானதொரு சோதனைப் படம் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கக் கூடிய ஒன்று.   

பிப்ரவரி 09, 2016

நம்பிக்கையை விதைத்து நம்பிக்கையை அறுவடை செய்யலாம்.

தமிழகத் தேர்தலை ஊடகங்கள் தான் முன் தொடங்கி வைத்தன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக் கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம்.

பிப்ரவரி 08, 2016

எண்ணங்களால் இணையும் நிகழ்வுகள்: நேசமித்ரனின் பிரசவ வார்டு


பிரசவ வார்டு - இந்தமாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதையின் தலைப்பு. நிகழ்வெளியைத் தலைப்பாக்கிக் கதையை எழுதியுள்ளவர் நேசமித்ரன்.

பிப்ரவரி 03, 2016

தாரை தப்பட்டை என்னும் கீதாசாரம்


தனது படங்களுக்காக இந்திய அளவில் விருதுகளைப் பெற்றுள்ள -தமிழின் முக்கிய இயக்குநராகக் கருதப்படுகிற பாலாவின் ஏழாவது படம் தாரை தப்பட்டை. இவரைப் பாராட்டும் மணிரத்னம்  ‘அவ்வப்போது வேறுவேறு சூத்திரங்களை முன்வைத்துத் திரைக்கதையை அமைத்துப் படங்களை இயக்குகிறார்; ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவதில்ல்லை’ என்கிறார்.  சேது, நந்தா, பிதாமகன் வரையிலான பாலாவின் முதல் மூன்று படங்கள் வரையிலும் வித்தியாசங்களைத் தேடும் இயக்குநர் பாலா என்றொரு தோற்றம் இருந்தது. ஆனால் நான் கடவுள், அவன் இவன், பரதேசி என பிந்திய மூன்று படங்களோடு தாரை தப்பட்டை என்னும் ஏழாவது படத்தையும் பார்த்தபின்பு, ஒட்டுமொத்தமாக அவரது எல்லாப் படங்களுமே ஒரேவிதக் கருத்தை முன்வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

பிப்ரவரி 01, 2016

எளிமையின் அழகியல் : கண்டராதித்தனின் திருச்சாழல்

எனது கவிதை வாசிப்பு எளிமையானது. தேடிக்கண்டடைவது. தேடும்போது சலிப்பில் விலகிப்போவதுண்டு. நினைவுகளால் நிறுத்தித் தொடர்வதுண்டு. நிறுத்தப்பட்டது நினைவுக்கு வராமலே போவதுமுண்டு. கவிதை வாசிப்பில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இப்படித்தான் என நினைக்கிறேன். ஒன்று நினைவிலாடும்போது திரும்பவும் தேடிப்போகத்தூண்டும். சிரிப்பும் நகைப்பும் சிந்தனைத் தெரிப்பும் கைகூடிவந்தால் நீண்ட பயணம் நிச்சயம்.