தொடரும் ஒத்திகைகள்

அங்கம் : 1 காட்சி : 1 இடம் : நாடக ஒத்திகைக்கூடம் . சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள் , புகைப்படங்கள் உள்ளன . நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன . மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன . அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர் . அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை . மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர் .