உலக அரங்கியல் நாள் வாழ்த்துகள் -2021
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலக அரங்கியல் நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிய நிறுவனம் ஹெல்சிங்கி உலக அரங்கியல் நிறுவனம்(1962). அந்நிறுவனம் மட்டுமல்லாமல் அரங்கியல் பள்ளிகள், கல்லூரிகள், குழுக்கள் என ஒவ்வொன்றும் மேடைநிகழ்வு, கருத்தரங்கம், உரை, மதிப்பளித்தல் எனக் கொண்டாடித் தீர்க்கும் ஒரு கொண்டாட்ட நாள். கடந்த ஆண்டிலேயே கோவிட் 19 தாக்கத்தால் அதன் பொலிவிழந்து விட்டது. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையவழி நிகழ்வுகளே ஒருங்கிணைக்கப்படுகின்றன. உலக அரங்கியல் நாள் நிகழ்வின் உச்சம் அந்த நாளில் தரப்படும் செய்தியும் அதனை வழங்கும் அரங்க ஆளுமைத் தேர்வும் தான். இந்த ஆண்டுக்கான அரங்கியல் ஆளுமையாகத் தேர்வு பெற்றுள்ளவர் ஹெலன் மிர்ரன்
அரங்கியல், சினிமா, தொலைக்காட்சி என ஒவ்வொன்றின் தொடர்ச்சியிலும் தனது நடிப்பின் மூலம் அரங்கியல் வாழ்க்கைய வாழ்ந்துவரும் ஹெலன் மிர்ரன் நடிப்புக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். தி குயின் பட த்தில் நடித்த தற்காக 2007 இல் அகாடெமி விருது பெற்றவர் என்பது அவர் பெற்ற உயரிய விருது. இந்த ஆண்டு அரங்கியல் நாள் செய்தியை வழங்கப்போகும் ஹெலன் மிர்ரனின் வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கத்தை வெளியிட்டுள்ளது அதற்குப் பொறுப்பான குழு.
பிரிட்டானியாவில் செயல்பட்ட தேசிய இளைஞர் அரங்கத்தில் கிளியோபாட்ராவாக நடிப்பதில் தொடங்கிய அவரது நாடக வாழ்க்கை மான்செஸ்டர் குழுவின் சார்பாளராக மாறினார்.பின்னர் ராயல் ஷேக்ஸ்பியர் நாடக க்குழுவில் நான்கு ஆண்டுகள் நடிகையாகத் தொடர்ந்துள்ளார். அதன் பிறகு புகழ்பெற்ற பீட்டர் புருக்கின் அரங்கியல் ஆய்வு மற்றும் சோதனைக்கூட த்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்நாடகக்குழுவின் ஆப்பிரிக்க, அமெரிக்கப் பயணங்களில் நடிகையாகப் பயணம் செய்துள்ளார். அப்பயணத்திற்குப் பின் வெவ்வேறு நாடுகளிலிருந்து அழைப்புகள் கிடைத்துள்ளன. தி வெஸ்ட் எண்ட், தி ஃப்ரிஞ்ச், ஆர்.எஸ்.சி, நேஷனல் தியேட்டர் ஆகியனவற்றின் அழைப்போடு, அமெரிக்காவின் பிராட்வேயில் ஒருமாதம் தங்கியிருக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்புகளில் வெகுமதிகளும் கிடைத்துள்ளது. டோனி நிறுவன நியமனம், தி டான்ஸ் ஆப் டெத் என்ற மரியாதை போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. அவர் ஏற்று நடித்த குறிப்பிட த்தக்க பாத்திரங்கள் மூலம் ஆலிவர் விருதுக்கான சிறந்த நடிகை என்ற பட்ட த்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார். திரும்பவும் 2009 இல் தேசிய நாடக க்குழுவில் இணைந்து நிக்கோலஸ் ஹைட்னர் உருவாக்கிய ரேசினெவின் பெட்ரா என்ற பாத்திரத்தில் நடித்தார். அந்த மேடை நிகழ்வு பிரிட்டானியாவின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ப்பட்ட முதல் நாடக நிகழ்வு என்பது குறிப்பிட த்தக்கது. கடைசியாக அவர் நடித்த குறிப்பிட த்தக்க பாத்திரமாகச் சொல்லக்கூடிய து 2013 இல் லண்டன் வெஸ்ட் எண்டின் இரண்டாம் எலிசபெத் மகாராணி . ஸ்டீபன் டால்ட்ரி இயக்கிய அந்நாடகத்திற்கு பீட்டர் மார்கன் பார்வையாளராக வந்திருந்தார்.
