இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அத்தப்பூக்கோலமும் செண்டெ மேளத்தாளக்கட்டும் : முரண்நிலைக் காட்சி அழகியல்

படம்
  கேரளத்துச் செண்டெ மேளத்தைத் தள்ளிவைக்காமல் ஏற்றுக்கொண்ட தமிழ்த் திரள் உளவியலின் நீட்சியாக ஓணம் பண்டிகையும் மாறிக் கொண்டிருக்கிறது  என்பதை இந்த வருட ஓணம் பண்டிகைப் பதிவுகள் காட்டுகின்றன. செண்டெ மேளம் வன்மையின் முரண்நிலை ஈர்ப்பு என்றால் ஓணத்தின் மீதான ஈர்ப்பு மென்மையின் முரண்நிலை மோகம் .

தொலையாமல் அலைதல்- ஒட்டாவாவின் குறுக்கும் நெடுக்கும்

படம்
பூக்கும் தருணங்கள் தொடங்கிவிட்டன கனடாவுக்குள் சரியாக 30 நாட்கள் இருந்தேன். அமெரிக்காவின் நியுயார்க் மாநிலம் பப்பல்லோ விமான நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாக ஒட்டாவா நகருக்குப் போனேன். போகும் பாதையெங்கும் வயல்களும் தோட்டங்களும் வனங்களும் நீர்ப்பரப்புகளுமே கண்ணை நிரப்பின. போகும் பாதையில் நிரம்பிய பச்சையம் மொத்தப் பயணத்திலும் கூடவே இருந்துவிட்ட தாகத் தோன்றுகிறது. ஒருவேளை ஒட்டாவாவுக்குப் பதிலாக டொரண்டோவில் இறங்கியிருந்தால், இப்படித் தோன்றியிருக்காதோ என்று மனம் நினைக்கிறது. வானுயர்ந்து நின்றிருக்கும் கட்டடங்களே மனதை முதலில் ஆக்கிரமித்திருக்கும். பேரங்காடிகள், காட்சிக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலையின் பரப்புகள், போக்குவரத்துகள், கார்கள், டிராம்கள் என நவீனத்துவ அடையாளங்கள் பிடித்துக்கொண்டிருக்கும்.

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.

படம்
ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும்  எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல். 

திறனறிந்து திறன் வளர்க்கும் கல்விக்கூடங்கள்

படம்
கோடைவிடுமுறைக்குப் பின் மூத்த பேரன் (மகள் வழி) ஹர்ஷித் நந்தாவுக்கு வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நானும் சில நாட்களில் எனது காலை நடையாகப் பள்ளிக்குப் போய்த் திரும்பினேன். அப்போது அங்கே மைதானத்தில் இசைக்குழுவிற்கான பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அதில் அவனும் ஓர் உறுப்பினர்.

சேரனோடு இரண்டு நாட்கள்

படம்
பெரு நகரத்தின் நடுவில் ஒரு சிற்றங்காடிக் கூடங்கள் நேற்றும் இன்றும் நண்பர் கவி.சேரனோடு இருக்கிறேன். அவரது குடியிருப்பு டொரண்டோ நகரின் மையப்பகுதியான டென்சன் அவென்யூ. வானைத் தொடும் பல்லடுக்குக் கோபுரங்களாக நிற்கும் கட்டடங்களுக்குள் நிற்கும் வரிசை வீடுகளில் ஒன்று அவரது வீடு. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு பூங்கா இருக்கிறது. அதன் ஒரு மூலையில் தொடங்கி அங்காடித்தெரு தொடங்குகிறது. ஒவ்வொரு அங்காடியிலும் ஒரு வகைச் சாமான்கள் மட்டுமே விற்கும் கடைகள் இருக்கின்றன. மசாலா சாமான்கள் என்றால் எல்லாவகைப் பொருட்களையும் விற்கும் விதமாக ஒரு கடை. காய்கறிகள் என்றால் அதற்கு மட்டுமே ஒரு கடை. மீன் வெட்டித்தரும் தனிக்கடை. இப்படி துணிக்கடை, காலை உணவு மட்டும் தரும் உணவகம், மதிய உணவு, இரவு உணவுக்கெனத் தனிக்கடைகள். பல் பொருள் அங்காடி என்ற நிலைபாட்டுக்கெதிராகத் தனித்தனி அங்காடிகள். அந்த அங்காடிகளில் உலகின் பலநாட்டுச் சிறு வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்திய உணவுவிடுதியும் இருக்கிறது. ஈழத்தமிழர்களும் கடையை வாங்கி நட த்துகிறார். காலாற நடந்து காய்கறிகளை வாங்கிவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பினோம்.   இரண்டு

