ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது அவர்கள் சந்தித்த மனிதர்களின் இயங்குநிலையை விளக்கும் சொல்லாக ஓரியண்டல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமயம் போன்ற பழைய நிறுவனங்களின் நம்பிக்கை சார்ந்த விதிகளானாலும்சரி, அரசு, கல்வி நிறுவனங்கள்,சட்டம்- நீதிமன்றம், மருத்துவமனை போன்ற புதிய அமைப்புகளின் விதிகளானாலும்சரி மனிதனின் தேவையை மையப்படுத்தி உடனடி மாற்றங்களுக்குத் தயாராகும் - ஆக்சிடெண்டல்(Accidental)- தற்காலிக மனப்போக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறையில் இருக்கிறது. ஆனால் நாங்கள் சந்தித்த - ஐரோப்பா அல்லாத கண்டத்து மனிதக் கூட்டங்களிடம், அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து , மலேசியா போன்ற நாடுகளின் மனிதர்களிடம் அத்தகைய போக்கு இல்லை. மேற்குலகத்தவர்களாகிய வெள்ளையர்களிடமிருந்து ...