இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்

படம்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது.  எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன்.  குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன். 

உலக அரங்கியல் நாள் வாழ்த்துகள் -2021

படம்
உலக அரங்கியல் நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிய நிறுவனம் ஹெல்சிங்கி உலக அரங்கியல் நிறுவனம்(1962). அந்நிறுவனம் மட்டுமல்லாமல் அரங்கியல் பள்ளிகள், கல்லூரிகள், குழுக்கள் என ஒவ்வொன்றும் மேடைநிகழ்வு, கருத்தரங்கம், உரை, மதிப்பளித்தல் எனக் கொண்டாடித் தீர்க்கும் ஒரு கொண்டாட்ட நாள். கடந்த ஆண்டிலேயே கோவிட் 19 தாக்கத்தால் அதன் பொலிவிழந்து விட்டது. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையவழி நிகழ்வுகளே ஒருங்கிணைக்கப்படுகின்றன. உலக அரங்கியல் நாள் நிகழ்வின் உச்சம் அந்த நாளில் தரப்படும் செய்தியும் அதனை வழங்கும் அரங்க ஆளுமைத் தேர்வும் தான். இந்த ஆண்டுக்கான அரங்கியல் ஆளுமையாகத் தேர்வு பெற்றுள்ளவர் ஹெலன் மிர்ரன்

தொலைநோக்கில் ஒரு நோக்கு

படம்
2003 -இல் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உயிர்பலித் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பண்பாட்டாய்வாளர்கள் மற்றும் செயல் பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் ஆளானது. ஆனால் வெகுமக்கள் அச்சட்டத்தை எதிர்க்கும் மாற்றுவடிவங்களைக் கண்டுபிடித்து நிறைவேற்றினார்கள். எதிர்த்தார்கள். அதனால் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாறு தெரிந்திருந்தாலும் இப்போது பாரதீய ஜனதாவின் தொலை நோக்குப் பத்திரம் அதனைத் திரும்பக் கொண்டுவருவோம் என்கிறது. அப்போது ஞாநியின் தீம்தரிகிடவில் எழுதிய கட்டுரை இது: அதன் தலைப்பு: அந்தமுறை நானும்....

கவிதை தினத்தில்...

படம்
கவிதைகள் தினத்தையொட்டி நேற்று மனுஷ்யபுத்திரன் தனது வருத்தமான பதிவை எழுதியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் -2018 ,உலகக் கவிதை நாளையொட்டி 30 கவிதைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தேன் என்பதை முகநூல் நினைவூட்டியது. அதல்லாமல் வெவ்வேறு ஆண்டுகளில் கவிதை தினத்தில் கவிதைகளைப் பதிவேற்ற்றம் செய்துள்ளேன். நாற்பது கவிகள் இக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியாகப் பேசும் கவிதைகள்.

திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்

”தமிழர்களை வளர்ச்சி அடையச் செய்து தமிழ் வளர்ப்போம்” - இந்த வழிமுறையை தி.மு.க. நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. அதன் ஆட்சியில் திராவிட/ தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட்டார்கள். கல்வித்தந்தைகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள். சேவைப்பிரிவு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற உற்பத்தி சாரா தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பன்னாட்டு மூலதனக்குழுமங்களோடு போட்டிப் போடவும் தயாராக உள்ளனர். இந்த நகர்வு ஒவ்வொன்றிலும் தமிழ் மொழியாகவும், கலையாகவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகக் குறைவு. தமிழ்த்தேசிய தனியார் நிறுவனங்களின் பண்பாட்டுப் பங்களிப்பு எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

ஒளி ஓவியர் செ.ரவீந்திரன்

படம்
  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணை வேந்தர் பேரா. ஆ.ஞானம் சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்பவர் பேரா.செ.ரவீந்திரன். இடம் புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அடுத்துள்ள லே ப்ரான்சே திறந்த வெளி அரங்கம். அந்தப் படத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதிக்கு முகம் காட்டிப் பார்வையாளர்களுக்கு முகம் தெரியாமல் நிற்பது நான். தேதி நினைவில் இல்லை. ஆண்டு 1991 ஆண்டாக இருக்கலாம்.

ஈழத்தமிழ் இலக்கியம்: எழுதப்பட்டனவும் எழுதப்படுவனவும்

படம்
பேராசிரியர் அ. ராமசாமி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். தொடர்ச்சியாக ஈழ இலக்கிய புத்தகங்களை வாசித்து அது பற்றி எழுதிவருபவர்.அவருடனான மின்னஞ்சல் வழியான நேர்காணல் இது நேர்காணல் செய்து அகழ் இதழில் வெளியிட்டபோது நேர்காணலுக்குத் தந்த தலைப்பு:   வெற்று இரக்கத்தைப் பெறக்கூடிய எழுத்துகள் அலுப்பானவை:

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தன.

