ஜனவரி 29, 2022

தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை


அரசவிருதுகளும் கலைஞர்களும்

கலை இலக்கியங்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் ஒன்றிய அரசின் அகாதெமிகளான சாகித்திய, சங்கீத, லலித் கலா அகாடெமிகள் முறையே எழுத்துக் கலைகள், நிகழ்த்துக்கலைகள், நுண்கலைகள் போன்றவற்றிற்கும் அவற்றை உருவாக்கிச் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. இம்மூன்று அமைப்புகளில் எழுத்துக் கலைக்கு விருது வழங்கும் சாகித்திய அகாதெமி மட்டுமே மொழி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு விருதினை வழங்குகிறது.

ஜனவரி 06, 2022

நூல் அறிமுகத்தின் மாதிரிகள்


இம்மாத காக்கைச்சிறகினிலே இதழ் பொங்கல் சிறப்பிதழாக அச்சிட்டு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல், புத்தாண்டு, தமிழர் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் தொடர்புடைய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகளை அதிகம் வெளியிட்டுள்ள இச்சிறப்பிதழில் கவனத்திற்குரிய இரண்டு நூல் அறிமுகங்கள் இடம்பிடித்துள்ளன.

ஜனவரி 05, 2022

வரையப்பட்ட பெண்கள்

டிக்டேக், ரீல்ஸ் போன்ற சின்னச் சின்னக் காணொளிக் காட்சிகளில் பெண்களின் உடல் முழுமையாகவும், நளினமான வளைவுகள் என நம்பும் பகுதிகளும் முன்வைக்கப்படுகின்றன. உடலின் ரகசியங்களை முன்வைப்பதின் நோக்கங்களைக் காமத்தின் பகுதியாக நினைக்கும் பார்வைக்கு மாறாக உடலரசியலின் தெரிவாகச் சொல்லும் சொல்லாடல்களும் உண்டு. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றினிடையே வரிசை கட்டும் பெண்களின் உடல்கள் தரும்

ஜனவரி 03, 2022

அலைகளைக் கடந்து...


ஒமிக்ரான் அலையாக மாறியுள்ள மூன்றாவது அலைக்கு முதல் அலையில் இருந்ததுபோல அடங்கி இருப்பது என்று முடிவு . முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட அச்ச உணர்வும் பீதியும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டது. வீட்டு மாடியில் தான் ஒருமணி நேரம் நடை. வாரம் ஒருமுறை தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் கடைகளுக்குப் போய் வந்ததைத் தவிர வெளியேற்றமே கிடையாது. 

ஜனவரி 01, 2022

2021 - இது தோல்வியின் கதை


டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 4.35 -க்கு அழைத்த தொலைபேசி 11-12-2021 பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநரைச் சந்திக்க வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான கலந்துரையாடல் இது எனச் சொல்லிவிட்டு வைத்துவிட்டது. அழைத்தவர் ஆளுநரின் தனிச் செயலக அதிகாரி என்று சொன்னார். கூடுதல் தகவல்களைக் கேட்க நினைத்துத் தொடர்ந்த நிலையில் வைத்துவிட்டார்.

வெளிகடக்கும் மணவாழ்க்கைகள்படிப்பதற்காக, வேலை பார்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ள இந்திய ஆண்களில் சிலர் அந்தந்த தேசங்களின் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு இருக்கின்றனர்.போலந்துக்கு வந்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரண்டு மாதத்தில் நான்கு இந்தியர்களை – போலந்துப் பெண்ணை மணந்து கொண்டு இங்கு தங்கியிருக்கும் – இந்தியர்களைச் சந்தித்து விட்டேன். அந்நால்வரில் இருவர் தமிழர்கள். அவர்கள் ஐரோப்பாவில் நிரந்தரமாகத் தங்கிவிட இந்தத் திருமணங்கள் உதவும் என்ற குறுகிய லாபம் பின்னணியில் இருந்தாலும், அதற்காகத் தனது அந்தரங்க வாழ்வையும் நீண்ட காலத்தையும் கொடுக்கத் தயாராகும் மனநிலையைச் சுலபமாக ஒதுக்கிவிட முடியாது.