டொரண்டோ: போனதும் வந்ததும் சந்தித்தவர்களும்

படம்
  ஒட்டாவா> டொரண்டா < ஒட்டாவா டொரண்டாவில் 5 நாட்கள் இருப்பதற்கான பயணத்திட்டத்தில் போகும்போது பேருந்துப்பயணம் ; வரும்போது இருப்பூர்திப் பயணம் என்பது முன்பே முடிவான . இரண்டு பயணமுறைகளிலும் பயண நேரத்தில் பெரிய கால வேறுபாடு இல்லை. பேருந்துப் பயண நேரம் 5 மணி 5 நேரம் . ரயிலில் 30 நிமிடங்கள் குறைவு. ஒட்டாவாவிலிருந்து காலை 7 மணிக்குக் கிளம்பும் பேருந்து பகல் 12 மணிக்குப் போய்ச்சேர்கிறது. நான் ஒட்டாவாவின் இரண்டாவது நிறுத்தத்தில் ஏறி, டொரண்டோவில் கடைசி நிறுத்தத்திற்கு முந்திய ஸ்கார்புரோவில் இறங்க வேண்டியவன். அதனால் எனது பயண நேரம் 4 மணி 30 நிமிடம்தான்

மத்தகம்: தொழில்முறைத் திறன்களின் வெளிப்பாடு

படம்
காண்பிய வரிசைத்தொடராக (டெலி சீரியல்) ஹாட்ஸ்டாரில் வந்துள்ள மத்தகம் முதல் பாதியை இரண்டு தவணைகளில் பார்த்து முடித்தேன். மூன்றுமணி நேரம் ஓடும் சினிமாவில் இடைவேளை முடிந்தவுடன் திரும்பவும் அரங்கத்தில் நமக்கான இருக்கையில் அமரவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் நேற்றும் இன்றுமாகப் பார்க்கமுடிந்தது. ஐந்து பகுதிகள் பார்த்து முடித்தபின்னும் பாதிதான் முடிந்துள்ளது என்பதுபோல நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு பாதி சில காலம் கழித்து வரக்கூடும்.

எதிர்பாராத சந்திப்புகளும் நிகழ்வுகளும் -அமெரிக்கா

படம்
மூன்றுமாதப் பயணம் என முடிவானபோது பெரும்பாலும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டன. அமெரிக்காவில் ஜூன் மாதம் இருப்பது என்றும் ஜூலையில் கனடாவிற்குப் போய்விட்டுத் திரும்பவும் ஆகஸ்டு முதல் வாரம் திரும்பிவிடுவது என்றும் திட்டம். அமெரிக்காவில் இருக்கும் சில நண்பர்கள் இந்த ஆண்டும் பெட்னா நிகழ்வுக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் 2016 நியூஜெர்சியில் நடந்தபோது கலந்துகொண்ட நிலையில் திரும்பவும் அழைப்புக் கிடைக்காது என்று அதே தேதியில் வேறு இடத்தில் குடும்பத்தினரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

பரப்பிக் கிடக்கும் நூலகங்கள்

படம்
என்னைப்போலவே ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் ‘ ஒரு ஊருக்குப் போய்த் தங்கவேண்டுமென்றால், முதலில் சென்று சில மணி நேரங்களை அருங்காட்சியகங்களில் செலவழிக்க வேண்டும்’ என்பார். ஆனால் நான் புதிய இடம் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேல் தங்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் திரை அரங்குகள் எங்கே இருக்கிறது? எனக் கேட்டுக்கொள்வதைப் போலவே, பத்திரிகைகள் விற்கும் கடை எங்கே இருக்கிறது? என்று தெரிந்துகொள்வேன். அதேபோல் பொது நூலகம் எங்குள்ளது என்றும் கேட்டுக்கொள்வது வழக்கம்.

