இடுகைகள்

ஜூன், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்

படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும்

தீர்க்கவாசகன் கவிதைகள்-2

கறுப்பின் பயணம்

தற்காலிக விளையாட்டுகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.

மணிரத்னம் : கருத்தியல்களைக் கலையாக்கும் படைப்பாளி

படம்
மணிரத்னம் தமிழ்ச் சினிமாவில் தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ள இயக்குநர்களில் ஒருவர். 1983 தொடங்கி 2007 வரையுள்ள 24 வருடங்களில் 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார் . பல்லவி அனுபல்லவி (1983) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 1987- எடுத்த நாயகன் படத்தின் மூலம் இந்திய இயக்குநராக உருமாற்றம் அடைந்தவர். 1994- இல் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் அவரது இயக்கத்தில் வந்த படங்களின் தொகுப்பு பார்வையாளர் களுக்குக் காட்டப்பட்டது மூலம் உலகத் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர். இந்தக் கட்டுரை மணிரத்னத்தின் கருத்தியல் சார்ந்த பயணத்தைக் கோடிட்டுக் காட்டுவதோடு, கடைசியாக வந்த குரு படத்தின் வழி அவரது கலைக் கோட்பாடு எத்தகையது என விவாதிக்கிறது

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்

இந்திய நாட்டின் சமூகவியலை ஆய்வு செய்த அறிஞர்களில் அயல் தேசத்து ஆய்வாளர்களும் உண்டு; இந்திய நாட்டின் அறிஞர்களும் உண்டு. இருவகைப்பட்ட ஆய்வாளர்களும் அதன் சிறப்புக்கூறாகவும், மாறாத இயல்பாகவும் குறிப்பிட்டுச் சொல்லும் கருத்தியல் ஒன்று உள்ளது. அது கருத்தியலா? செயல்தளமா ? என்பதைப் பற்றிய விவாதங்களும் அவர்களிடத்தில் உண்டு. தொடர்ந்து சமூகவியலாளர்களால் விவாதிக்கப்படும் அது இந்தியாவின் சாதி அமைப்புத் தான். ஒருவித கூம்பு வடிவத்தில்- எகிப்தின் பண்டைய பிரமிடு வடிவத்தில் -அதன் அமைப்பு உள்ளது எனப் படம் போட்டுக் காட்டும் ஆய்வாளர்கள், கூம்பின் உச்சி முனையாக இருப்பவர்கள் பிராமணர்கள் எனவும், அடித்தளமாக இருப்பவர்கள் சூத்திரர்கள் எனவும் கூறுகின்றனர்.

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

படம்
இலக்கியம் பற்றிய- இலக்கிய வரலாறு பற்றிய இலக்கியத்தின் அடிப்படைக் கச்சாப்பொருட்கள் பற்றிய மேற்குலகப் பார்வைகளிலும், கிழக்குலகப் பார்வைகளிலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஓர் இலக்கியப் பனுவலை அதன் இயல்பைக் கவனித்து அப்படைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்குக்குள் அடங்கக்கூடியது எனப் பேசுவது கீழ்த்திசை மரபல்ல; ஒருவிதத்தில் மேற்கத்தியத் திறனாய்வு மரபின் வழிப்பட்டது. மேற்கத்தியத்திறனாய்வு மரபு கலை , இலக்கியப்படைப்புகளை வகைப்படுத்திப் பேசும் பொருட்டு சில போக்குகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது.

பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும்

படம்
இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுப்பத்தைந்து வயதைத் தாண்டிய பலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் இருக்கக் கூடும். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறை யாகவோ,எதிர்மறையாகவோ தங்களுக்குள் உள்வாங்கியவர்களாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி நிற்கிறது என்பது நிகழ்கால இருப்பு.