சாதியும் தேர்தலும்:இமையத்தின் தாலிமேல சத்தியம்

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது.பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 70 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாதல் சர்க்காரின் ஏபங் இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் -

படம்
இந்தியக் கலை என்னும் கருத்துரு ‘நவீன இந்தியா எப்படி இருக்கவேண்டும்?’ என்பதற்கு இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் பண்டித நேருவுக்குத் தீர்க்கமான கனவுகள் இருந்தன. இக்கனவை நிறைவேற்றப் பொருளாதாரத்துறையில் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லாடலை முன்வைத்து வேளாண் வளர்ச்சிக்காகப் பெரும் அணைகளையும், தொழில் வளர்ச்சிக்காக க் கனரகத் தொழிற்சாலைகளையும் உருவாக்கும் திட்டங்களைத் தீட்டினார். அதுபோலவே கலை, இலக்கியத்துறையில் இந்தியத்தனம்கொண்ட கலை இலக்கியங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காக உருவாக்கப்பட்டவையே ஒவ்வொரு துறைக்குமான அகாதெமிகள். இலக்கியத்திற்காக சாகித்யா, நாடகம் மற்றும் மேடைக்கலைகளுக்காக சங்கீத் நாடக், ஓவியம் மற்றும் நுண்கலைக்காக லலித்கலா என அவர் காலத்தில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்காக எழுதப்பட்ட திட்ட முன்வரைவுகள் எண்பதுகளில் செயல்வடிவம் பெற்றன.

பெண்ணெழுத்துகள் : நகர்வின் ஏழு சிறுகதைகளை முன்வைத்து

படம்
  டிஸ்கவரி புக்பேலஸின் நிலவெளி என்ற அச்சிதழின் நீட்சியாக வரும் ‘நகர்வு’ இணைய இதழ் தனது மூன்றாவது இதழைப் பெண்கள் சிறப்பிதழாகப் பதிவேற்றம் செய்துள்ளது. கவிதை, கதை, நூல் மதிப்புரை எனப் பெண்களின் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ள சிறுகதைகள்:            1.     உமா மகேஸ்வரி – மோனா 2.     குதிரைச்சவாரி – நறுமுகை தேவி 3.     கொலப்பசி – நாச்சியாள் சுகந்தி 4.     பிடிமானக்கயிறு – அகிலா 5.     மறைப்பு – ப்ரியா 6.     உள்ளங்கை அல்லி - அம்பிகாவர்ஷினி 7.     வெள்ளைப்பூனை – லாவண்யா சுந்தரராஜன்

பாரதி நினைவுகள் : எட்டயபுரமும் ஏழாயிரம் பண்ணையும்..

படம்
எட்டயபுரத்திற்குச் சென்ற முதல் பயணத்தின்போது திரும்பத்திரும்ப இந்த ஊருக்கு வரவேண்டியதிருக்கும் என்று உள்மனது நினைத்திருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் பாரதியின் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி வீட்டிலிருந்த பொருட்களைப் பார்த்ததையும் வீடிருக்கும் அந்த வீதியில் இரண்டு தடவை நடந்ததையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அது நெல்லைக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரத்தில் . ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு எட்டயபுரத்தின் ஒவ்வொரு தெருவும் நடந்த இடங்களாகி விட்டன. ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவையாவது சென்று வரவேண்டிய அலுவலக நடைமுறையை உருவாக்கித் தந்துவிட்டுப் போய்விட்டார் பேரா. க.ப. அறவாணன் அவர்கள்தான்.

பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்

படம்
மனோன்மணியத்தில் நான் இணைப் பேராசிரியராக இணைந்து கொண்ட நாள் 1997,பிப்ரவரி,14, பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒருநாள், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த முனைவர் மரியஜான் என்னிடம் வந்து ‘மேடம், மகளிர் தினக்கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாங்க’ என்றார்.

பேரா. இராம.சுந்தரம்: நினைத்துக்கொள்கிறேன்

படம்
  முதுகலை படிக்கும் காலத்திலேயே அறிமுகமாகிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்ட பேராசிரியர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் பேரா.இராம.சுந்தரம். நண்பர்களாகத் தொடரும் பேராசிரியர்கள் பலரையும் எனது நெறியாளரின் இருக்கைக்கு முன்புதான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சில் நானும் கலந்துகொண்டதின் வழியாக ஆசிரிய - மாணவ உறவைத் தாண்டி நண்பர்களாகிவிடுவோம். தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டவர்.

மாற்றப்படும் சொல்லாடல்கள்

தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது. வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன.