பொதுமனம் முன்வைக்கும் பெரும்பான்மைவாதம்
இந்தியப் பெரும்பான்மை வாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்கமனப்பான்மைக்குள் கொண்டுவரும்வேலையை ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.