பேரங்காடிகளும் சிற்றங்காடிகளும்

படம்
இந்திய நகரங்கள் பலவற்றில் இன்றும் கூட வீட்டுக்குப் பக்கமாக வரும் தள்ளுவண்டிகளையும்  பழவண்டிகளையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் தான் அதிகம். கோவை மாநகரத்தில் நான்கு தளக்கட்டடத்தில் குடியிருக்கும் எங்களுக்குத் தேவையான கீரை வகைகளையும் காய்கறிகளையும் வாரம் ஒருமுறை கொண்டுவரும் காய்கறி வண்டி ஒருமணி நேரம் நின்று விற்பனை செய்துவிட்டுத்தான் போகும்.   எனது பாண்டிச்சேரி வாழ்க்கையிலும் நெல்லை, மதுரை வாழ்க்கையிலும் பலசரக்குச் சாமான்களுக்கு மட்டுமே அங்காடிகள் செல்லும் வழக்கம் இருந்தது.  வீடுதேடி வரும் மீன்காரர்களிடம் வாங்கும் மீன்கள் பழைய மீன்களாக இருக்குமோ என்று அச்சமில்லாமல் வாங்கலாம். மீன் சந்தையில் விற்கும் மீன்கள் குளிர்சாதனப் பெட்டிகள் வைத்து எடுக்கும் வசதிகளோடு இருக்கும். ஆனால் மிதிவண்டியிலும் இருசக்கர வாகனத்திலும் வருபவர்கள் அன்றாடம் வாங்கி விற்பனை செய்பவர்கள்.  மேற்கு நாடுகளில் வீடு தேடிவரும் அங்காடிகள் என்ற எண்ணமே இல்லை, ஒவ்வொன்றுக்கும் தரம், பாதுகாப்பு ரசீதுபோடுதல் என்பது முக்கியம் என்பதால் அங்காடிகளுக்குப் போய் பொருட்கள் வாங்குவதே நடக்கிறது 

வேளாண்மை: இந்தியாவும் கனடாவும்

படம்
இந்திய விவசாயத்தின் பெருங்குறை நானொரு சிறுவிவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவன். எங்கள் விவசாயம் நஷ்டமான விவசாயமாக இருந்ததற்கு முதல் காரணம் விளைச்சலைச் சேமித்து வைக்கக் கொள்கலன் எதுவும் இருக்கவில்லை என்பதே. நான் ஆரம்பப்பள்ளியை முடித்தபோது வீட்டின் உறுப்பினர்கள் 10 பேர். பத்துப் பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வீட்டில் இடம் இருந்ததில்லை. பெரும்பாலும் வீட்டிற்கு முன்னால் இருக்கும் திண்ணையிலும் தொம்பரைக் கற்களிலும் தான் அமர்ந்து சாப்பிடுவோம்.ஆனால் தோட்ட விவசாயமும் காட்டு விவசாயமும் இருந்தது. 60 மூடை நெல்லும் 25 மூடை நிலக்கடலையும் ஒரே நேரத்தில் அறுவடை செய்தார்கள். அதனை எல்லாம் களத்து மேட்டிலிருந்தே விற்பனைக்குக் கொண்டுபோவார்கள். அல்லது வியாபாரிகள் வந்து வாங்கிப் போய்விடுவார்கள்.

ஒட்டாவா என்னும் ஆற்றங்கரை நகரம்

படம்
ஒட்டாவா: இடையில் ஓடும் ஆறு நகர நாகரிகம் ஆற்றுப்படுகைகளில் உருவானதாக வரலாறு சொல்கிறது. இந்திய ஆறுகளின் பெருக்கத்தால் உருவான வேளாண்மைச்சமூகம் அதன் கரைகளில் பெருநகரங்களை உருவாக்கியிருப்பதைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். மதுரையின் கரையில் இப்போதிருக்கும் மதுரைக்கும் முன்னால் நதிக்கரையோர நகரமாகக் கீழடி இருந்திருக்கலாம் எனப் புதிய தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் புத்துலகங்களான அமெரிக்காவும் கனடாவும் ஓடும் ஆறுகளின் பெயர்களிலேயே நகரங்களை உருவாக்கியுள்ளன. அதிலும் வேளாண்மை நாடான கனடா ஆறுகளின் பெயரிலும் ஏரிகளின் பெயரிலும் பெருநகரங்களைக் கொண்டிருக்கிறது.