சிறந்த நடிகை என்பதற்காக ஆலிவர் விருது,டோனி விருது பெற்ற ஹெலன் மிர்ரன் இப்போதும் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று
************************
இந்தக் குறிப்பைத் தருகின்றபோது தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய குறிப்புகளையும் நினைவூட்டுகின்றது முகநூல். அந்நினைவூட்டல்களின் வழியாக நினைவலைகள் 1978 இல் அமெரிக்கன் கல்லூரி மாணவப்பருவத்திற்குச் செல்கிறது. பேராசிரியர் சாமுவேல் சுதானந்தாவின் மாணவனாக அவர் ஒருங்கிணைக்கும் மேடை நிகழ்வுகளுக்குப் பொறுப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். திரைப்பட நடிகர் விவேக்/விவேகானந்தன் அப்போது ஒரு பல்குரல் பேச்சுக்கலைஞன். கல்லூரி மேடைகளிலும் பிறகல்லூரிகளின் போட்டி மேடைகளிலும் சென்று கலந்துகொண்டு கல்லூரிக்காக விருதுகளைப் பெற்றுத்திரும்பிய நாட்கள்.
அப்போது முதல் மேடை நிகழ்வுகளோடு தொடர்பில் இருந்த நான் 1981 இல் நிஜநாடக இயக்கத்தில் சேர்ந்தது தொடங்கிப் பத்தாண்டுகள் மதுரையிலும் அடுத்து எட்டாண்டுகள் புதுவையிலும் நாட கக்காரனாக இயங்கிய காலம். இந்திய அரசின் மாநில, மண்டல, தேசிய விழாக்களின் நாடகங்களில் பங்கேற்றும், பார்வையாளனாக இருந்தும் நாடகக் கலையைக் கற்றுக்கொண்ட காலம் அது.
புதுவை நிகழ்கலைப்பள்ளி 1988 இல் தொடங்கப்பட்ட து என்றாலும் உலக நாடக நாள் நிகழ்வுகளைக் கொண்டாட்டமாக்கிய ஆண்டு 1990 இல் தான்.
சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் முன்னால் உள்ள சாலையை அரங்கவெளியாகப் பயன்படுத்தித் தனிநடிப்பு, நடன நிகழ்வு, குறுநாடகங்கள் என மேடையேற்றியது. நான் எனது பல்லக்குத்தூக்கிகளை அங்கு மாணவர்களை நடிகர்களாக்கி மேடையேற்றினேன். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அங்கு நாடக நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.1997 இல் திருநெல்வேலிக்குத் திரும்பிய பிறகு அரங்கக் கலையின் செயல்பாடுகளிலிருந்து விலகிப் பார்வையாளனாகவும் அது குறித்து எழுதும் எழுத்தாளனாகவும் மாறிப்போன நினைவுகளும் வந்துபோகின்றன.
உலக அரங்கியல் நாள் செய்தியைச் சொல்லப்போகும் ஹெலன் மிர்ரனின் செய்திக்காகக் காத்திருக்கும் அரங்கியல் கலைஞர்கள் அனைவருக்கும் அரங்கியல் நாள் வாழ்த்துகள்
[ கூடுதல் வாசிப்புக்குப் பின்னூட்டப்பதிவுகளுக்குச் செல்லலாம்]
கருத்துகள்