சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

நண்பகல் நேரத்து மயக்கம் – சினிமாவைப்பார்த்து(மார்ச்11)விட்டு அச்சிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். தொடங்கியவுடனேயே சில நாட்களுக்கு முன்பு வாசித்த அந்தக்கதை நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த கதை பீத்தோவனின் சிம்ஃபொனி. எழுதியவர் சரவணகார்த்திகேயன். அக்கதை கிழக்கு டுடே இணையப்பத்திரிகையில் வந்துள்ள குறிப்பை முகநூலில் சொல்லியிருந்தார் சரவணகார்த்திகேயன். அதில் நான் வாசிக்கவிலை. எழுத்தாளர் சிஎஸ்கே (writercsk.com) என்ற அவரது வலைப்பூவில் கதையை வாசித்திருந்தேன். உயிர்மையில் வந்த நூல்கள் தவிர அவரது எழுத்துகளில் பலவற்றை அதில் தான் வாசித்திருக்கிறேன் .