கனட்டாவில் முதல் வாரம்

படம்
நீளும் வாரக்கடைசிப் பயணமாக அமெரிக்காவின் 3 மாநிலங்களில் சுற்றி விட்டுக் கனடாவின் ஒட்டாவா நகருக்கு வந்தாகிவிட்டது. மூன்று நாட்கள் ஓய்வாக நகர்ந்துள்ளன. மகன் ராகுலனின் வீடிருக்கும் பகுதி கனாட்டா ஒட்டாவாவின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதி. வரிசைவீடுகள் அதிகம். முக்கியமான தகவல் தொழில்நுட்பக்கூடங்கள் இங்கேதான் இருக்கின்றன.

விடுதலையின் கதையைத் தொடங்கும் பிலடெல்பியா..

படம்
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரைப் பார்க்கும் திட்டம் எனது பயணத்திட்டத்தில் இல்லை. எதிர்பாராது நடந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கனடாவில் ஒருமாதம் இருந்தபின்பு திரும்பவும் டல்லாஸ் வரவேண்டும். டல்லாஸுக்கு ஒட்டாவாவிலிருந்து நேரடியாக விமானம் இல்லை. அங்கிருந்து டொரண்டோவுக்கோ, மாண்ட்ரியாலுக்கோ போய் விமானம் ஏறவேண்டும். ஒட்டாவிலிருந்து ஒரு உள்நாட்டு விமானம் ஏறித் திரும்ப அமெரிக்காவிற்குள் நுழையும் பன்னாட்டு விமான சேவையைப் பெறவேண்டும். முதலில் போட்ட திட்டப்படி மாண்ட்ரியாலுக்குக் காரில் போய் அங்கிருந்து விமானமேறி டல்லாஸ் போகும்படியாக பயணச்சீட்டுப் போட்டிருந்தோம். ஏற்கெனவே மாண்ட்ரியால் பார்த்துவிட்ட நிலையில் புதியதொரு ஊரைப் பார்த்துவிட்டு அனுப்பிவைக்கலாம் என்று மகன் நினைத்தார்.

குடும்பச்சுமைகள்

படம்
அந்த விமானப் பயணத்தில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது. ஒருவரிசைக்குப் பத்துப் பேர் வீதம் அமரும் அகலமான விமானம். அதேபோல் 100 க்கும் அதிகமான வரிசைகள் இருந்தன. சாதாரணக்கட்டண இருக்கையில் முதல் வரிசை. எனக்கும் மனைவிக்கும் வலது ஓரத்தில் இரண்டு இடங்கள்.அந்த இடங்களுக்கான குறிப்பெண். 15/I,15/J.

நாங்குநேரி - ஆறாவடுவாகும்

கீழ்வெண்மணி நிகழ்வைக் கவிதையாக்கிய இன்குலாப் ‘இந்த மாதிரிக் கொடுமைகள் இங்கு எங்கும் நடக்கிறது; இன்றும் நடக்கிறது; இதனை யார்வந்து கேட்கிறது” எனத் தனது கையறுநிலையை ஆவேசமாக ஆக்கியிருப்பார். அரசுதான் கேட்கவேண்டும். அரசுதான் தண்டனை தரவேண்டும்.

போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் தங்கமீன்

படம்
சால்ட் பதிப்பக வெளியீடாக வந்த விஜயராவணனின் நிழற்காடு தொகுப்பிற்குப்பின் மூன்று கதைகளை வாசித்துள்ளேன். மூன்றும் இணைய இதழ்களில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டவை. இம்மூன்று கதைகளுமே அவரது கதைத்தொகுப்பில் உள்ள கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளாக இருக்கின்றன. கதைக்கான பொருண்மையைத் தேர்வுசெய்வதிலும், அதனைச் சொல்வதற்குத் தெரிவுசெய்யும் சொல்முறைமையிலும் தலைப்பிடுதலும் புதியனவாக இருக்கவேண்டும் என்று மெனக்கிட்டு எழுதுகிறார் என்பதைக் காணமுடிகிறது. இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள ‘தங்கமீன்’ கதை எழுப்பும் விசாரணைக்காகவும், அவ்விசாரணையின் உள்ளார்ந்த கவனத்தை வாசிப்பவர்களுக்குக் கடத்துவதற்காக அவர் தேர்வு செய்துள்ள சொல்முறைமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.