இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அந்த முறை நானும்

படம்
அந்த அழைப்பிதழில் எனது பெயரும் இருந்தது. ‘தாய் மாமன்மார்கள் என்ற பட்டியலில். அந்த உறவின் நேரடி அா்த்தம் எனக்குப் பொருந்தாது என்றாலும். எனது மனைவிக்கு அவா்கள் ரத்த உறவினா்கள் அதனால் அந்தக் குழந்தைகளுக்கு நானும் தாய்மாமன் ஆகி இருந்தேன். அழைப்பிதழில் மதுரைக்கு அருகில் உள்ள பிரபலமான ‘பாண்டி முனியாண்டி கோவிலில்‘ மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெறுவதாக அழைத்தது. அதில் ‘இரட்டைக்கிடாய் வெட்டப்படும்‘ என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கப்படுவதால் இரண்டு கிடாய்கள் வெட்டப்படும் என்பது உடன்குறிப்பு.

வாழ்வின் நாடகம்: திலிப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’

மரபையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்ன? அவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களின் அடையாளங்கள் எவை? எனக்கேட்டால் நம்முன்னே இருப்பவர்களைச் சரியாக இனம் பிரித்துக் காட்டி விடுதல் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தலைமுறைகளின் யுத்தம் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலாய்வு செய்வதற்கான நிதியினை வழங்குவது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு. அதன் நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் பேராசிரியர்களின் திட்டவரைவுகளின் பட்டியலைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தலைப்புகள் எனக்கு மன வேதனை அளித்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலை

கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததால் அதிகம் விவாதிக்கப் பட்ட சில சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது சொந்தக் கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது.