வெளிகடக்கும் மணவாழ்க்கைகள்

படிப்பதற்காக, வேலை பார்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ள இந்திய ஆண்களில் சிலர் அந்தந்த தேசங்களின் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு இருக்கின்றனர்.போலந்துக்கு வந்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரண்டு மாதத்தில் நான்கு இந்தியர்களை – போலந்துப் பெண்ணை மணந்து கொண்டு இங்கு தங்கியிருக்கும் – இந்தியர்களைச் சந்தித்து விட்டேன். அந்நால்வரில் இருவர் தமிழர்கள். அவர்கள் ஐரோப்பாவில் நிரந்தரமாகத் தங்கிவிட இந்தத் திருமணங்கள் உதவும் என்ற குறுகிய லாபம் பின்னணியில் இருந்தாலும், அதற்காகத் தனது அந்தரங்க வாழ்வையும் நீண்ட காலத்தையும் கொடுக்கத் தயாராகும் மனநிலையைச் சுலபமாக ஒதுக்கிவிட முடியாது.